Thursday, March 31, 2016

தெய்வத்தின் குரலிலிருந்து குங்குமம்


சுத்தமான் குங்குமம் செய்யும் முறை
முப்பதுதோலா கெட்டிஉருண்டை மஞ்சள். ஒரு தோலா என்பது பத்துகிராம். மஞ்சளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.சம எடை எலுமிச்சை சாறு கொட்டையில்லாமல் எடுக்கவும். இதில் முப்பது கிராம்   வெண்காரமும் படிகாரமும் போடவும்.நன்றாக கரைந்த பின்மஞ்சள் துண்டுகளை சேர்த்து  ஒரு நாளில் இரண்டு மூன்று முறை கிளறி நிழலில்   காயவைக்கவும்.பின் இடித்து வஸ்திர காயம்  செய்யவும்.

Tuesday, March 29, 2016

தெரிந்த கோயிலும் தெரியாத வரலாறும் சிதம்பரம்



கி..பி 726முதல் 775வரை ஆண்ட நந்தி வர்மன் கோவிந்தராசப் பெருமாள் திண்ணை அளவிலமைந்த சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்தான் என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பெருமாளை தில்லை வாழ் அந்தணர்களே பூசித்தனர்.இதை பொறுகாத பிறர்கால வீரவைஷ்ணவர்கள் தில்லையில் நாட்பூசையும் திருப்பணிகளும் நடைபெறாதவாறு தொல்லை செய்தனர்.இரண்டாம் குலோத்துங்கன் திருமால் மூர்த்தியை அப்புறபடுத்தினான் என்று ஒட்டகூத்தர் கூறுகிறார்.இந்த மூர்த்தியை இராமனுஜர் கீழை திருப்பதியில் ப்ரதிஷ்டை செய்தார்.இன்றும் அங்கே உள்ளது. இப்போது தில்லையில் உள்ள கோவிந்தராசப்பெருமாள் அச்சுதராயர் பிரதிஷ்டை செய்தார்.கிருஷ்ணதேவராயர்  காலத்தில் பெருமாள் இங்கு இல்லை.
பெருமாளை பூசிக்க வைணவர்களை நியமித்ததால் அவர்கள் மெல்ல நடராசர் கோயில் இடங்களை கைப்பற்றி கொள்ள முயன்றனர். வெங்கடபதி  தேவமகாராயரின் பிரதிநிதியாக செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கி.பி.1597ல் நடராச கோயில் முதல்பிராகாரத்தில் கோவிந்தராசருக்கு தனி  கோயில் அமைக்க தொடங்கினான்.இதை தில்லை வாழ்அந்தணர்களும் பொதுமக்களும்  முன்பிருந்த இரண்டாம் பிராகாரத்திலேயே பூசை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் அவ்வதிகாரி பெருமாள் சன்னதியை நடராசர் சன்னதிக்கு அருகிலேயே அமைக்கத்தொடங்கினார். இதை எதிர்த்து தாங்கள் உயிரோடிருக்கும் வரை நடராசர் கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராச பெருமாள் கோயில் கட்ட இணங்க மாட்டோம் என்று ஒருவர் பின் ஒருவராக கோபுரத்தின் மேலேறி கீழே வீழ்ந்து உயிர் விடடனர். இவ்வாறுஇருபது பேர் தற்கொலை செய்து கொண்டனர்.இதை கண்டும் மனமிறங்காத கொண்டம நாயக்கன் கோபுரத்தின் மேலேறி தற்கொலை சேய்ய முந்துபவர்களை சுட்டு தள்ளும்படி உத்தரவிட்டான்.இவ்வாறு இருவர் சுடப்பட்டனர். இதை பொறுக்காத தில்லை வாழ் அந்தணர் அம்மையார் ஒருவர் தன் கழுத்தையறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதை தமிழ் நாட்டுக்கு சுற்றுபயணம் செய்த பிமெண்டா என்ற பாதிரியார் கொண்டம நாயக்கரின் கொடுமைகளை தனது பயணக்குறிப்பில் எழுதியுள்ளர். இதிலிருந்து தான் விடாக்கொண்டன் கொடா கொண்டன் என்றவழக்கு வந்ததோ?
நந்திவர்மனுக்கு பிறகு அச்சுதராயரும் பரதிஷ்டை செய்ததும் இந்த திண்ணைஅளவு சிறிய இடத்தில்தான்.1597ல் தான் கொண்டம நாயக்கர் தனிக்கோயில் கட்டினார்.இவருக்குப் பின் 1643ல் விசயநகர மன்னன்  மூன்றாம் சீரங்கராயன்  மேலும் விரிவுபடுத்தி புண்டரீகவல்லித் தாயார் முதலிய புதிய சன்னதிகளை அமைத்தார்.இதனால் பல பழமையான  சிவ சன்னதிகள் இடிக்கப்பட்டது. இதனால் கொந்தளிப்புற்ற பொதுமக்களும் அந்தணர்களும் மீண்டும் கோவிந்த ராசப் பெருமாளை அப்புறபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் .1862ல் வைணவரகளுக்கும் தில்லைவாழ் அந்தணர்க்கும் ஒருஉடன்பாட்டுக்கு கையெழுத்திட்டனர்.அதன்படி கோவிந்தராசப் பெருமாளுக்கு செய்துவரும் நித்திய பூசைகளைத் தவிர மற்ற பிரம்மோற்சவம் நடததுவதில்லை என்றும் நடராசருக்கு தொன்றுதொட்டுநடைபெறும் பூசைகளுக்கும் திருவிழாகளுக்கும் தடையாக இருப்பதில்லை என்றுஉறுதி கூறி நீதிமன்றத் தீர்பானது.
தில்லை பெருமான் திருவுருவம் கி.பி. 17நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம்பரத்திலிருந்து இடம் பெயர்ந்து செல்ல வேண்டியதாயிற்று.அந்தணர்கள் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து எவரும் தெரியாவண்ணம் நடமாடமற்ற புளியநதோப்பில் பெரிய புளியமர பொந்தில் பாதுகாப்பாக மூடி வைத்தனர்.தோப்புக்குசொந்தககாரர் பொந்துஅடைக்கப்பட்டிருப்பதையும் அந்த பெட்டியையும் பார்த்தார். நடராசர் மறைக்கப்பட்டிருப்பதை கண்டார். அச்சூழ் நிலையில் மூர்த்தியை எடுப்பது சரியில்லை என்று எண்ணி , கனவில் கடவுள் இங்கு பூசை செய்யுமாறு கூறியதாக ஊராருக்கு கூறி பூை சசெய்துவந்தார். முகமதியர் அச்சநிலை மாறிய பின் அந்தணர்கள் பொந்திலுள்ள சிலையை மீண்டும் எடுத்து பிரதிஷ்டை செய்ய எண்ணி சிலையைத் தேடினர்.இருளிலும் ஆண்டுகள் பலவானதாலும் மறைத்த இடத்தை அடையாளம் கா்ணமுடியாமல் தவித்தனர். மாடு மேய்க்கும்  சிறுவன்தன் எசமானர் இங்கு புளியமரததிற்கு பூசை செய்வதாக சொன்னான். அந்தணர்கள் அவரை அணுகி மீண்டும்நடராசரைப் பெற்று தில்லையில் வைத்து பூசை செய்தனர்.இதை சோழமண்டல செய்யுளிலும் உ.வே.சுவாமிநாதய்யர் எழுதிய "அம்பலபுலி" கட்டுரையிலும் இச்செய்தி உள்ளது..ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைக்கப்பட்டதாகவும்கூறுவர். இச்செய்தி திருவாரூர் செப்பேட்டிலும் உள்ளது.
கி.பி.1684ல் மராட்டிய மன்னன் குலகுருவாகிய முத்தைய்ய தீட்சதரால்குடமுழுக்கு செய்யப்பட்டதென்றும் கேரள காட்டில் மலையருகில் மரபுதரில்  மறைக்கப்பட்டதாகவும் பிறகு நடராசருக்கு தில்லையில் குடமுழுக்கு நடந்ததாகவும் கூறுவர்.
அதாவது கி.பி. (24-12-164 முதல்14-11-1886) வரை  37ஆண்டு  10மாதம் 20 நாட்கள் தில்லையில் இல்லை என்றும் பாண்டிய ந ட்டிற்கு எடுத்து செல்லப்பட்டார் எனவும் குடுமியான் மலையில் நாற்பது மாதங்களும் பின் மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின் தில்லைக்கு எடுத்து வரப்பட்டார் என்றும் எ 1606 இரத்தாட்சி வருடம் கோபால பிருதவி சுரபதியின் வேண்டுகோள்படி சாம்போசி மன்னர் சற்சபைக்கு பொன் வேய்ந்து  1684 லும் 1686லும் குடமுழுக்கு நடந்ததாக கூறுவர். இதை செய்தவர்சி  வாஜிமன்னரின்மூதத மகன் சாம்போஜி.
மீண்டும் ஔரங்கசீபுக்கு பயந்து  1686ல் நடராசப்பெருமான் திருவாரூருக்கு எடுத்துசெல்லப்பட்டார்.மீண்டும் 1696ல் கொண்டு வந்தனர். அவரை திருவாரூரில் வைத்திருந்த மண்டபம் தியாகராசர் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகில் நடராசர் மண்டபம் இன்றும் உள்ளது.அது போல் அவரை எடுத்து சென்ற மரபெட்டி தில்லை பேரம்பலத்தில்இன்றும் உள்ளது.

மீண்டும் ஒரு கணிதப் பாடல்




ஒரு நான்கும் ஈரரையும் ஒன்றை கேளாய்
உண்மையால் ஐயரையும் ஒரரையும் கேட்டேன்
இரு நான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்வாய்
இம்மொழியை கேட்டபடி ஈந்தாயாயின்
பெருநான்கும் இறுநான்கும் பெறுவாய், பெண்ணே
பின்னை ஒரு மொழி புகல வேண்டாம் இன்றே
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
சகிக்க முடியாது இனியென் சகியே மானே..!

