Thursday, December 7, 2023

காலனும் காலமும்

 விக்கிரமாதித்யன் காலத்திலேயே உஜ்ஜைன் பல்கலைகழகத்தில் பிரம்ம குப்தர். பூஜியத்தை கணிதவியலில் சேர்த்தார். ஆரியபட்டரும், பாஸ்கர பட்டாசாரியரும் லீலாவதி கணிதம் போன்ற முக்கிய கணித நூல்களை எழுதினர். பாரத்தில் சூரியன் முதலில் உதிக்கும் இடத்தை அருணாசல பிரதேசம் எனவும் மறையும் இடத்தை அஸ்தாசலம் என்றும் கூறினர். ( இன்று மேற்கு ஆப்கானிஸ்தானுக்கும் கிழக்கு ஈரானுக்கும் நடு பகுதி). விக்ரமாதித்தன் தன் பெயரால் விக்ரம ஆண்டு(era)துவங்கினான். அவருக்கு பின் வந்த சாலிவாகன்ன் தன் பெயரால் சாலிவாகன சகாப்தம் என்ற காலளவை( calendar ) த்தொடங்கியது. இருவரும் உஜ்ஜைனின் சக்கரவர்ததி கள். இதற்கும் முன் கால அளவு இருந்ததுதானே! காலேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் உஜ்ஜெய் பூமியின் தொப்புளாகவும் இங்குதான் செவ்வாய் கிரகம் உண்டானதாகவும் கருதப்படுகிறது. 

காலனுக்கும் காலன் மகாகாளேஸ்வர் என்பதை உணர்த்தும் கதைதான் மார்கண்டேன் கதையோ!

பிரம்மமே ஓர் உருவிலிருந்து மூவுருவாகி படைத்தல் காத்தல் அழித்தல் செய்வித்தது. படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மா. இந்த பூமியை படைத்தவர் பிரம்மாதான் சூரியனையும் மற்ற கிரகங்களையும் படைத்தார்.

நமது காலஅளவுகள் எந்த மஹானின் பிறந்த நாளையோ மற்ற சம்பவங்களை கொள்ளாமல் காலத்தின் அடிப்படையில் கிரகங்களில் இயக்கங்களின் அடிப்படையில் உண்டாகப்பட்டது. இதன் படி பூமியின்  வாழ்நாள் 432 கோடி ஆண்டுகள். இதுவே ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம். இப்படி ஆயிரம் மகாயுகம் பிரம்மாவின் பகல். இது போல் ஆயிரம் மகாயுகம் ஒரு இரவு. இதில் பகலில் படைப்பும். இரவில் படைப்பு அடங்கும் பிரளயமும் ஏற்படும்.இப்படி 365 நாட்கள் ஒரு வருடமும் 100 வருடம் அவர் ஆயுட்காலம்.(864x 365x100). அதன் பிறகு படைப்பு இல்லாமல் சகல கிரகங்களும் பிரபஞ்சமும் இல்லாமல் போகும். பிரம்மம் மட்டும் இருக்கும். அவர்தான் மஹாகாலேஷ்வரோ!

மீண்டும் பிரம்மம் மூவுரு கொண்டு புதிய பிரம்மாவைக் கொண்டு படைப்பு தொடங்கும்.

எனவே புணரபி ஜன்னம் புரணபி மரணம் என்பது சூரிய சந்திர கிரகங்களுக்கும் நம்மை படைக்கும் பிரம்மாவிற்கும் உண்டுதானே!!!!!

கடைசியாக துஷ்யந் ஶ்ரீதர் சொன்ன ஒரு குட்டி கதை.

