Sunday, April 10, 2016

15ம் நூற்றாண்டில் தமிழகம்



விஜயநகரின் மகாமண்டலேஸ்வரராக தமிழகத்தில் திருமலை தேவமகாராஜன் ஆண்டான். பட்டீஸ்வரம்,சத்திமுற்றம் கோபிநாத பெருமாள்கோயில்கள் திருப்பணி செய்தான்.இவன் பெயராலேயே திருமலைராயன் பட்டிணம், கிளை நதி திருமலைராயன் ஆறு உள்ளது.காளமேகப்புலவரின் நண்பராய் ஊக்கம் அளித்தான். இவனுக்கு பிறகு கோனேரிராயன் சோழ, தொண்டை மண்டலத்தை ஆண்டான்.இதே காலத்தில் பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் ஆட்சி நடைப்பெற்றது. பல்லவர்காலத்தில் செல்வாக்கு மிக்க வாணவர்களை மூன்றாம் குலோத்துங்கன் தான் வென்ற பாண்டிய நாட்டுக்கு மன்னராய் வாணவர்குலத் தலைவனுக்கு முடி சூட்டினான். சுந்தர பாண்டியனுக்குப் பிறகு மதுரை, இராமநாதபுரம், கொங்கு  நாட்டை வாணவர்கள் சிறப்பாக ஆண்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் கட்டினர். இக்குலத்தில் வந்த ஜடாவர்மன் குலசேகர பராக்கிரம பாண்டியனை தென் காசியை ஆண்ட பாண்டியனை நரச நாயக்கன் வென்று விஜயநகர பேரரசில் இணைத்தான்.

Saturday, April 2, 2016

அனுஷ்டானம் தெய்வத்தின் குரலிலருந்து


தனிமனிதன் தன்னை தனக்குரிய அனுஷ்டானத்தால்சுத்தப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு தன் வாழ்க்கையை வழிக்காட்டியாக வாழ்வதே இந்து தர்மததின் உயரிய நிலை.
ஸ்நானம் ஐந்து வகை.:
வாருணம்: நதியில் மூழ்கி குளிப்பது.   அப்பு.
ஆக்நேயம்: விபூதி ஸ்நானம்.  விபூதியைகுழைக்காமல் உடல் முழுதும் பூசிக்கொள்ளள். அக்னி.
வாயவ்யம்: பசுக்களின் குளம்படி மண் காற்றில் பறந்து நம் மேல் படல் .காற்று.
திவ்யம். வெய்யிலிருக்கும் போது மழைபெய்தால்   அதில் குளிப்பது . ஆகாயம்.
ப்ராஹ்ம ஸ்நானம்: அபி மந்திரிக்கப்பட்ட தீர்த்த புரோஷணம் ஸ்நானத்திற்கு சமம்.
ஸ்நானத்தின் ஐந்து பகுதிகள்
ஸங்கல்பம், .ஸுக்த படனம், மார்ஜனம் மூழ்கி ஸ்நானம், அகமர்க்ஷமனம், தர்பணம்.ஆற்றின் நீரோட்டம் எந்த பக்கம் போகுதோ அந்த பக்கம் பார்த்து செய்ய வேண்டும். குளத்தில் குளிக்கும் போது சூரியனைப் பார்த து சூரியன்இருக்கும் திசையை பார்தது செய்ய வேண்டும்.சூரியன் இல்லாத இரவு நேரமாக இருந்தால்  கிழக்கு அல்லது வடக்குபக்கம் பார்த்து செய்ய வேண்டும்.பித்ரு கர்மாக்கு மட்டும் தெற்கு.
தியானம் செய்யும் போது பத்மாசனம் சப்பளம் போட்டும் ஆசமனம்  மற்ற காரியம் செய்யும் போது  குந்திக் கொண்டும் செய்ய வேண்டும்.நீரின் அளவு: ஆசமனத்திற்கு உளுந்து மூழ்கின்ற அளவு ஜலம். தரபணத்திற்கு  ஒரு மாட்டு கொம்பு பிடிக்கிற அளவு.

பயத்தம் கஞ்சி சேர்த்த  ஜலத்தில் பட்டு சால்வை, நார்மடி ஆகியவற்றை அமாவாசையன்று துவைத்து நிழலில் காய வைத்தால் இவை நல்ல மடிதான்.