நான்கு, ஈரரை, ஒன்று     = 4+(2 *1/2)+1=6  
அதாவது ஆறாவது ராசி கன்னி
ஐயரையும் ஓரரையும்   = (5 x1/2)+1/2=2
மூன்றாவது நாள்  =   செவ்வாய்
செவ்வாய் கேட்டேன்    =   முத்தம் கேட்டேன்.
இரு நான்கு, மூன்று, ஒன்று   =   (2 x4)+3+1=12
பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம்     =பதில்
பெருநான்கு, அறு நான்கு = 4+24 =28
பிரபவவில் தொடங்கும் ஆண்டின் 28 வது   ஜய  =  வெற்றி
சரி நான்கு, பத்து, பதினைந்து   =  4+10+15= 29
  29 வது ஆண்டு மன்மத
கன்னியே கேளாய், முத்தமொன்று கேட்டேன்.உன் பதில் என்ன? கேட்டது கிடைத்தால் எனக்கு வெற்றி. நீயும் செவ்வாய் இல்லையெனில் மன்மதன் செய்யும் கொடுமையை சகிக்க முடியாது.  இப்பாடலை எழுதிய  ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

Saturday, March 26, 2016

ராஜ தரங்கிணியிலிருந்து சில நிகழ்ச்சிகள்அவந்தி வர்மன் தன் காலத்தில் தன் தலைநகரான அவந்திபுரத்தில் அவந்தி ஸ்வாமிகள் என்ற விஷ்ணு ஆலயத்தையும் அவந்தீஸ்வரன் என்ற சிவாலயத்தையும் கட்டினான்இவர்காலத்தில் "சுய்யா " என்ற இளைஞன் கட்டிய பல அணைகளைப்பற்றி கல்ஹணர் மிக விரிவாக எழுதியுள்ளார்.


முதலாவதாக கோபதித்யன் கோநந்த வம்சத்தில்  கி.மு. 371ல் அரியணை ஏறினான். அறுபதாண்டுகள் அரசாண்டான்.கற்றறிந்த அந்தணர்களுக்கு ஸமாங்கஸா, கோல, காகிகா, ஹடி கிராமம்,ஸ்கந்தபுரம் முதலிய அக்கிரஹாரங்களை த்  தானமாக அளித்தான்.கோபா குன்றின் மேல்ஜ்யோஷ்டச்வர் சிவாலயத்தைக் கட்டினான். அதுவே இன்று ஸ்ரீநகரில்ஜீலம் நதிகரையில் உள்ள சங்கராச்சாரியார்  கோவில்.
காஷ்மீரத்தின் பொற்காலம கார்கோடக வம்சம், உத்பல வம்சம் இரண்டும்  அரசாட்சி செய்த ஏழு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையாகும். இவர்களுள் பிரசித்தி பெற்றவர்கள் லலிதாதித்ய ன்கி.பி.724-760 )அவந்தி வர்மன் (855-883 )லலிதாதித்யன் தன்  தலைநகரான பரிஹாஸபுரத்தில் தங்க சிலையுடைய  முக்த கேசவன், வெள்ளி சிலையுடைய கோவர்தனகிரிதாரி என்று நான்கு கோயில்களை கட்டினான்.அவன் கட்டியவற்றில் மிகபிரசத்தி பெற்றது மார்தாண்ட்டின் சூரியன் கோவில்..இன்றும்  அதன் இடிபாடுகள் காண்போரைகளைக் கவர்கிறது.நதிகளில் வரும் வெள்ளங்களால் அவதிபட்ட மக்களின் துயரங்களை தீர்க்க தன்னிடம் ஒரு திட்டமிருப்பதாக தனக்குதானே பேசிக்கொண்டிருந்தான். சுய்யாஎன்ற இவனின் திட்டத்தை கேட்டறிந்தார் அவந்தி மன்னன். அவன் கேட்டபடி பல மூட்டை மொஹரா நாணயங்களையும் படகுகளையும் அரசர் அளித்தார்.படகேறி ஒரு கிராமத்திற்கு சென்று ஒருமூட்டை நாணயங்களை நீரில் கொட்டிவிட்டு திரும்பினான்.இதுபோல் சில இடங்களில் நாணயங்களை நீரில் கொட்டினான். பெரும் துயரத்தில் இருந்த மக்கள் நீரிலஇறங்கி ஆற்றின் இருகரைகளிலிருந்த, மலைகளிலிருந்து ஆற்றில்விழுந்து , அதன்போக்கை நிறத்தியிரந்தபெரும் பாறைகளைஅப்புறபடுத்தி சுய்யாநீரில்கொட்டய  தங்க நாணயங்களைஎடுக்க முயன்றனர்.தடைப்பட்டிருந்த ஆற்றுநீர் வேகமாகஓட தெடங்கியது. ஆற்றுநீரெல்லாம்ஓடிய பிறகு அங்கே அணைச்சுவர் கட்டினான்.நீர மட்டத்தை பலகால்வாய்கள் வழியே நீர்பாசனத்திற்க  வழி செய்தான்.
சுய்யாவின் பணியைப் பற்றி கல்ஹணர் "இப்படிஆதிவராகரைபோல நீரிலிருந்து நிலத்தை மீட்ட சுய்யாஅங்கு பல மக்கள் கூட்டங்கள் வசிப்பதற்கான கிராமங்களை  கட்டினான் ". இன்னும் சுய்யா கட்டிய கால்வாய்களும் அணைகளும் பேசப்படுகின்றன.
காஷ்மீரில் நால்வகை ஜாதி பிரிவில்லை.சதி அல்லது உடன்கட்டை  ஏறும்பழக்கம் இருந்தது.பெண்களுக்குஅதிக சுதந்திரம் இருந்தது.பல பெண்கள் அரசு பட்டமேறிஆட்சி புரிந்தனர்.

காஷ்மீரம் வரலாறும் தல்ஹணரும்


காஷ்மீரம் வரலாறு
முன்னாளில் ஜலோத்பவன் என்ற அரக்கன் இப்பொழுது காஷ்மீர் இருக்குமிடத்தில் சதி சரஸ் என்ற பெரிய ஏரியில் ளிந்து கொண்டான்.காசியப முனிவர் கணவாய் வழியே நீரை வெளியேற்றி அசுரரைக் கொன்று ஏரி இருந்த இடத்தை காஷ்மீர நாடாக்கினார்.காஷ்யபர் ஏற்படுத்திய நாடு காஷ்மீரம்.நீல மத புராணம் காஷ்மீரின் இயற்கை எழில், ஹர முக்தா, நந்தா பர்வதம், அமரநாத்,மகாதேவகிரி,இந்தர நீலம், கௌரி சிகரம் மலைகளின் பெயர்கள், மக்களின் சமூக வாழ்வு., ஆடல் பாடல் பற்றி கூறும் சமூக வரலாறுநூலாகும்.
ராஜ தரங்கிணி காஷ்மீரை ஆணடமன்னர்களின் வரலாற்றைக் கூறும்ஸம்ஸ்கிருத காவியம்.
பஞ்ச பாண்டவர் காலம் கி.மு.1184ல் இருந்து நூல் முடிக்கப்பட்ட 1070சக ஆண்டு அல்லது கி.பி.1148-49.இந்த வரலாறு கி.மு1184 + கி.பி.1149 =2333 ஆண்டு வரலாறாகும்.
கி.மு.1184ஆம் ஆண்டுக்கு முன்னால் ஐம்பத்திரண்டு அரசர்கள் எஎஎஎஆண்டுகள் காஷ்மீரை ஆண்டனர்.ஆனால் போதிய வரலாற்று சான்றுகள் இல்லை. எனவே மஹாபாரதத்தோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியையும் இதன் ஆசிரியர் கல்ஹணர் சொல்லுகிறார்.
கோநந்த வம்சத்தின் முதல் மன்னாகிய கோநந்தனின் உறவினன் ஜராசந்தன். இவன் திருதிராஷ்டனின் மகளை மணந்தவன்.இவன் மதுராபதி கிருஷணனை எதிர்க்க கோநந்தனின் உதவியை நாடினான்.வடமதுராவை முற்றுகையிட்ட கோநந்தன் யாதவ படையால் கொல்லப்பட்டான்.அவனது பேரன் மூன்றாம் கோநந்தனோடு வரலாற்று நூலை கி.மு.1184லிருந்து தொடங்குகிறார்.
ஒரு வரலாற்றை எப்படி எழுதப்பட வேண்டும்என்று கல்ஹணர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்."வரலாற்று நிகழ்ச்சிகளை பாரபட்சம் இன்றிவருப்பு வெறுப்பு இன்றி வரலாற்றுசெய்திகளுக்கு தகுந்த ஆதார சான்றுகளுடன் சிக்க்கலின்றி தெளிவாகஇருக்க வேண்டும்". ஒவ்வொரு தரங்கம் முடிவிலும் சம்பக பிரபுவின் மைந்தர் கல்ஹணர் என்று காணப்படுவதால் தந்தையின் பெயர்  சம்பகர் , பிரபு வம்சத்தவர் என்று தெரிகிறது. நந்தி ஷேத்திரம் என்ற சைவத்தலத்தில் சம்பகபிரபு தான் வருஷம் முழுவதும் ஈட்டிய செல்வத்தை ஏழுநாட்கள் நற்பணியில் செலவிட்டார் என்பதால் இவர் ஒரு சைவர் என தெரிகிறது.
ராஜ தரங்கிணியில் எட்டு தரங்கிணிகள் 7826 பாடல்கள் உள்ளன.
இதில் காஷ்மீரை ஆண்ட முதல் வம்சமான கோநந்த வம்ச மூன்றாம் கோநந்தனோடு தொடங்கி அடுத்து வந்த விக்ரமாதித்ய வம்சம்., ஹுனர் வம்சம்,குஷானர், மௌரியர் வம்சம். அதன்பின் மீண்டு வந்த கோநந்தா, பின் வந்த புகழ் பெற்ற கார் கோடக வம்சம் என்ற நாக வம்சம், உத்பல வம்சம் பின் வந்த பல வம்சங்கள் பற்றிய விவரங்கள் தருகின்றது.
இந்து பௌத்த சமயஙகள் இரண்டும் நல்லிணக்கத்தோடு பல நூற்றாண்டுகள் வாழ்தது.அசோகர் கட்டிய நூற்றுக்கணக்கான புத்த விஹாரங்கள், அவர் கட்டிய "ஸ்ரீநகர்" பற்றிய செய்திகள்., நல்லாட்சி செய்யாத கொடுங்கோல் மன்னர்கள் கூட புத்த விஹாரங்களும் சிவாலயங்களும் கட்டிய செய்தி, வீரப்போர்கள், நயவஞ்சங்கள்,அரண்மனை சூழ்ச்சிகள், சதிகள் இன்றும்் நிலைத்து நிற்கும் பல பொது நலப் பணிகள் என்றுபலவற்றையும் கல்ஹணர் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டே ஆண்டுகளில் எஎஎஎ ஆண்டு வரலாற்றை தொடர்ச்சியாக அதிகமாக குறை சொல்லமுடியாத வகையில் வரலாறும் காவியமுமாக இணைந்த நூலாக செயற்கரிய செயலாக படைத்தார்.
எல்லா மன்னரகளுடைய ஆட்சிகாலங்களும்இத்தனை ஆண்டுகள், மாதங்கள்., சில இடங்களில் நாடகள் கூட துல்லியமாக குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, March 23, 2016