ராமர் திரும்பி வைகுண்டம் செல்லும் முன் அனுமானிடம் ஒரு கணையாழியை கொடுத்தார். அதை வாங்கி கண்ணில் ஒற்றியதும் உருண்டு ஒரு பிளவிற்குள் சென்று மறைந்தது. ராமர் வருந்தாதே அது பாதாளலோகத்தில் மஹா பலியிடம்தான் உள்ளது, சென்று பெற்றுக் கொள் என்றார். அனுமனும் ்அங்கு சென்று  மஹாபலியிடம் மோதிரத்தைப் பற்றி கேட்டார். ஆம். அது இங்குதான் இருக்கிறது என ஓர் அறையின் கதவை திறந்து உன்னுடையதை எடுத்துக்கொள் என்றார். அறையின் உள்ளே மோதிரங்கள் மலைபோல் குவிந்திருந்தன! வியந்து அனுமான் மஹாபலியை பார்க்க, அவர் ஒவ்வொரு ராமவதாரம் முடியும்போதும் உனக்கு கொடுத்து போல் ராமர் அனுமாருக்கு கொடுப்பார். அவை யாவும் உன்னுடையது போல் உருண்டு இங்குதான் வரும் என்றாராம். எத்தனையோ மொழிகளில் ராமாயணம் போல் ஒவ்வொரு திரேதா யுகத்திலும் ஒரு ராமவதாரம் உண்டல்லவா😁

 காது

செவிச் செல்வம்

நம்ம நாட்டுல பிறந்த குழந்தைக்கு ஆண் பெண் யாராக இருந்தாலும் முக்கியமான முதல்சடங்கு அல்லது விழா காது குத்து கல்யாணம் என்கிற காதணி விழா தான். எல்லா குலத்திலும் எல்லா தட்டு மக்களும் இமயமுதல் குமரி வரை ( இந்து மக்கள்) அந்த விழா உண்டு.

ஆனால் தன்னை ஏமாற்றுகிறாயா என்பதற்கு பாமரனும் கேட்பது “ என்ன காது குத்தறையா? “ என்பதுதானே! அதனால் தானோ என்னவோ பல பெண்கள் மற்றவர்கள் தனக்கு காது குத்த இடமில்லாமல் இடம் கொடுக்காமல் தானே காது முழுக்க நிறைய குத்தி விதவிதமா தோடு போட்டுக் கொள்கிறார்களோ!!🤪

என்னவோப்பா ஒன்னும்புரியல?

குழந்தைக்கு காது குத்தி, மொட்டைபோட்ட குழந்தைக்கு கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் பூவையோ துளசியையோ காதுலதானே வைப்போம்! பெரியவர்கள்கூட முன்புகோவிலில் கொடுத்த பூவையோ துளசியையோ காதிலேதானே வச்சிகிட்டாங்க!

இப்போ என்னவோ இதற்கு அர்த்தம் மாறி போச்சு. ஏமாத்த பாக்கறத்துக்கு பூ வைப்பதாச்சு.”

“ஏமாந்தா பூ என்ன பூந்தோட்டமே காதுல வைப்பாங்க” அப்படீங்கறாங்க!💐

என்னவோப்பா ஒன்னும் புரில.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்தியெல்லாம் தலை

வள்ளுவர் குறளை சொல்பவர்கள் ஏன் எதிர்மறை சொல்லுக்கு “காது” சேர்கறாங்கனு புரியல. உதாரணத்திற்கு

பார்க்’காது’,  போ’ காது”,  கொடுக்”காது “,மயங்”காது”. என்னமோ போங்க ஒண்ணும் புரியல.😧

காதுங்கறது கேட்க மட்டுந்தானா?  விதவிதமா தோடு,ஜிமிக்கி, தொங்கட்டான், வலையம் போட்டு அழகு பார்க்கவும் தான். அப்பறம் தோடு, ஜிமிக்கி எடைதாங்காம தொங்காம  மாட்ட மாட்டலும் காதில்தான். இதுமட்டுமா மூக்கு கண்ணாடி(கண்ணுக்குதான் என்றாலும்) மாட்டுவதென்னவோ காதில்தான். “கே” என்ற இனிசியல் போட்ட காது கார்ர்கள்(கே.காது) காது கருவி hearing aid மாட்டுவதும் இதில்தானே. கொரானா காலத்தின் கொடை முக கவசம் mask க்கும் அடைகலம் காதுதான். 😷எத்தனைதான் தாங்கும். 

