ராஜராஜ சோழன் கட்டிய பெருஉடையார் கோவில் மரமோ வேறு உலோகமோ இல்லாமல் 126 அடி உயரம் கருங்கல்லால் 7 ஆண்டு களில் கட்டப்பட்டது.
இவ்வளவு உயரதான கோபுரத்திற்கு அஸ்திவாரம் எத்தனை அடி போட்டுயிருக்கிறார்கள் தெரியுமா? வெறும் பத்து அடிதான்.😲
*•விமானத்தின் மேலே உள்ள 80 டன் எடை கொண்ட உருண்டை கல் ஒரே கல்லால் ஆனது என்பது உண்மையில்லை. பல கற்களை சேர்த்து ஒரே கல்போல் சேர்த்திருப்பது சிற்பியின் திறமை.
- அதன் மேல் தங்கத்தால் ஆன கலசத்தின் உயரம் 9 அடி.
- விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது உண்மையல்ல. நானே நிழல் கீழே தரையில் பார்த்திருக்கிறேன்.
- மகுடாகம முறைபடி ராஜராஜனின் நடுவிரல் சுற்றளவு ஒரு அங்குலம் என்ற கணக்கில் அளவெடுத்து கட்டப்பட்டது. -ஆனந்தி
- நன்றி முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பத்ம பூஷன் Dr. நாகசாமி
No comments:
Post a Comment