சிவபெருமானின் பல வடிவங்கள்




சதாசிவம்
சிவபெருமானிடமிருந்து ஒலி பிறந்து.இசை, தாளம், ஆடல் இவர் தோற்றிவித்தவை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாகாடர்கள் படைத்த சிலையில் ஏழு ஸ்வரங்களுக்கு ஏழுஉடலாக காட்சிதருகிறார்.நெடிந்துயர்ந்த முழுஉடலுடன் ஈசன் நிற்க தலைக்கு மேல் ஒன்றின் மேல் ஒன்றாக இரு உடலும் வலதுபுறம் இரு உருவங்களும் இடது புறம் இரு உருவங்களும் எல்லாவற்றிற்கும் மேலேயுள்ள உருவில் எட்டு கரங்களும் மற்றவை நான்கு கரங்களுடன் உள்ளனகீழே பூதங்கள் யாழ்,குழல், கைதாளம் முழவம் இசைக்கின்றன.
லிங்க உருவின் அடிபகுதி சதுரபாகம் பிரம்மா, எண்பட்டை இடைபகுதி விஷ்ணு.உருண்டை மேல்பகுதி சிவன் என ஆகம சிற்பநூல் கூறுகிறது. சிவ பாகத்தை ஏழு பிரிவுகளாக பகுத்து ப்ரம்ம விஷ்ணு பகுதிகளையும்  சேர்த்து நவ தத்துவம் என்ற அடிபடையில் பூசிக்கப்படுகிறது. ஏழு பகுதிகளாய் உள்ளவை கீழேயிருந்து உருத்திரன்,மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம்., பராசக்தி, பரசிவன் என்று வணங்கப்படுகிறது. இந்த பரசிவத்தை துதிக்கும் நிலைக்கு வரும்போது ரூபமயம் மறைந்து அண்டப்பெருவெளியாக சிவமாக இப்பரவெளியின் தோற்றமும் இயக்கமுமே சிவம் என உணர்கையில் பரமானந்தநிலையும் உணரமுடியும்.இந்நிலையே தாண்டவரூபமான ஈசனின் நடேச ரூபமாகும்.
சதாசிவம்
மகாலிங்கத்தின் பந்துபாக மையமே நாதம்.நாதத்திலிருந்து ஒலி பிறந்தது.ஒலியின் மையமே சாந்தமென்றும் சாந்தேமே பராத்பரன்  என்னும் நடேச சொரூபம்.
சச்சிதானநதம் என்ற சிவரூபமே ஞானம்., கிரியைக்கு காரணமானவன் என்பதால் சதாசிவன்.பிந்துவாகிய சக்திமணோன்மணி என்று அழைக்கப்டுகிறாள். சிவசக்தி இணைந்த சதாக்கிய மூர்த்தியை பத்து கரங்களும் ஐந்து முகங்களும்  கொண்ட சதாசிவன் என்கிறது சிற்பநூல்கள்.
முகமின்றி வடிக்கபடும் லிங்கத் திருமேனி       அவயக்த லிங்கம்
முழு உருவத்துடன் உள்ள லிங்க திருமேனி      வியக்த லிங்கம்
லிங்கோத்பவர், லிங்க புராண தேவர்
ஒன்று அல்லது நான்கு முகத்துடன் உள்ள லிங்கம் வியக்த வியக்த லிங்கம்.
இம்முகத்திலிருந்து அடிப்படை ஓசைகளான அ,ஐ, உ, இ, ஓ என்ற ஓங்கார ஒலிகள்  பிறந்தன.
வாகீச சிவன்
கண்டியூர், தஞ்சாவூர், கரந்தை, செந்தலை ஆகிய ஊர்களில் நான்கு முகத்துடனோ ஒரு முகத்துடனோ முழு உடல், நான்குகரங்கள், தாமரை மீது ஒரு காலை மடக்கி ஒரு காலை தொங்க விட்ட நிலையில் அங்க மாலை, சூலம், தாமரை ஏந்தி இடகரம்  தொடை மீது உள்ளது. இம்மூர்த்தியையும், வாகீஸ்வரியையும் வேள்வி செய்யும் முன் ஆவாகிப்பர்.
பஞ்ச தேக மூர்த்தில
மத்தியில் பெரிய உருவம். பத்து கரங்கள்.திசைக்கு ஒன்றாக  நான்குமுழு உருவம் பெரிய உருவின் மார்வளவு சிறிய உருவங்கள் இரு கரத்துடன் உள்ள செப்பு திருமேனியை இராசராசன் செய்தருளினான் என்ற கல்வெட்டு உள்ளது.ஆனால் சிலை இல்லை.
திருத்துறைபூண்டி கோவிலில் மூன்றாம் ராசராசன் காலத்து நான்கு முகம் கொண்ட கஜசம்ஹார மூர்த்தி சிறப்பு.

Sunday, March 20, 2016

பேரெண்களில் சங்கநிதியும் பத்மநிதியும்


நூறு நூறாயிரம் எனபதுஒரு கோடி.அதனை தொடர்ந்து பேரெண்கள் முறையே சங்கம்.,விந்தம்,ஆம்பல்,கமலம், குவளை நெய்தல,பேரெண்கள் அதிகமாக தமிழ் மற்றும் வடமொழிகளிலேயே உள்ளது.
எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியலில்  (98)  எண் பெயர்களின் இறுதியாக ஐ,அம்,பல்,அல் என்பனவற்றை தொல்காப்பியர் கூறகிறார்.பேரெண்கள் பெரும்பாலும் மலர்களின் தாங்கியுள்ளது.

செருவிளை என்று சங்க இலக்கியத்திலும் வெண்காக்கணம் என்று பிற்கல இலக்கியத்திலும் சொல்லப்பட்ட பூ சங்குபுஷ்பமாகும். செரு என்றால் மாறுபாடு என்றுபொருள்.கருமைக்கு மாறுபட்ட  வெண்மை கொண்ட சங்குபஷ்பம் செருவினை எனப்பட்டது. இதை நச்சினிக்கினியார்  காக்கொன்றை என்பார்.
தாமரை மலரானது கமலம்., பங்கஜம், அரவிந்தம், பத்மம், சரோஜம் என்ற பல பெயர்களில் இலக்கியத்தில் இடம் பெறுகிறது.நன்னீர் கொடிமலர் தாமரை வெண்தாமரை, செந்தாமரை.என்றும் நீலதாமரை என்று வட இந்தியாவிலும் உள்ளது.

கணம் என்பது மிக ச்  சிறிய நேரத்தை குறிக்கும். பல ஆயிரம்  கணம் கொண்டது ஒரு இமைக்கும் நேரம்.அணுவளவான நேரத்தை  'அரபத்த நாவலர்'என்ற பரத நூல் புலவர்
நாற்றிதழ் அடுக்கி அதனில் நுண்ணூசி
ஊன்றடும் கலம் கணமாம் என்கிறார்.
தாமரை நூறு இதழ்களை ஒன்றின் மேல்ஒன்றாக அடுக்கிகூரிய ஊசியொன்றை அவ்வடுக்கின்மேல் வைத்து அழுத்த, ஒர் இதழில் ஊசி ஊன்றும்  நேரமே ஒரு கணம் ஆகும்.
பேரும்பாலும் பேரிலக்க எண்கள் மலர்களின் அதுவும் நீர் தாவர மலர்களின் பெயராலேயே குறிக்கபடுகிறதுஇங்கு சஙகம் ஞஞஞஞஞஞ என்ற பேரிலக்க எண் சங்குபுஷ்பம் அன்று.நீரோடுதொடர்புடையதாய் சங்கு என்பது  தெளிவாகிறது. இசை கருவிகளில் சங்கு மட்டுமேஓங்கார ஓசை எழுப்பவல்லது. யுத்த களத்திலும் சித்தகளத்திலும் சங்கநதமே உணர்ச்சியை எழுப்புகிறது.