சில வருடங்கள் முன் ஒரு Phillips விளம்பரம். சத்தமே இல்லாமல் ஒரு பெண் ஆடுவாள். முடித்த பின் காதிலிருந்து ஒரு சின்னகருவியை எடுப்பாள். அதன் வழியே கேட்ட இசைக்கு ஆடினாளாம். விளம்பரத்திற்காக எப்படிலாம் காதுல பூ சுத்தறானு நெனச்சேன்.. அப்பறந்தான் அது பேர் நீல பல்(blue tooth)னு சொன்னாங்க. இப்ப யாரப்பாத்தாலும் அத தான் மாட்டிகிட்டு பஸ்ஸிலோ, ரயிலிலோ அவரவர் தனி உலகத்தில இருக்காங்க. 🤔

என்னவோப்பா ஒண்ணு புரியல.😲

வீட்டிலயும் இதுமாதிரி ஒன்னு தலை பேசி(head phone) மாட்டிகிட்டு காரிய செவுடா இருக்குங்க. எது சொன்னாலும் காதில் ஏறாது.

இத எந்நேரமும் மாட்டிகிட்டு இருந்து செல்வத்துள் செல்வம் செவி செல்வத்தை வரும் தலைமுறையினர் தொலைத்து விடுவார்களோனு கவலையா சங்கடமா இருக்கு.

என்னோப்பா ஒன்னும் புரியல.🙄

              ஆனந்தி




Tuesday, May 17, 2016

Friday, April 15, 2016

கடிகை

கி..பி. நாலாம் நூற்றாண்டில் ஷிமோகா பகுதியை சேர்ந்த மயூர வர்மன் என்ற அரசன் தன் குருவுடன் காஞ்சி வந்து அப்போது காஞ்சியை ஆண்ட ஸ்கந்த சிஷ்யன் என்ற மன்னன் இன்னொரு ஸத்ய சேனனை "அசோக சாசனம் சொல்லும் ஸத்ய புத்த அரசர்களில் ஒருவன்" வென்று அவனிடமிருந்து ஒரு கடிகையை கைப்பற்றியதாக வேலூர்பாளைய சாசனம் கூறுகிறது. நரசிம்ம வர்மன் காஞ்சியில் கைலாசநாதர் கோயில் கட்டியதோடு முன்பிருந்த சிதலமான கடிகைகளை புதுபித்தான்.பல்ல வம்ச சந்ததி இல்லாது இருந்த போது அதன் கிளை வம்சத்து குறு மன்னன் ஹிரண்ய வர்மாவின் மகன் பரமேஸ்வர வர்மனை அரசனாக்கி மகுடாபிஷேகம் செய்தவர்கள் காஞ்சி கடிகையில் ஆசிரியராக இருந்தனர். திருவல்லம் கல்வெட்டு  ஒன்று கடிகையில் ஏழாயிரம் பேர் படித்ததாக கூறுகிறது.மூவாயிரம் பேர், ஆயிரம் பேர் உள்ள கடிகைகள் இருந்ததற்கு கல்வெட்டு உண்டு.இவர்கள் சதுர வேத பண்டிதர்களாகவும் தர்ம கர்மங்களில் சிறந்தவர்களாகவும் இருந்தனர்