நெருப்பை வாயால் ஊததக்கூடாது.
புருஷன் தீபத்தை  அணைக்கக்  கூடாது.
பெண்கள்  பூசணிக்காய் உடைக்கக் கூடாது.
விவாஹக் காலம், யாதரா காலம் தவிர மற்ற சமயங்களில் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட கூடாது.
மத்தியானம் பால் சாப்பிட கூடாது.
இரவில் தயிர் சாப்பிடகூடாது.
இரவு காலை அலம்பி துடைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.
ஒரு பிள்ளை  விவாக காலத்தில் ஸங்கல்பம் செய்து கொண்டு  கங்கணம் கட்டியபின் அந்த சடங்கு சேஷேஹோமத்தோடு முடிகிறவரையில்  அவனுக்கு சொந்த மாதா, பிதாக்கள்  மரணமடைந்தாலும் தீட்டுகிடையாது.
தீட்டு காலத்தில் எந்த விரதமும் பலனில்லை.ஆனால் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துவாதசி பாரணையில்ஆத்தி கீரை, சுண்டைகாயும் புளிக்கு பதில் எலுமிச்சை, நெல்லிமுள்ளி கட்டாயம் சாப்பிட வேண்டும்.நல்லெண்ணை கூடாது.
தூதுவளை மிகவும்  சிறப்பாக கூறப்பட்டுள்ளது. இதை சாப்பிட்டால் இந்திரிய நிக்ரஹம்  சுலபம்.
மூன்று தலைமுறைக்கு பொதுவான  மூதாதையரில்லாவிட்டால்தான் உறவுக்குள் கல்யாணம் செய்ய வேண்டும்.
கல்யாணமாகாத அக்கா இருக்கும்போது தம்பிக்கு பூணல் போடக்கூடாது.மூன்று  பிரம்மச்சாரிகள் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதுஎன்பதெல்லாம் தப்பு.

Thursday, March 31, 2016

தெய்வத்தின் குரலிலிருந்து குங்குமம்


சுத்தமான் குங்குமம் செய்யும் முறை
முப்பதுதோலா கெட்டிஉருண்டை மஞ்சள். ஒரு தோலா என்பது பத்துகிராம். மஞ்சளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.சம எடை எலுமிச்சை சாறு கொட்டையில்லாமல் எடுக்கவும். இதில் முப்பது கிராம்   வெண்காரமும் படிகாரமும் போடவும்.நன்றாக கரைந்த பின்மஞ்சள் துண்டுகளை சேர்த்து  ஒரு நாளில் இரண்டு மூன்று முறை கிளறி நிழலில்   காயவைக்கவும்.பின் இடித்து வஸ்திர காயம்  செய்யவும்.