 பெரும்பாலும் பேரிலக்க எண்கள் மலர்களின் அதுவும் நீர் தாவரமலர்களின்
பெயராலேயே குறிக்கபடுகிறது. இங்கு சங்கம் (10 to the power of 14)
பேரிலக்கஎண் சங்கு புஷ்பம் அன்று.நீரோடு தொடர்புடையதால் சங்கு என்பது தெளிவாகிறது.இசை கருவிகளில் சங்கு மட்டுமே ஓங்கார ஓசை எழுப்ப கூடியது. சித்தகளத்திலும் யுத்தகளத்திலும் சங்கநாதமே உணர்ச்சியை எழுப்பகூடியது.
கச்சப நிதி, கற்பகநிதி, சங்கநிதி, பதுமநிதி., நந்தநிதி., நீலநிதி., மகாநிதி, மகாமதுநிதி, முகுந்தநிதி என்பன குபேரரின் ஒன்பது நிதிகளாகும்.இவற்றுள் சங்க நிமதிப்புள்ள அல்லது எண்ணிக்கையுள்ள பொற்குவை பதுமநிதி ஞஞஞஞஞஞ திப்புள்ள பொறகுவியல்ஆகிய இரண்டும் இலக்கியத்தில் பேரிடம் பெறுகிறது. இதை ஒரு எழுத்தாக காட்ட கையாண்ட விதமே சங்கு வடிவம் ,தாமரை வடிவம். பெரும்பாலும் பேரிலக்க எண்கள் மலர்களின் அதுவும் நீர் தாவரமலர்களின்
பெயராலேயே குறிக்கபடுகிறது. இங்கு சங்கம் (10 to the power of 14)
பேரிலக்கஎண் சங்கு புஷ்பம் அன்று.நீரோடு தொடர்புடையதால் சங்கு என்பது தெளிவாகிறது.இசை கருவிகளில் சங்கு மட்டுமே ஓங்கார ஓசை எழுப்ப கூடியது. சித்தகளத்திலும் யுத்தகளத்திலும் சங்கநாதமே உணர்ச்சியை எழுப்பகூடியது.
கச்சப நிதி, கற்பகநிதி, சங்கநிதி, பதுமநிதி., நந்தநிதி., நீலநிதி., மகாநிதி, மகாமதுநிதி, முகுந்தநிதி என்பன குபேரரின் ஒன்பது நிதிகளாகும்.இவற்றுள் சங்க நிதி (10to the power of  14) மதிப்புள்ள அல்லது எண்ணிக்கையுள்ள பொற்குவை பதுமநிதி  (10to the power of  35)ம திப்புள்ள பொற்குவியல்ஆகிய இரண்டும் இலக்கியத்தில் பேரிடம் பெறுகிறது. இதை ஒரு எழுத்தாக காட்ட கையாண்ட விதமே சங்கு வடிவம் ,தாமரை வடிவம்.
  மஞ்சரி என்ற பத்திரிக்கையிலிருந்து

பாரத்வாஜ முனிவரின் விமான சாஸதிரம்

பாரத்வாஜ முனிவரின் விமான  சாஸ்திரத்தின் அடிப்படையில்  தல்பாடேவின் உருவாக்கத்தில் உலகில் பறந்த முதல் விமானம்.

எதிரிகளின் விமானங்களை அழிப்பது பற்றியும் அவற்றை புகைப்படம் எடுக்கும் விதங்கள், அதிலிருக்கும்  பயணிகளை செயலிழக்க செய்யும்  உத்திகள் மற்றும் நம் விமானம் பிறர் கண்களில் படாமல் இருக்கும் முறைகள் போன்றவை ."சத்ரு விமான கம்பன க்ரியத்திலும்  விமானம் ஓட்டுபவர் எந்த வத உணவு உண்ண வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
பாரத்வாஜருக்கு முன்பு இருந்த கணடுபிடிப்புகள் போலவே அவருக்கு பிற்காலத்திலும் விமானங்கள் உபயோகத்தில் இருந்தன எனபதற்கு சான்றுகள் உள்ளன்.அவற்றில் ஒன்றே சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் கி.மு. முன்னூரில்  சௌபா என்பது ராஜா    அரிச்சந்தரா காலத்தில் உபயோகிக்கப் பட்டஆகாய விமானம்.
சாணக்கிய நூலில்  "ஆகாய யோதினா"  வானத்திலிருந்து போர் செய்யும்  உத்தி தெரிந்தவர். என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அசோக சர்க்கரவர்த்தியின் காலத்து அரண்மனை கல்வெட்டடுகளில் வானரதங்கள் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. தற்பொழுது டில்லியில் உள்ள Aeronautical Research Development Board கர்நாடகத்தின் மாண்டியா அருகில் மேல்கோட்டை என்னும் சிற்றூரில் Academy of Sanskrit என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த அமைப்பு ."வைமானிக சாஸ்திரா" என்னும் அடிப்படையில் கண்ணாடி போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளது. எதிரியின் ராடர்களாலும் இந்த கண்ணாடி போன்ற கண்டுபிடிப்பை அடையாளம் காணமுடியாது என்கிறார் டாங்க்ரே என்றகாசி இந்து பல்கலகழக பேராசிரியர்.
பேராசிரியர் தல்பாடெ தன் விமானத்தை சூரிய ஔி மெர்க்குரி,"நக்ஷ ரசா என்ற ரசாயனம் கலந்துஉருவான சக்தியினை மின்கலம் போன்று சேமித்து அந்த விமானத்தைப் பறக்க விட்டார். அரிச்சந்தரா காலத்தில் உபயோகிக்கப் பட்டஆகாய விமானம்.
சாணக்கிய நூலில்  "ஆகாய யோதினா"  வானத்திலிருந்து போர் செய்யும்  உத்தி தெரிந்தவர். என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அசோக சர்க்கரவர்த்தியின் காலத்து அரண்மனை கல்வெட்டடுகளில் வானரதங்கள் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. தற்பொழுது டில்லியில் உள்ள Aeronautical Research Development Board கர்நாடகத்தின் மாண்டியா அருகில் மேல்கோட்டை என்னும் சிற்றூரில் Academy of Sanskrit என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த அமைப்பு ."வைமானிக சாஸ்திரா" என்னும் அடிப்படையில் கண்ணாடி போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளது. எதிரியின் ராடர்களாலும் இந்த கண்ணாடி போன்ற கண்டுபிடிப்பை அடையாளம் காணமுடியாது என்கிறார் டாங்க்ரே என்றகாசி இந்து பல்கலகழக பேராசிரியர்.
பேராசிரியர் தல்பாடெ தன் விமானத்தை சூரிய ஔி மெர்க்குரி,"நக்ஷ ரசா என்ற ரசாயனம் கலந்துஉருவான சக்தியினை மின்கலம் போன்று சேமித்து அந்த விமானத்தைப் பறக்க விட்டார்.
பாரத்வாஜரின் ஆறாவது  வதமான புஷபகா மற்றும்  எட்டாவது விதமான  ."மாருத்சாகா என்ற விமானங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது தல்பாடேவிமானம்.1895ல் ரைட் சகோதரர்கள் கண்டு பிடிப்பதற்கு எட்டு ஆண்டுமுன்பு மும்பையில் சௌபாத்தி கடற்கரையில் சுமார் 1500அடி உயரம் தானே பறக்க விட்டு  பாதுகாப்பாக தரையில் இறக்கி காண்பித்தார்.இதை நேரில் கண்டபல்லாயிரகணககானவர்களில் கைக்குவாட் மஹாராஜா சயாஜி ராவ் மற்றும் நீதிபதி கோவிந்த ராணடேவும் அடங்குவர்.இதை  பற்றிய செய்தி கேசரி என்ற மராட்டிய நாளிதழில் செய்தி வெளியானது. இந்த விமானத்தை முமபை 

  
 Art  society  town  hall ல் கண்காட்சியில் வைத்திருந்தனர்.தன் மனைவி மறைவினால் மனமுடைந்த தல்பாடேவும் மரணமடைந்தார்.பின் இவரின் உறவினர்கள்  விமானத்தைRalli  Brothers என்ற ஆங்கில நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர்.      கலைமகள் பத்திரிக்கையிலிருந்து.

Friday, March 18, 2016

புராதான நூல்களில் நவீன கண்டுபிடிப்பு

எந்த எண்ணையும் பூஜயத்தால்பூமி சுற்றுகின்ற  விஷயத்தை அப்பைய தீக்ஷிதர் "பூமிர் ப்ராமயதி" என்று பூமி சுழரச்சியை சொல்லுகின்றார். பூமியை பற்றிபடிப்பதைப பூகோளம்(geography )என்று  சொல்கிறோம்.பூசாஸ்திரம் என்றும் சொல்லாமல் பூமி கோளமாக இருப்பதால் பூகோளம் என்கிறோம்.
யுனிவர்சல் என்றபிரபஞ்சத்தை  பரம்மாண்டம் என்கிறோம். ப்ரம்மாவால்  படைக்கப்பட்ட அண்டம் இது.அண்டம் என்றால முட்டை.. எனவே பூமி பந்து போல் (spherical) இல்லாமல் முட்டை போல் elliptical  வடிவமாக உள்ளது. பூமி நகர்கிறது என்பதைக் கொண்டு ஜகத் என்கிறோம். ஜகத் என்றால் நிற்காமல் போய் கொண்டிருப்பது.
பூமியின் சுற்றளவு    (circumference )சுமார் 25,000மைல் .பூமி  24 மணி நேரத்தில்ஒரு முறை சுற்றுகிறது என்றால் மணிக்கு  1000மைல் சுற்றுகிறது.ஒரு நிமிடத்தில் 16 or  17 மைல் சுற்றுகிறது. இதனால்  இப்பொழுது மைலாபூர் இருக்கும் இடத்தில்  அடுத்த நிமிடம் கடலோ அல்லது வேறு ஊரோ இருக்க வேண்டும். ஒரு காக்கா மேலே எழும்பி மீண்டும் அமரும் போது வேறுஇடத்தில் அமர வேண்டும்.ஆனால் அது மைலாபூரிலேயே  மரத்தில்  உட்காருகிறது...எப்படி? பூமியை சுற்றி 200  மைலுக்கு காற்று மண்டலம்  உறை போல  பல மண்டலங்களும் உள்ளன. அவைகளும் பூமியுடன் சேர்ந்து சுற்றுகிறது.
தெய்வத்தின் குரலிருந்து.

Thursday, March 17, 2016

பழந்தமிழகத்தில் கணிதம் தொடர்ச்சி


முக்காலக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் 
அக்காலரைக் கண்டஞ்சாமுன்    விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன்கச்ச
ஒருமாவின் கீழரையின் றோது
இந்த தனிபாடலில் காளமேகப் புலவர் முக்கால், அரை  என்பதை கூறியுள்ளார்.
நளன் கால், இருமா, மாகாணி என்ற கணிதச் சொற்களைக் கொண்டு உபதேசம் செய்கிறார்.
அதாவது வயதானபின்மூன்று கால்களைக் கொண்டு  நடப்பதற்கு முன்பே, நரை விழத் தொடங்கும் முன்பே ., காலனைக் கண்டு அஞ்சும்  முன்பே மாகாணி (.'சுடலை' ) க்கு போவதற்கு முன்பே விக்கி இருமுவதற்கு  முன்பே ஒப்பற்ற மாமரத்தின் கீழ்யிருந்துஅருளும் ஏகாம்பர நாதனை பாடி பரவுக என்பதே பொருள்.