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தெலுங்கு தேசத்தில் 11,12நூற்றாண்டில் ஹெஞ்சாரப்பட்டணத்தில் கடிகைகள் கட்டப்பட்டன.நலாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை பல கடிகைகளில் வேத சாஸ்திரங்கள் கற்று தரபட்டது. இக்கடிகையில் படிக்கும்  மாணவர்களுக்கு பரிட்சையின் போது
(உதாரணத்திற்கு ) இராமயணத்தில் பாலகாண்டத்தில் மூன்றாம் சர்கம் ஐந்தாவது ஸ்லோகத்தை கூறுவதாக இருந்தால் 1-3-5 என்று சங்கேதமாக பனை ஓலைகளில் எழுதி அதை பனையில் போட்டு எந்த ஓலையை மாணாக்கன் எடுக்கிறானோ அதில் உள்ள சங்கேத எண்ணிறகு ஏற்ப பதில் சொல்ல வேண்டும். வேதவேதங்களில் இப்படி பரிஷை செய்ததால் இப்பல்கலைகழகங்களுக்கு கடிகை என்று பெயர் வந்தது.கடிகை என்றால் குடம். பாஹூரில் சதுர்தச வித்யை கற்பிக்க எஎஎஎஎஎஎஎஎ உள்ள பெரிய வித்யாஸ்தானம் இருந்தது. பாகூருக்குப் பக்கத்தில் திரிபுவனம் என்ற ஊரில் நான்கு வேதங்களை தவிர வேந்தாந்தம்,ரூபாவதாரம் என்ற அபூர்வ வியாகரண சாஸ்திரத்தில் எஎஎஎஎ பண்ணியதாக கல்வெட்டுஉள்ளது. ராமாயணம்., மஹாபாரதம், மனு சாஸ்திரமும் கறறு தரப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் பராந்தக சோழன், ராஜராஜன்., ராஜேந்திரன் சோழர்கள் பெரிய கோயில்களைக் கட்டினார்கள்.அந்த கோயில்களிலேயே வியாகரணதான மண்டபங்கள் கட்டி இலக்கண வகுப்புக்கள் நடந்தன.தஞ்சாவூர், சிதம்பரம் முதலிய பெரிய கோயில்களில் வெளிமதிலை ஒட்டி கோயிலின் உட்புரத்தில் இரண்டுஅடுக்குகளில் திருசுற்று மாளிை அமைத்து வித்யாசாலைகள் நடந்தன.இதோடு எஎஎஎபோன்ற சரஸ்வதி பண்டாரம் திருசுற்று மாளிகையில் இடம்பெற்றிருந்தது.இவற்றில் நூல் சுவடிகளை சேகரித்தல், பிரதிகள் எடுத்து பத்திரமாக பாதுகாத்து ஆசிரியர் மாணவர்களுக்கு கொடுத்து வந்தனர்.  இங்கு சமயகல்வி மடடுமின்றி பொதுகல்வி, ஆயுர்வேதம் முதலியவை கற்றுதரப்பட்டது.

Sunday, April 10, 2016

15ம் நூற்றாண்டில் தமிழகம்



விஜயநகரின் மகாமண்டலேஸ்வரராக தமிழகத்தில் திருமலை தேவமகாராஜன் ஆண்டான். பட்டீஸ்வரம்,சத்திமுற்றம் கோபிநாத பெருமாள்கோயில்கள் திருப்பணி செய்தான்.இவன் பெயராலேயே திருமலைராயன் பட்டிணம், கிளை நதி திருமலைராயன் ஆறு உள்ளது.காளமேகப்புலவரின் நண்பராய் ஊக்கம் அளித்தான். இவனுக்கு பிறகு கோனேரிராயன் சோழ, தொண்டை மண்டலத்தை ஆண்டான்.இதே காலத்தில் பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் ஆட்சி நடைப்பெற்றது. பல்லவர்காலத்தில் செல்வாக்கு மிக்க வாணவர்களை மூன்றாம் குலோத்துங்கன் தான் வென்ற பாண்டிய நாட்டுக்கு மன்னராய் வாணவர்குலத் தலைவனுக்கு முடி சூட்டினான். சுந்தர பாண்டியனுக்குப் பிறகு மதுரை, இராமநாதபுரம், கொங்கு  நாட்டை வாணவர்கள் சிறப்பாக ஆண்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் கட்டினர். இக்குலத்தில் வந்த ஜடாவர்மன் குலசேகர பராக்கிரம பாண்டியனை தென் காசியை ஆண்ட பாண்டியனை நரச நாயக்கன் வென்று விஜயநகர பேரரசில் இணைத்தான்.