Tuesday, March 29, 2016

தெரிந்த கோயிலும் தெரியாத வரலாறும் சிதம்பரம்



கி..பி 726முதல் 775வரை ஆண்ட நந்தி வர்மன் கோவிந்தராசப் பெருமாள் திண்ணை அளவிலமைந்த சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்தான் என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பெருமாளை தில்லை வாழ் அந்தணர்களே பூசித்தனர்.இதை பொறுகாத பிறர்கால வீரவைஷ்ணவர்கள் தில்லையில் நாட்பூசையும் திருப்பணிகளும் நடைபெறாதவாறு தொல்லை செய்தனர்.இரண்டாம் குலோத்துங்கன் திருமால் மூர்த்தியை அப்புறபடுத்தினான் என்று ஒட்டகூத்தர் கூறுகிறார்.இந்த மூர்த்தியை இராமனுஜர் கீழை திருப்பதியில் ப்ரதிஷ்டை செய்தார்.இன்றும் அங்கே உள்ளது. இப்போது தில்லையில் உள்ள கோவிந்தராசப்பெருமாள் அச்சுதராயர் பிரதிஷ்டை செய்தார்.கிருஷ்ணதேவராயர்  காலத்தில் பெருமாள் இங்கு இல்லை.
பெருமாளை பூசிக்க வைணவர்களை நியமித்ததால் அவர்கள் மெல்ல நடராசர் கோயில் இடங்களை கைப்பற்றி கொள்ள முயன்றனர். வெங்கடபதி  தேவமகாராயரின் பிரதிநிதியாக செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கி.பி.1597ல் நடராச கோயில் முதல்பிராகாரத்தில் கோவிந்தராசருக்கு தனி  கோயில் அமைக்க தொடங்கினான்.இதை தில்லை வாழ்அந்தணர்களும் பொதுமக்களும்  முன்பிருந்த இரண்டாம் பிராகாரத்திலேயே பூசை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் அவ்வதிகாரி பெருமாள் சன்னதியை நடராசர் சன்னதிக்கு அருகிலேயே அமைக்கத்தொடங்கினார். இதை எதிர்த்து தாங்கள் உயிரோடிருக்கும் வரை நடராசர் கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராச பெருமாள் கோயில் கட்ட இணங்க மாட்டோம் என்று ஒருவர் பின் ஒருவராக கோபுரத்தின் மேலேறி கீழே வீழ்ந்து உயிர் விடடனர். இவ்வாறுஇருபது பேர் தற்கொலை செய்து கொண்டனர்.இதை கண்டும் மனமிறங்காத கொண்டம நாயக்கன் கோபுரத்தின் மேலேறி தற்கொலை சேய்ய முந்துபவர்களை சுட்டு தள்ளும்படி உத்தரவிட்டான்.இவ்வாறு இருவர் சுடப்பட்டனர். இதை பொறுக்காத தில்லை வாழ் அந்தணர் அம்மையார் ஒருவர் தன் கழுத்தையறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதை தமிழ் நாட்டுக்கு சுற்றுபயணம் செய்த பிமெண்டா என்ற பாதிரியார் கொண்டம நாயக்கரின் கொடுமைகளை தனது பயணக்குறிப்பில் எழுதியுள்ளர். இதிலிருந்து தான் விடாக்கொண்டன் கொடா கொண்டன் என்றவழக்கு வந்ததோ?
நந்திவர்மனுக்கு பிறகு அச்சுதராயரும் பரதிஷ்டை செய்ததும் இந்த திண்ணைஅளவு சிறிய இடத்தில்தான்.1597ல் தான் கொண்டம நாயக்கர் தனிக்கோயில் கட்டினார்.இவருக்குப் பின் 1643ல் விசயநகர மன்னன்  மூன்றாம் சீரங்கராயன்  மேலும் விரிவுபடுத்தி புண்டரீகவல்லித் தாயார் முதலிய புதிய சன்னதிகளை அமைத்தார்.இதனால் பல பழமையான  சிவ சன்னதிகள் இடிக்கப்பட்டது. இதனால் கொந்தளிப்புற்ற பொதுமக்களும் அந்தணர்களும் மீண்டும் கோவிந்த ராசப் பெருமாளை அப்புறபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் .1862ல் வைணவரகளுக்கும் தில்லைவாழ் அந்தணர்க்கும் ஒருஉடன்பாட்டுக்கு கையெழுத்திட்டனர்.அதன்படி கோவிந்தராசப் பெருமாளுக்கு செய்துவரும் நித்திய பூசைகளைத் தவிர மற்ற பிரம்மோற்சவம் நடததுவதில்லை என்றும் நடராசருக்கு தொன்றுதொட்டுநடைபெறும் பூசைகளுக்கும் திருவிழாகளுக்கும் தடையாக இருப்பதில்லை என்றுஉறுதி கூறி நீதிமன்றத் தீர்பானது.
தில்லை பெருமான் திருவுருவம் கி.பி. 17நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம்பரத்திலிருந்து இடம் பெயர்ந்து செல்ல வேண்டியதாயிற்று.அந்தணர்கள் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து எவரும் தெரியாவண்ணம் நடமாடமற்ற புளியநதோப்பில் பெரிய புளியமர பொந்தில் பாதுகாப்பாக மூடி வைத்தனர்.தோப்புக்குசொந்தககாரர் பொந்துஅடைக்கப்பட்டிருப்பதையும் அந்த பெட்டியையும் பார்த்தார். நடராசர் மறைக்கப்பட்டிருப்பதை கண்டார். அச்சூழ் நிலையில் மூர்த்தியை எடுப்பது சரியில்லை என்று எண்ணி , கனவில் கடவுள் இங்கு பூசை செய்யுமாறு கூறியதாக ஊராருக்கு கூறி பூை சசெய்துவந்தார். முகமதியர் அச்சநிலை மாறிய பின் அந்தணர்கள் பொந்திலுள்ள சிலையை மீண்டும் எடுத்து பிரதிஷ்டை செய்ய எண்ணி சிலையைத் தேடினர்.இருளிலும் ஆண்டுகள் பலவானதாலும் மறைத்த இடத்தை அடையாளம் கா்ணமுடியாமல் தவித்தனர். மாடு மேய்க்கும்  சிறுவன்தன் எசமானர் இங்கு புளியமரததிற்கு பூசை செய்வதாக சொன்னான். அந்தணர்கள் அவரை அணுகி மீண்டும்நடராசரைப் பெற்று தில்லையில் வைத்து பூசை செய்தனர்.இதை சோழமண்டல செய்யுளிலும் உ.வே.சுவாமிநாதய்யர் எழுதிய "அம்பலபுலி" கட்டுரையிலும் இச்செய்தி உள்ளது..ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைக்கப்பட்டதாகவும்கூறுவர். இச்செய்தி திருவாரூர் செப்பேட்டிலும் உள்ளது.
கி.பி.1684ல் மராட்டிய மன்னன் குலகுருவாகிய முத்தைய்ய தீட்சதரால்குடமுழுக்கு செய்யப்பட்டதென்றும் கேரள காட்டில் மலையருகில் மரபுதரில்  மறைக்கப்பட்டதாகவும் பிறகு நடராசருக்கு தில்லையில் குடமுழுக்கு நடந்ததாகவும் கூறுவர்.
அதாவது கி.பி. (24-12-164 முதல்14-11-1886) வரை  37ஆண்டு  10மாதம் 20 நாட்கள் தில்லையில் இல்லை என்றும் பாண்டிய ந ட்டிற்கு எடுத்து செல்லப்பட்டார் எனவும் குடுமியான் மலையில் நாற்பது மாதங்களும் பின் மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின் தில்லைக்கு எடுத்து வரப்பட்டார் என்றும் எ 1606 இரத்தாட்சி வருடம் கோபால பிருதவி சுரபதியின் வேண்டுகோள்படி சாம்போசி மன்னர் சற்சபைக்கு பொன் வேய்ந்து  1684 லும் 1686லும் குடமுழுக்கு நடந்ததாக கூறுவர். இதை செய்தவர்சி  வாஜிமன்னரின்மூதத மகன் சாம்போஜி.
மீண்டும் ஔரங்கசீபுக்கு பயந்து  1686ல் நடராசப்பெருமான் திருவாரூருக்கு எடுத்துசெல்லப்பட்டார்.மீண்டும் 1696ல் கொண்டு வந்தனர். அவரை திருவாரூரில் வைத்திருந்த மண்டபம் தியாகராசர் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகில் நடராசர் மண்டபம் இன்றும் உள்ளது.அது போல் அவரை எடுத்து சென்ற மரபெட்டி தில்லை பேரம்பலத்தில்இன்றும் உள்ளது.