நூற்று பத்தாயிரம் பெறினும்  நாற்கிலை
நாற்றிங்கள் நாளுக்கு நைந்துவிடும் மாற்றலரைப்  நாலாறு தேர் ஓடிவிட்டதாக நளன்
பொன்ற பொருதடக்கைபோர்வேல்அகளங்கா என்றும் கிழியாது என் பாட்டு
என்று ஓளவை 100 * 1000 என்பதை கூறியுள்ளார்.
நளன் தேரோட்டுவதில் வல்லவன்  என்பதைபுகழேந்திப் புலவர்
மேலாடை வீழ்ந்தது  எடு என்றால்
அவ்வளவில் நாலாறு காதம் கடந்ததே
மேலாடை விழுந்ததை எடு என்று அரசர் சொல்ல அதற்குள் நாலாறு தேர் ஓடிவிட்டதாக நளன் சொல்கிறான்.   4*6= 24  காதம் கடந்து விட்டதாம்.

திருமிழிசை ஆழ்வார் ஐந்து  என்ற எண் கொண்ட  பாடல்
ஐந்து மைந்து மைந்துமாகி அல்லல
வற்றுளாயுமாய்
ஐந்து மூன்று மென்றுமாகி நின்றவாதிதேவனே
ஐந்து மைந்து மைந்துமாகி அந்தரந்தணைத்து நின்றம்
ஐந்து மைந்துமாய் நின்றனை யார்காண வல்லீரே
இதில் ஒன்பது  ஐந்துகளை கூறுகிறார். முதல் ஐந்து பஞ்ச பூதம்.. இரண்டாம் ஐந்து பஞ்ச ஞானயந்திரங்கள் மெய், வாய்.,கண்,மூக்கு., செவி. அடுத்து பஞ்ச கர்மேந்திரங்கள் நாக்கு..,கை.., கால் குதம்,குறியைக் குறிக்கும். அடுத்து பிராண,அபாண., வியான.,உதான., சமான என்ற பஞ்ச ப்ராணனைக் குறிக்கும்.பிறகு வரும்  மூன்று சித்தம், புத்தி, அகங்காரத்தை குறிக்கும்.அடுத்துவரும்  ஒன்று மனதையும் ஆக இவ்விரண்டுஅடிகளினும் நம்முள் அடங்கியிருக்கும் இருபத்து நான்கு தத்துவங்களையும் சொல்லி அவையே  முழுமுதற்கடவுள் என்கிறார்.

Tuesday, March 15, 2016

பழந்தமிழகத்தில் கணிதம்


பண்டைதமிழர் கணக்கில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர்.  எண்ணிலி(infinity ) யை குறிக்க  கந்தழி"என்ற சொல்லையும், ஆயிரம் கோடியை குறிக்க கும்பம் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.
மிக நுண்ணிய அளவைகளைக் கையாண்ட பண்டைய தமிழர்கள் எண்ணிலவைக்கும், நீட்டளவைக்கும்  கீழ்வாய் சிற்றிலக்க வாய்பாடுகள் தயாரித்ததை தேவநேயன்அவர்களின் பண்டை தமிழக நாகரீகமும் பண்பாடும் என்ற நூலில் விவரித்துள்ளார்.
அவற்றிலிருந்து ஒரு மேல் முந்திரி = 1/320எனவம் கீழ் முந்திரி =1/102400  எனவும் அறிகின்றோம்.ஒரு "தேர்த்துகள்" என்பது மிகமிகச் சிறிய எண் எனவும்அறிகின்றோம்.
  நீட்டலளவை வாய்பாடு அணுவிலிருந்து தொடங்கி ஒரு காதம் வரை வெவ்வேறு பெயரகளால் வழங்கப் பெற்றது.இதனால் அந்த காலத்து அரசுகள் நிலத்தை துல்லியமாக அளந்து அதற்கேற்றாற் போல் வரி  வசூலித்தனர.

இறையிலி நீங்கி முக்காலே இரண்டு மா காணிஅரை காணி முந்திரி கீழ் அரையே இரண்டு மாமுக்காணி கீழ்முக்காலே நான்கு  மா வினால் இறைகட்டின காணிக் கடன் என்பதால்  தெளிவாகிறது.

இங்கு குறிக்கப்பட்ட அளவு  1/52000  ஆகும்.

மேல் வாயிலக்கப் பேரெண்களை குறிக்க தொல்காப்பியர்ஒருசூத்திரமே அளித்துள்ளார்.அம்பல் என வரூஉம் இறுதி
அல் பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்
எனப்பலகோடிகளை குறிக்கும் பேரெண்களை குறிப்பால் உணர்த்துகிறார்.
தாமரை, குவளை, என்பன 'ஐ' ஈறும் 'சொல்லின் கடைசியில்', கணிகம், சங்கம், வெள்ளம் என்பன.'அம்' ஈறும் ஆம்பல் என்பது பல் ஈறும், நெய்தல் என்பது 'அல்' ஈறும் உடைய சொற்கள்.
கும்பம்     =  ஆயிரம் கோடி 1000,0000000 =:-)10zero 
கணிகம்  =  பத்தாயிரம் கோடி  =11 பூஜியம்
தாமரை = கோடாகோடி  =14 zero
சங்கம்    =பத்து கோடாகோடி
வாரணம்    = நூற கோடாகோடி
பரதம்   =இலட்சம் கோடாகோடி (1பின் 24பூஜியங்களை கொண்டது.)
பரிபாடலில் கீரந்தையார்
"நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும்
என வெளிப்படையாக  பேரெண்களை குறிக்கிறார்.
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றவ செய்தல் இலர்.
என்று திருவள்ளுவரும்  கோடி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.
இலக்கம் லட்சம் என்ற எண்.; நூறாயிரம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டு வந்தது.
மேலும் சிற்றிலக்கத்திற்கு பேரிலக்கத்திற்கும் பெருக்கல் வாய்பாடு இருந்தது. சதுர வாய்பாடும் இருந்தது.பண்டை கால தமிழகத்தில் குழிக்கணக்கு என இதை குறிப்பிட்டு வந்தனர். குழித்தல் என்றால் சதுரித்தல் என்று பெயர்.ஒரு எண்ணைஅவ்வெண்ணை கொண்டே பெருக்குதல் சதுரித்தல் எனப்படும்.
உதாரணம்:  2*2=4 / 5*5= 25

சிற்றிலக்கக் குழிப்பைச் சிறுகுழி எனவும் பேரிலக்க குழிப்பை பெருங்குழியெனவும் தனித்தனியே குறித்தும் வந்திருக்கின்றனர்.
ஆரம் (r) ஆக உள்ளஒரு வட்டத்தின் பரப்பை (area ) pir‘2எனக் கூறுகிறது கணிதம்.இவ்விவரத்தை காக்கைப்பாடினியார் என்ற பெண் பால் புலவர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தவர்
வட்டத்தரை கொண்டு விட்டத்தரை  தாக்கின்
சட்டென தெரியும் குழி.
என்ற பாடல் மூலம் எளிதாக கூறி விடுகிறார். அதாவது சுற்றளவில் பாதியும் வட்டத்து அரை வட்டத்தின்பாதியும்  ஆரம்  பெருக்க பரப்பு குழி கிடைக்கும்.
தனிப்பாடல்கள் சிலவும் கணித சொற்களை உள்ளடக்கித் தமிழ் நாட்டில் உலா வந்துள்ளது என்றுஅறிகின்றோம்.
காஞ்சியில் வரதராஜர் யானை வாகனத்தில் வீற்றிருந்து உலா வருகிறார் அவ்வழகை கண்டு மயங்கிய ஒரு நங்கையின் அரையாடை நழுவி கீழே விழுந்ததாம். என காளமேகப் புலவர் பாடுகிறார்.
எட்டொருமா வெண்காணிமீதே இருந்த கலைப் 
பட்டொருமா நான்மாவிற் பாய்ததே சிட்டர் தொழும்
தேவாதி தேவன் திருவத்தியூர் வரதன்
மாவேறி  வீதிவர கண்டு.
இப்பாடலில் ஒருமா, காணி, எட்டுமா., எண் காணி,நான்மா என்ற கணிதச் சொற்களை திறம்பட கையாண்ட  நயம் பாராட்டதக்கது.
ஒரு மா  =1/20
எட்டு மா =8*1/20=8/20=32/80
எண் காணி +எட்டு  காணி =32/80 +8/80=40/80= அரை.ப1/2 
1மா +நான்மா = 1/20 +4*1/20=5/20=1/4= கால்.

ஆக நங்கையின் இடுப்பில் 'அரை' இருந்த கல 'ஆடை' நழுவி பாதத்தில் 'காலில்' வந்து விழந்ததாம்.

படித்ததில் பிடித்தது.