Saturday, April 2, 2016

அனுஷ்டானம் தெய்வத்தின் குரலிலருந்து


தனிமனிதன் தன்னை தனக்குரிய அனுஷ்டானத்தால்சுத்தப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு தன் வாழ்க்கையை வழிக்காட்டியாக வாழ்வதே இந்து தர்மததின் உயரிய நிலை.
ஸ்நானம் ஐந்து வகை.:
வாருணம்: நதியில் மூழ்கி குளிப்பது.   அப்பு.
ஆக்நேயம்: விபூதி ஸ்நானம்.  விபூதியைகுழைக்காமல் உடல் முழுதும் பூசிக்கொள்ளள். அக்னி.
வாயவ்யம்: பசுக்களின் குளம்படி மண் காற்றில் பறந்து நம் மேல் படல் .காற்று.
திவ்யம். வெய்யிலிருக்கும் போது மழைபெய்தால்   அதில் குளிப்பது . ஆகாயம்.
ப்ராஹ்ம ஸ்நானம்: அபி மந்திரிக்கப்பட்ட தீர்த்த புரோஷணம் ஸ்நானத்திற்கு சமம்.
ஸ்நானத்தின் ஐந்து பகுதிகள்
ஸங்கல்பம், .ஸுக்த படனம், மார்ஜனம் மூழ்கி ஸ்நானம், அகமர்க்ஷமனம், தர்பணம்.ஆற்றின் நீரோட்டம் எந்த பக்கம் போகுதோ அந்த பக்கம் பார்த்து செய்ய வேண்டும். குளத்தில் குளிக்கும் போது சூரியனைப் பார்த து சூரியன்இருக்கும் திசையை பார்தது செய்ய வேண்டும்.சூரியன் இல்லாத இரவு நேரமாக இருந்தால்  கிழக்கு அல்லது வடக்குபக்கம் பார்த்து செய்ய வேண்டும்.பித்ரு கர்மாக்கு மட்டும் தெற்கு.
தியானம் செய்யும் போது பத்மாசனம் சப்பளம் போட்டும் ஆசமனம்  மற்ற காரியம் செய்யும் போது  குந்திக் கொண்டும் செய்ய வேண்டும்.நீரின் அளவு: ஆசமனத்திற்கு உளுந்து மூழ்கின்ற அளவு ஜலம். தரபணத்திற்கு  ஒரு மாட்டு கொம்பு பிடிக்கிற அளவு.

பயத்தம் கஞ்சி சேர்த்த  ஜலத்தில் பட்டு சால்வை, நார்மடி ஆகியவற்றை அமாவாசையன்று துவைத்து நிழலில் காய வைத்தால் இவை நல்ல மடிதான்.


நெருப்பை வாயால் ஊததக்கூடாது.
புருஷன் தீபத்தை  அணைக்கக்  கூடாது.
பெண்கள்  பூசணிக்காய் உடைக்கக் கூடாது.
விவாஹக் காலம், யாதரா காலம் தவிர மற்ற சமயங்களில் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட கூடாது.
மத்தியானம் பால் சாப்பிட கூடாது.
இரவில் தயிர் சாப்பிடகூடாது.
இரவு காலை அலம்பி துடைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.
ஒரு பிள்ளை  விவாக காலத்தில் ஸங்கல்பம் செய்து கொண்டு  கங்கணம் கட்டியபின் அந்த சடங்கு சேஷேஹோமத்தோடு முடிகிறவரையில்  அவனுக்கு சொந்த மாதா, பிதாக்கள்  மரணமடைந்தாலும் தீட்டுகிடையாது.
தீட்டு காலத்தில் எந்த விரதமும் பலனில்லை.ஆனால் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துவாதசி பாரணையில்ஆத்தி கீரை, சுண்டைகாயும் புளிக்கு பதில் எலுமிச்சை, நெல்லிமுள்ளி கட்டாயம் சாப்பிட வேண்டும்.நல்லெண்ணை கூடாது.
தூதுவளை மிகவும்  சிறப்பாக கூறப்பட்டுள்ளது. இதை சாப்பிட்டால் இந்திரிய நிக்ரஹம்  சுலபம்.
மூன்று தலைமுறைக்கு பொதுவான  மூதாதையரில்லாவிட்டால்தான் உறவுக்குள் கல்யாணம் செய்ய வேண்டும்.
கல்யாணமாகாத அக்கா இருக்கும்போது தம்பிக்கு பூணல் போடக்கூடாது.மூன்று  பிரம்மச்சாரிகள் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதுஎன்பதெல்லாம் தப்பு.

Thursday, March 31, 2016

தெய்வத்தின் குரலிலிருந்து குங்குமம்


சுத்தமான் குங்குமம் செய்யும் முறை
முப்பதுதோலா கெட்டிஉருண்டை மஞ்சள். ஒரு தோலா என்பது பத்துகிராம். மஞ்சளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.சம எடை எலுமிச்சை சாறு கொட்டையில்லாமல் எடுக்கவும். இதில் முப்பது கிராம்   வெண்காரமும் படிகாரமும் போடவும்.நன்றாக கரைந்த பின்மஞ்சள் துண்டுகளை சேர்த்து  ஒரு நாளில் இரண்டு மூன்று முறை கிளறி நிழலில்   காயவைக்கவும்.பின் இடித்து வஸ்திர காயம்  செய்யவும்.