மீண்டும் ஒரு கணிதப் பாடல்


ம

ஒரு நான்கும் ஈரரையும் ஒன்றை கேளாய்
உண்மையால் ஐயரையும் ஒரரையும் கேட்டேன்
இரு நான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்வாய்
இம்மொழியை கேட்டபடி ஈந்தாயாயின்
பெருநான்கும் இறுநான்கும் பெறுவாய், பெண்ணே
பின்னை ஒரு மொழி புகல வேண்டாம் இன்றே
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
சகிக்க முடியாது இனியென் சகியே மானே..!

நான்கு, ஈரரை, ஒன்று     = 4+(2 *1/2)+1=6  
அதாவது ஆறாவது ராசி கன்னி
ஐயரையும் ஓரரையும்   = (5 x1/2)+1/2=2
மூன்றாவது நாள்  =   செவ்வாய்
செவ்வாய் கேட்டேன்    =   முத்தம் கேட்டேன்.
இரு நான்கு, மூன்று, ஒன்று   =   (2 x4)+3+1=12
பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம்     =பதில்
பெருநான்கு, அறு நான்கு = 4+24 =28
பிரபவவில் தொடங்கும் ஆண்டின் 28 வது   ஜய  =  வெற்றி
சரி நான்கு, பத்து, பதினைந்து   =  4+10+15= 29
  29 வது ஆண்டு மன்மத
கன்னியே கேளாய், முத்தமொன்று கேட்டேன்.உன் பதில் என்ன? கேட்டது கிடைத்தால் எனக்கு வெற்றி. நீயும் செவ்வாய் இல்லையெனில் மன்மதன் செய்யும் கொடுமையை சகிக்க முடியாது.  இப்பாடலை எழுதிய  ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

Saturday, March 26, 2016

ராஜ தரங்கிணியிலிருந்து சில நிகழ்ச்சிகள்அவந்தி வர்மன் தன் காலத்தில் தன் தலைநகரான அவந்திபுரத்தில் அவந்தி ஸ்வாமிகள் என்ற விஷ்ணு ஆலயத்தையும் அவந்தீஸ்வரன் என்ற சிவாலயத்தையும் கட்டினான்இவர்காலத்தில் "சுய்யா " என்ற இளைஞன் கட்டிய பல அணைகளைப்பற்றி கல்ஹணர் மிக விரிவாக எழுதியுள்ளார்.