Saturday, March 12, 2016

ஆரியபட்டீயம் தொடர்ச்சி


கணித பாதம்

இது முப்பத்து மூன்று  செய்யுட்களை கொண்டது. ஆரிய விருத்தத்தில் அமைந்ததில் அமைந்தது.மேலும் வானியல் தொடர்பான உயர் கணக்கு  தீர்வைகளை வ்யக்த கணிதம் (geometry ) அவ்யக்த என்ற குறிகணக்கு  என்ற அல்ஜிபரா இவைகளை பயன்படுத்தி தீர்க்கும் வழிமுறைகளைஆரியபட்டர் விளக்குகிறார். சதுரம், முக்கோணம்., வட்டம் இவற்றின் பரப்பளவு, கொள்ளளவு,வட்டத்தின் விட்டம்,ஆரம்,ஆகிய தீர்வை காணப்படுகிறது. முக்கியமாக வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டம் இவற்றின்  விகித மதிப்பு அதாவது pi=3.1416  என்று துல்லியமாக கணக்கிட்டு கூறப்பட்டுள்ளது. பிதாகரஸ் தேற்றம் பற்றிய விளக்கம்   பதினேழாம் செய்யுளில் கூறியுள்ளார்.செங்கோண முக்கோணத்தின் இருபக்கங்களின் வர்க்க கூட்டுத்தொகை கர்ணம் எனப்படும் மூன்றவது வர்கத்திற்குசமம் என்பதையும் சமன்தொடர் கணக்கியல் (arithmetic  progression ), குட்டகம் எனப்படும் முதல் பாகைக்குரிய  உறுதி செய்ய இயலா  சமநிலை கூற்று கணக்கியல்   (linear indeterminate equation ) ஆகியதீர்வைகள் உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

காலக்கிரியா பாதம் என்பதும்  ஆரியா மீட்டரில் அமைந்துள்ளது. த்ருக் கணித முறையில் பஞ்சாங்கம் தயாரிக்க  உபயோகமாகும் நாட்கள் கணிப்பு பற்றிய தீர்வைகள் இதில் இடம் பெற்றுள்ளன.  கால அலகுகளை  வருடம்.,மாதம், தினம் நாழிகை,  வனாடி போன்றவைகளும் வட்டப் பாதையின் சுழற்சி ,ராசி., கலா., விகலா தத்பரா போன்ற குறிப்புகள் காணப்படுகிறது. ஆரியபட்டர் வான்கோள்களின் சஞ்சாரத்தை கணக்கிட்டு தன்பிறந்த வருடம்  கி.பி.476 என்று   (3600 ஆண்டுகள் +  யுக பாதங்கள் முடியும் காலகட்டத்தில் 23ஆண்டுகள் முடிந்து என்றுகுறிப்பிட்டுள்ளார்.
மூன்று யுகபாதங்கள் முடிந்து கலியுக ஆரம்பம் அது கி.மு. 3102 ஆண்டும் அதிலிருந்து 3600 ஆண்டுகள் கழியும் போது கிடைப்பது கி.பி. 499.அப்பொழுது ஆரியபட்டருக்கு வயது இருபத்துமூன்று என்று இச்செய்யுளில் தெரிகிறது. கி.பி. 499 - 23=   476.ஆகையால் ஆரியபட்டரின் பிறந்த வருடம்  கி.பி.  476
தொலைநோக்கியின் உதவியின்றி ஐந்தாம் நூற்றாண்டிலேயே ஒரு குறிப்பிட்ட தினத்தில் அமைந்த கோள்களின் அமைப்பை இவரால் துல்லியமாக கணக்கிட முடிந்தது. பதினோறாம்  செய்யுளில் காலம் எப்பொழுதும் முன்னோக்கியே சென்று கொண்டிருக்கும். அது பூமியை சார்ந்தது அல்ல.ஆனால் மணி., நாள், மாதம், வருஷம், யுகம் போன்றவை வான கோளத்தில் உள்ள கிரகங்கள் நட்சத்திரங்களின் நிலையை பொருத்தே அமைகிறது.இதையே காலக்ரியா கூறுகிறது. ஆரியாமீட்டரில்  அமைந்த  ஐம்பது  செய்யுட்களை கொண்ட இறுதி பாதம் : கோள பாதம்.வானியல்துறையில் அதிகமாக பயன்படுத்தபடும் கோள முக்கோண கணிதம் (spherical trigonometry ) சம்பந்தபட்ட பல்வேறு கணக்கு தீர்வைகள் இதில் காணப்படுகிறது.கோள்களை பற்றிய விளக்கங்கள்,பல்வேறு காலகட்டங்களில் அவற்றில் ஏற்படும் மாறுபாடுகள்,அதன் விளைவுகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. நிலம்:தீ., நீர், காற்று  ஆகியவற்றின்கட்டுப்பொருளால் ஆனது.இலங்கையில் இருக்கும் ஒரு  மனிதன் அசையாதநிலையில்  உள்ள விண்மீன்களை பார்த்தால் அவை மேற்குநோக்கி  நகர்வதபோல் தோன்றும். படகில் பாகும்போத மரங்கள் பின் நோக்கி செல்வதுபோல பூமியும் மேற்கிலிருந்து கிழக்காகசுழல்கிறது என்றார். பின்வந்த வராஹமிஹிரர், ப்ரம்ம குப்தர், ப்டாலமி எனற கிேரேக்க அறிஞர் மறுத்தனர். சூரிய சந்திர கிரணங்கள் எப்படி ஏற்படுகின்றது என்றும் கிரணங்களின் கால அளவு,அதன் பருமன், நிறம், அதன் நிழல்களின் நீளம் ஆகியவைகணக்கிடும்  முறையும் விவரத்திருக்கிறார்.
ஆரியப பட்டீயத்திற்கு பிற்காலத்தில்பலர் உரை எழுதினர். அவற்றில் முக்கியமானவை பாஸ்கராச்சாரியா எழுதிய மஹாபாஸ்கரீயம். வல்லர் எழுதியசிஷ்யதீவருத்திதா. ஹரி தத்தரின் க்ரஹசார நிபந்தனம்.

Thursday, March 10, 2016

ஆரியபட்டீயம் மஞ்சரியிலிருந்து


 ஆரியபட்டர் பாரதம் பெற்ற  வானியல் நிபுணர். இவர் இயற்றிய நூல் கள்   ஆரியபட்டீயம், ஆரியப்பட்டீய சித்தாந்தம். இவரது காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி.ஆரியபட்டர் என்ற பெயரை கொண்டு கி.பி.பத்தாம் நூற்றாண்டு வாழ்ந்து  மகா சித்தாந்தம் என்ற  வானியல் நூலை எழுதிய ஆசிரியர் ஆரியபட்டர் உ என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டீயம் எழுதிய   ஆரியபட்டர் வானியல் விஞ்ஞான மூலகர்த்தா என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டீய சித்தாந்தம்  என்னும் நூலை பற்றிய விவரங்கள் உரையாசிரியர்களின் குறிப்பிலிருந்துதான் தெரியவருகிறது. மூலநூல்கி டைக்கவில்லை.
ஆரியபட்டர் குஸுமபுரம் என்ற  பாட்னாவில் வாழ்ந்தார்.இவர் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைகழகத்தில் முதல்வராக விளங்கியவர். பாண்டுரங்கசாமி,வாத தேவர்,நிசங்கு ஆகியோர் இவரின் திறமையான  மாணவர்கள். வாததேவர் பின்னாளில் ஸர்வசித்தாந்த குருவாக போற்றப்பட்டார"ஆரியபட்டீயம்" ஸ்வாயம்புவ சித்தாந்தம்  அதாவது  ப்ரஹம சித்தாத்ததை அடிப்படையாக கொண்டு  எழுதப்பட்டது. கோள் விஞ்ஞானம் , கணிதம் போன்ற பல்வேறு  தத்துவங்களை இந்த நூலில்  121 செய்யுள்களில் தொகுத்து வழங்கியுள்ளார். இதை இரண்டாக பிரித்து  தசகீதிகா  சூத்திரம் முதல் நூல்.  இரண்டாவது ஆர்யாஷ்ட சதம் என்றும் கூறுகின்றனர்.
ஆரம்பம் வரை சென்ற காலஅளவை ஆறுமனுக்களும் 273/4
யுகங்களும் என்கிறார்கள்.

இந்த எண்கணக்கு முறை பண்டை கால"கடபயாதி ஸங்க்யை" என்பதிலிருந்து மாறுபடுகிறது என்பது  கவனிக்கத்தக்கது.மேலும்கீதிகா பாத சூத்திரங்களில் கோள்கள் சஞ்சரிக்கும்பாதையின் சுற்றளவு, அதை  கணக்கிடும் முறை, கோள்களின்விட்டம்.,  சூரியபாதையின் சாய்மான  கோணத்தின் அளவு,ஏனய கிரகங்கள் சூரியபாதையை கடக்கும் போது  ஏற்படும் கோணங்கள்,அவை  கணக்கிடும் முறை ஆகியவை கூறப்பட்டுள்ளது.கீதிகாபாதத்தின் விஷேச அம்சம் செய்யுட்கள் சூத்திர வடிவமாக அமைந்திருப்பதுதான்.மாணவர்கள் மிக பெரிய எண்களையும் எளிதாக மனனம் செய்ய பயன்படுகிறது.


ஆனால்  பொதுவாக ஆரியபட்டீயம் என்னுமநூலுக்கு ஏற்ப நான்கு அத்தியாயங்களாக முறையே கீதிகா பாதம்,கோள பாதம்,கணித பாதம், காலக்ரியா பாதம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாம் பாதமான கீதிகா பாதம் கீதிகா விருத்தத்தில் சுத்திர வடிவில் அமைந்த  பதின்மூன்று  செய்யுள் பத்திகளை கொண்டது.கடவுளவழ்த்தில் ஆரம்பித்து அடுத்து  எண்கணககை ஸமிஸ்கிருத பாஷை அஷரங்கள் மூலம்  அதாவது அ,இ.,உ,ரு,லு,எ,ஐ,ஒ,ஔஒன்பது  உயிர் குறில் எழுத்துக்கள்  ஒன்பது ஸ்தான மதிப்பீடுகளை குறிப்பகும். அதுபோல்  க முதல் ம முடிய 25 அஷரங்கள். க வுக்கு ஒன்று  என்று ஆரம்பித்து ம வுக்கு 25என்பதாகும். அவர்க்க அஷரங்கள் அதாவது எட்டு பிற எழுத்துக்கள் ய விற்கு  முப்பது என தொடங்கி  படிப்படியாக க40,50  என்ற ஹவிற்கு நூறு என்று எண் மதிப்பு உடையன."யுக ரவிபகணா: ரவ் யுக்ரு" என்ற அஷரவரிசைகளின்  மூலம் ஒரு யுக வருஷத்திற்கு சூரியன் நாற்பத்து மூன்று லட்சத்துஇருபதாயிரம்  முறை  சுழல்கிறது என்று  குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.(43,20000) இது போல கோள்களின் சுழற்சி காலகணக்குபோன்ற  பல வானியல் அளவைகள்  அஷரங்கள் மூலம் குறிக்கப்பட்டுள்ளது. நடக்கும்  யுக  ஆரம்பத்தில்  புதன்கிழமை மேஷ ராசி சூரியோதய நேரத்தில்  இலங்கை நகரத்தில் கிரகங்களின் சுழற்சியும் ஆரம்பித்தது என்று ஆரியபட்டீயம் கூறுகிறது.

ப்ரஹம தினமான கல்ப காலம்  =14மனுக்கள்
1மனு =74யுகங்கள
1 கல்பம்=72*14=1008.யுகம்.குரு தினமான வியாழனன்றுதொடங்கிய கல்பகாலம் கலியுக ஆரம்பம் வரை சென்ற காலஅளவை ஆறு மனுக்களும் 27 3/4

Monday, March 7, 2016

இராகு கேது


ஜோதிடத்தில் பார்க்கும்போது பூமியானது சிறிது நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகிறது. அதுபோல்சந்திரனும் பூமியை சுற்றுகிறது.சந்திரன் தனது பாதையில்பூமியை இரு இடங்களில்  சந்திக்கின்றன.சந்திரன் மேல்நோக்கி செல்லும்போது பூமியின்கதியில் குறுக்கிடும் இடம் இராகு எனவும் சந்திரன்கீழ்நோக்கி சற்றும்போது பூமியின்கதியில் குறுக்கிடும் இடம் கேது எனவும் பெயர்பெறும். எனவே இராகவும்கேதுவும்நிழல்கிரகங்களாகும். இவை இரண்டும் பூமிக்கு மேலும் கீழும் ஒரே நேர்கோட்டில்  அதாவது 180degree  வித்தியாசத்தில் உள்ளதால் எதிரெதிராக அமைகின்றன.
நவகிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும்,புதனைவிட குருவும் குருவைவிட  சுக்கிரனும்   , சுக்கிரனை விட சந்திரனுக்கும், சந்திரனை விட சூரியனுக்கும்  இவர்கள் அனைவரைவிட இராகுவும் கேதுவும் பலம் பொருந்தியவர்கள்.இதை நைசர்க்க பலம் என்பர். சந்திர சூரியரையும் பலம் இழக்கும்படியாகவும்    ஔி குன்றும்படியாகவும் கட்டுபடுத்தும் ஆற்றல் இராகு கேதுவுக்கு உண்டு. இராகுவுக்கு எந்த இடமும் சொந்தமில்லை.இராகு கேது எந்த இடத்தில் இருக்கிறார்களோ, எந்த கிரகத்தினால் பார்க்க படுகின்றார்களோ, எந்த இடத்தின் சேர்க்கை பெற்றுள்ளதோ அந்தஇடத்தின் பலன்களை முழுமையாக தருவார்கள்.யோக்காரனாக இராகுவும்,மோட்சகாரனாக கேதுவும்   விளங்குகிறார்கள். மேஷம்,ரிஷபம்., கடகம்., கன்னி மகரம் ஐந்திடங்களில் இராகு இருப்பது அவருக்கு கேந்திரங்களில்  கிரகம் இருந்தால் ஜாதகர்  சீமானாகவும்  அரசருக்கு ஒப்பாகவும் இருப்பார்.
ராகு நல்ல இடத்தில் இருந்தால் நல்ல மனைவி நல்ல வேலைக்காரர்கள் ஆட்சி  மற்றும் செல்வாக்கு அமையும். ஆங்கிலம்,உருது போன்ற அன்னிய மொழியில் தேர்ச்சி பெற இராகுவே காரணமாகிறார். மருந்து, இரசாயனம்,நூதன தொழில் நுட்பக்கருவிகள்,நவநாகரீகத்திற்கு  இராகுவுடன் சேர்ந்த சுக்கிரனே காரணம்.அரசியல் செல்வாக்கு ஆட்சி ஆகியவற்றுக்கு இராகு அனுக்கிரகம் தேவை.மந்திரஜாலம் இந்திர ஜாலம் கண்கட்டி வித்தை போன்றவை இராகுவின் அனுகிரகத்தால் கிட்டும்.ஆனால் இராகு தோஷமுடையவராக இருந்தால் மிக கொடூர பலன் விளையும். சூரியனை விட செவ்வாயும்,செவ்வாயை விட சனியும் சனியை விட இராகுவும் கேதுவும் கொடூரமானவர்கள்.
            அமரபாரதியிலிருந்து.

ஜோதிஷம் தொடர்ச்சி


நவீன ஷேத்திர கணித கிரந்தமாகிய யூக்ளிட் நடுவில் உள்ள 7,8,9,பாகங்கள்காணவில்லை. ஆனால் ஸமிஸ்கிரத்திலுள்ள  பன்னிரண்டு புத்தகங களும் நமக்குகிடைத்துள்ளன. பாஸ்கராசாரியாருக்கும் முந்தியவராகமிஹிரர்  எமுதிய ப்ருஹத் ஸம்ருதை ,இது  ஜாதகம்  சகல சாஸ்திரங்கள் மற்றும் விஞ்ஞானத்திற்கு digest.
பூமியை சூரியன் சுற்றுகிறது என மேல் நாட்டுகாரர்கள் நம்பினர்.இதனைமறுதது ஆராய்தவர்களை நெருப்பு வைத்து கொன்றனர்.. ஆனால் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை "லாகவ  , கௌரவ நியாயம் என்று  பெயரில் ஆரியபட்டர் விவரித்திருக்கிறார். லகு என்பது  சிறியது லேசானது என்றுபொருள். லகுவிற்கு எதிர் பதம் கனம் .குரு கனமானது பெரியது.குருவான  சூரியன் தான் பெரியது.லகு பூமி ..குருவை லகு பிரதஷணம் செய்யும்என்பதே லாவக  கௌரவ நியாயம்.அதன்படி சூரியனைதான் பூமி சுற்றிவரவேண்டும் என்கிறார்.
ஸம்ஹிதா ஸ்கந்தம் என்ற பிரிவில் ஜலம் எங்கே ஓடுகிறது, பூமிக்குள் எங்கே நதியாக எங்கே போகிறது,உள்ளே ஜலம் இருப்பதற்கு  மேலே என்னஅடையாளம் இருக்கும் ஆகியவை குறிப்பிடபட்டுள்ளது. வாசனை திரவியங்கள்செய்யும் முறை ,வீடுகட்டும் அளவு., சகுன சாஸ்திரம் நிமித்த சாஸ்திரம் இதில்சொல்லப்பட்டுள்ளது. பஷிவலமிருந்து இடம்போனால் இன்ன பலன் இன்ன பஷி கத்தினால் இன்ன விளைவுஎன்று சகுன சாஸ்திரம் கூறும்.

கணித்தை யும் கிரககதிகளையும் சொல்வது ஹோரை அல்லது ஜாதகம்.நிமிதம் என்பது வரபோவதை ஏதோ ஒரு தினுசில் அடையாளம் காட்டுவதற்கு பொது பெயர். அதில் சகுனம் ஒருவகை. பஷிகளால் ஏற்படும் நிமித்தங்கள் எனபடும்.உலகத்தில் ஒன்றுககொன்று சம்ந்தமில்லா வஸ்து ஒன்றும் இல்லை.உலகத்தில்  நடக்கின்ற எல்லாம் ஒரே கணக்காக நடக்கின்றன. கைரேகை, ஆரூடம், கிரகநிலை  முதலியஎல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. பஷி வலமிருந்து இடம் போனால் இன்ன பலன்.இன்னபஷி கத்தினால் இன்ன விளைவு ஏற்படும்என்று சகுனசாஸ்திரம்கூறும்.

கணிதத்தையும் கிரககதிகளையும் சொல்லுவது ஸித்தாந்தம் தனித்தனியாக மனிதனுடைய சுகதுக்க பலனை சொல்வது  "ஹோரை அல்லது ஜாதகம்.வராஹமிஹிரரின் ப்ருஷத் ஸம்ஹிதையில்இவர் நியூடனுக்குமுன்பு சூரியசித்தாந்தத்தில்  ஆரம்பத்திலேயே பூமி விழாமல்லிருக்கஅதன் ஆகர்ண சக்தி இருப்பதை கூறியுள்ளார். ஆதி சங்கரரும் மேலே போகும் பிராணனை  அபானம்  கிழே இழுப்பதாக கூறியுள்ளார்.
ஸ்ருஸ்டி தொடக்கமான கல்பாரம்பத்தில் எல்லா கிருஹங்களும் ஒரே நேர்கோட்டில்இருந்தன.கலம் ஆகஆக  கொஞ்சங்கொஞ்சமாக மாறிக் கொண்டேவருகின்றன. மற்றொரு  கல்பராரம ம்பத்திலும் மறுபடியும்  நேராக வந்துவிடும்.நாம் செய்யும்  கர்மாக்களின்முதலில் சொலலம் ஸங்கலபத்தில் பிரபஞ்சவர்ணணை கால அளவு என்றெல்லாம்  சொல்லபடுகின்ற அவ்வளவும் ஜ்யோதிஷ விஷயம்தான். பூமியின் ஆகர்ஷணம் மட்டுமல்ல பூமி சுற்றுவதையும்  ஆர்யபட்டர்,வராகமிஹிரர் சொல்லியிருக்கிறார்கள். 

Sunday, March 6, 2016

ஜோதிஜ சாஸ்திரம்

 மஹா ஸ்வாமிகளின் உபதேசம். அமரபாரதி புத்தகத்திலிருந்து.ஜோதிஷம் வேதத்தின் கண். இது மூன்று ஸ்கந்தங்களை கொண்டது. கர்க்கர், நாரதர், பராசர் இயற்றிய ஜோதிக ஸம்ஹிதகைள் உள்ளன. .ஸுரியன் அசுர தச்சன் மயனுக்கு உபதேசித்துள்ளார்.வைதீக காரியங்கள் செய்ய இன்னன்ன கிரகம் இன்ன இடத்தில் இருக்கவேண்டுமென்று விதி உண்டு. நாள்பார்பது .,முகூர்த்தம் வைப்பதுகிரகங்களின்நிலைகளை ஒட்டிசெய்வதால் கண்ணாக கருதப்படுகிறது.இதில் கணிதமும்சேர்ந்துள்ளது. 
மூன்று பிரிவுகளில் அரித்மெடிக்,ட்ரிகனாமெட்ரி, ஜியாமெட்ரி, அல்ஜிப்ரா இவை சித்தாந்த கிரந்தம்.ஸித்தாந்த கிரந்ததில் கல்ப சாஸ்திரத்தில் சுல்ப ஸுத்திரம் என்ற ஒரு பாகம் உண்டு. இதில்யஞ்யங்களை பற்றிசொல்லும் போது  யக்ஞம் செய்ய வேண்டிய சாலையில் யகஞயவேதி எப்படிகட்டவேண்டும்என்பன போன்ற அளவு முறைகள் திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளன. யக்ஞ பூமி அமைப்புக்களுக்கு சயனம் என்று பெயர். சயனங்கள் அமைக்க சூளைளை போடும் விதம் இத்தனை அளவுள்ள 

Saturday, March 5, 2016

ஜெயகாந்தன் தொடர்ச்சி

நாளந்தாக்கு இணையான காஞ்சி சர்வகலாசாலையில்  ஸமிஸ்கிருத பேரறின்யர்கள் தமிழரர்கள் ஆசான்களாய் இருந்திருக்கிறார்கள். தர்க்கசாத்திரத்தின் பிதாமகராக கருதப்படுகின்ற திங்கநாதன் ஒரு தமிழனே . இந்து சனாதனத்தின் பெருமையை கொடிகட்டி நாட்டி ெபௌத்ர்களயையும் நாத்திகர்களயையும் தனது வாதததால் ஞானவன்மையால் வென்று உபநிஷத் செல்வங்களை உலகுக்கு அளித்த ஆதிசங்கரர் ஒரு தமிழனே.
ஸமஸ்கிருதபகைமை என்று பிரிட்டிஷ்காரர்கள் செய்த சூழ்ச்சியின் விளைவு.அந்த வீழச்சியுற்றகாலத்தில் தோன்றிய  மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை காலத்தில் வடமொழி பகைமை என்ற விழாதி நம்மை பீடிததது.
நமமை விட பலவீனமான ஒரு கலாசாரம் நவீனவிஞ்ஞான உதவிகளுடன் பலாத்கார  முறையினால்  நமமை அடக்கி ஆண்டது. இந்தியாவின் உண்மையான புராதான கலாசாங்களை காட்டு மிராண்டிதனம் என்று ஆங்கில நாட்டுமூடர்கள் நமமை பற்றி சரித திரம் எழுதினர். அதை நம நாட்டு அடிமை அறிவாளிகள்  கற்றார்கள்.
அந்நியர்கள் மாதிரி ஆடையணிந்து கொண்டு  இந்த உஷ்ண பிரதேசத்தில் திரிவதற்கு வெட்க படாத தமிழர்கள், நமது கலாசார பண்புகளில் ஒன்றான திருநீரணிதல் ,திருமண்இடுதல் ஆகியவற்றுக்கு வெட்கபட்டதுமல்லாமல் அவற்றைய் பரிகசித்து ஏளனமும் செய்தார்கள்.
இந்த செய்கை பகுத்தறிவின்பாற்பட்டது என்று அவர்கள் நம்பினார்கள்.இது சமுகவாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகின்ற அநாகரீகம்என்றுகூட அவர்களுக்கு புரியவில்லை.
கடவளை எல்ல மதத்தினரும் நம்புகின்றார்கள்.மதங்கள்  மார்க்கங்களே. அல்லாஹ்என்பதற்கு கடவுள் என்றே பொருள்.கடவுளைநம்புகிறவர்கள்.முட்டாள்என்பதுஏதோ   பிராமணர்களைமட்டுமே  பழிக்கிறதுஅல்ல. ஏசுவும் நபி நாயகமும்காந்தியும் கடவுளை நம்பியவர்கள் என்பதேநினைவிற்கு வருவதில்லை.
கடவளும் குழந்தைகளும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பான்மை குடும்பத்திலிருந்து பெண்கள்   வளியேறி போயிருப்பார்கள்இவ்விருண்டின் நம்பிக்கையால் மட்டுமே பெண் தன் துயரங்களை மறந்து வாழ்கிறார்கள்.

Friday, March 4, 2016

Ramar birth according Hindu calander

வால்மீகி  ராமாயணத்தில் பாலகாண்டத்தில்
பததொன்பதாவது சர்க்கம் எட்டு..,ஒன்பது   ஸ்லலோகத்தில் ஸ்ரீ ராமர் சித்திரை மாதம் ஒன்பதான் தேதி  பிறந்தார். வானில் சூரியன்  மேஷத்திலும் சனி துலாமிலும்   குருகடகத்திலும்   சுக்கிரன் மீனத்திலும்   செவ்வாய் மகரத்திலும் அமாவாசயைிலிருந்துஒன்பதாம் நாள்கடகலக்னத்தில் சந்திரன் புனர்வசுவிலும் இருந்ததாக  வால்மீகிஎழுதுகிறார். இடம் அயயோத்தி என்று  வைத்து து கி.மு.   5114 ம் ஆண்டு பத்தாம்   தே தி ஜனவரி மத்ிதியம் பன்னிரண்டுலிருந்து ஒன்று குள் பிற நதார் 

ராமர் தனது பதிமூன்றாம் வயதில்  அயோத்தி விட்டு விஸ்வாமித்திரருடன்  தபோபவனத்தில்  இருந்தார் . பின் மி திலை செனறு சீதையை  மணந்தார்.  தற்பபோது ஆராய்ச்சியில் சிருங்கி ஆஸ்ரமம்,ராம்காட், தட்காவனம்.,சித்தாசிரம்  கௌதாஸ்ரமம் ,ஜனகபுரி.சீதாகுண்ட்ஆகிய இடங்கள்  ராமரின் வாழ்கை நிகழ்வுகளை குறிக்கும்   வகையையில் நினைவு  சின்னங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.    
ராமர் வனவாசம் சென்றதை அயோத்தியா காண்டம் ;சூரியன் ,செவ்வாய் ,ராகு ஆகியவை தசரதரின் நஷத்திரத்தில் கூடியதால் தனக்கு மரணம் நேருரும் என்று அறிந்து ராமருக்கு பட்டம் சூட்ட விழைந்தார் .இந்த கிரகநிலை .;தசதரருக்கு  ரேவதி நட்ஷத்திரம் மீனராசி. அந்த தேதி  கி.மு.5089 5
ஜனவரி .ராமர் காட்டுக்கு  போன போதுஅவரது வயது இருபத்தைந்து
கி.மு.வில் வருடத்திற்கு பத்து மாதங்கள் தான். நமது தசமி டிசம்பர்,நவமி லத்தினில் நவம் ,அஷ்டமி ஆக் டோா., அக்டோபர். சப்தமி செப்டம்பர்.பிற்காலத்தில் ஜுலை ஆகஸ்டு சேரத்து பன்னிரண்டு மாதங்களாயின.இந்த கணக்கில் கி.மு. பதிமூன்று வருட வனவாசத்தில் கர்னதூஷனன்என்ற அசுரனுடன் பபோரிட்ட தினம் சூரிய கிரகனம்,அமாவாசை. இது கி.மு.  5077 October7 5076 December 4thராமர்  ராவணனை வததைத்த தினம் . ராமர் வனவாசம்  முடிந்து அயோத்தி திரும்பிய நாள் சித்திரை மாதம் சுக்ல பஷ்ஷம் நவமி கி.மு.5075 January 2.

ி.மு.வில் வருடத்திற்கு பத்து மாதங்களே.பிற்காலத்தில் ஜூலியர் ஸீசர்,இரண்டு மாதங்களை சேர்த்து ஜூலை ஆகஸ்டு சேர்த்து பன்னிரண்டு மாதங்களாயின.அந்த கணக்கில் சித்திரை மாதம் ஜனவரி என்று  கொண்டனர்.கி.மு. 5075.
December  dasami

ஜெயகாந்தன் மதங்களைப் பற்றி

மஹாபாரதம் என்பது தொன்மயையானகதை .அந்த தொன்மைகால நகரிகத்துக்கு மாறான இன்றை்ககுநவீனமாகஇருக்கின்ற சிந்தனகைளும் கருத்துகளும் அதில்இருக்கின்றதே அதனடைய இதிகாச சிறப்பு .காலகாலமாய் கர்ண பரம்பரம்பரயையாய் மனிதவாழ்கயைால்பணேபட்டு  வந்த கதகைளும், தர்மசீலங்களும் இலக்கியம் என்று ஒன்றுததோன்றுவதற்கு முன் மனித ரசனயையில் இடம் பறெறற்றுவிட்ட நாயகன் நாயகிகளும் ஒரு குறிபிட்ட காலத்தில் ஒரு வியாசர் தன்மதேமையால் சில தர்மங்களை ததொகுத்து அருளியதே  மஹாபாரதம்.
நமது காட்டு மிராண்டிதனத்துக்காே நமது வறுமகை்கோ பிராமணர்கள் காரணமல்ல .பிராமண தர்மங்களும்  காரணமல்ல. இந்த பொது வீழ்ச்சிக்கு பிராமணர்களும் பலியாகியே இருக்கிறார்கள்.அதன் காரணமாக பலரின் வசகைக்கு ஆளாகிியிருக்கிறார்கள்.
அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கில கல்விமான்களாய் ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய் அறிவற்ற விதசேசி மானேனிகளாய் வாழ்ந்த பிராமணர்களை கடுமயைாக எதிர்தான் பாரதி.பிராமணியத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்தார்.
நமது சமுகம் புதுமயையுற வேண்டும்.அதற்கு பொருள் ஆங்கில பாணியில் அதை மாற்றுவது  அல்ல.நமது  பரருமையை  நாம் அறிந்து கொள்ளாமல் முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும் மூண்டிருக்கும் இந்நாளயஇகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றி பின்னர் நாடுறு  பெற்றி யை அறிய முடியாது. 

ஸம்ஸ்கிரதம் என்பது  இந்தியாவின்    பாதெது   சொத்தே தவிர எந்த பிரிவினருக்கும்  சாநெந்தமான ஏக பாகே மாழி அல்ல. ஸம்ஸ்கிருத  மொழிக்கெ்னறு  ஓர் இனமோ ஒரு குறிப்பிட்ட நில பரப்போ இந்தியாவில்  தனியாக ஒன்றும்மில்லை.ஒரு இந்திய கல்விமான் தனது தாய்மொழி,அதற்கு இணையாக ஸமஸ்கிருதத்திலும் புலமை மிக்கவனாய் இருந்தான்.அதிலும் தமிழர்கள் ஸமஸ்கிருத மொழியில் பரெரும் புலமை    பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.