முதலாவதாக கோபதித்யன் கோநந்த வம்சத்தில்  கி.மு. 371ல் அரியணை ஏறினான். அறுபதாண்டுகள் அரசாண்டான்.கற்றறிந்த அந்தணர்களுக்கு ஸமாங்கஸா, கோல, காகிகா, ஹடி கிராமம்,ஸ்கந்தபுரம் முதலிய அக்கிரஹாரங்களை த்  தானமாக அளித்தான்.கோபா குன்றின் மேல்ஜ்யோஷ்டச்வர் சிவாலயத்தைக் கட்டினான். அதுவே இன்று ஸ்ரீநகரில்ஜீலம் நதிகரையில் உள்ள சங்கராச்சாரியார்  கோவில்.
காஷ்மீரத்தின் பொற்காலம கார்கோடக வம்சம், உத்பல வம்சம் இரண்டும்  அரசாட்சி செய்த ஏழு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையாகும். இவர்களுள் பிரசித்தி பெற்றவர்கள் லலிதாதித்ய ன்கி.பி.724-760 )அவந்தி வர்மன் (855-883 )லலிதாதித்யன் தன்  தலைநகரான பரிஹாஸபுரத்தில் தங்க சிலையுடைய  முக்த கேசவன், வெள்ளி சிலையுடைய கோவர்தனகிரிதாரி என்று நான்கு கோயில்களை கட்டினான்.அவன் கட்டியவற்றில் மிகபிரசத்தி பெற்றது மார்தாண்ட்டின் சூரியன் கோவில்..இன்றும்  அதன் இடிபாடுகள் காண்போரைகளைக் கவர்கிறது.நதிகளில் வரும் வெள்ளங்களால் அவதிபட்ட மக்களின் துயரங்களை தீர்க்க தன்னிடம் ஒரு திட்டமிருப்பதாக தனக்குதானே பேசிக்கொண்டிருந்தான். சுய்யாஎன்ற இவனின் திட்டத்தை கேட்டறிந்தார் அவந்தி மன்னன். அவன் கேட்டபடி பல மூட்டை மொஹரா நாணயங்களையும் படகுகளையும் அரசர் அளித்தார்.படகேறி ஒரு கிராமத்திற்கு சென்று ஒருமூட்டை நாணயங்களை நீரில் கொட்டிவிட்டு திரும்பினான்.இதுபோல் சில இடங்களில் நாணயங்களை நீரில் கொட்டினான். பெரும் துயரத்தில் இருந்த மக்கள் நீரிலஇறங்கி ஆற்றின் இருகரைகளிலிருந்த, மலைகளிலிருந்து ஆற்றில்விழுந்து , அதன்போக்கை நிறத்தியிரந்தபெரும் பாறைகளைஅப்புறபடுத்தி சுய்யாநீரில்கொட்டய  தங்க நாணயங்களைஎடுக்க முயன்றனர்.தடைப்பட்டிருந்த ஆற்றுநீர் வேகமாகஓட தெடங்கியது. ஆற்றுநீரெல்லாம்ஓடிய பிறகு அங்கே அணைச்சுவர் கட்டினான்.நீர மட்டத்தை பலகால்வாய்கள் வழியே நீர்பாசனத்திற்க  வழி செய்தான்.
சுய்யாவின் பணியைப் பற்றி கல்ஹணர் "இப்படிஆதிவராகரைபோல நீரிலிருந்து நிலத்தை மீட்ட சுய்யாஅங்கு பல மக்கள் கூட்டங்கள் வசிப்பதற்கான கிராமங்களை  கட்டினான் ". இன்னும் சுய்யா கட்டிய கால்வாய்களும் அணைகளும் பேசப்படுகின்றன.
காஷ்மீரில் நால்வகை ஜாதி பிரிவில்லை.சதி அல்லது உடன்கட்டை  ஏறும்பழக்கம் இருந்தது.பெண்களுக்குஅதிக சுதந்திரம் இருந்தது.பல பெண்கள் அரசு பட்டமேறிஆட்சி புரிந்தனர்.

காஷ்மீரம் வரலாறும் தல்ஹணரும்


காஷ்மீரம் வரலாறு
முன்னாளில் ஜலோத்பவன் என்ற அரக்கன் இப்பொழுது காஷ்மீர் இருக்குமிடத்தில் சதி சரஸ் என்ற பெரிய ஏரியில் ளிந்து கொண்டான்.காசியப முனிவர் கணவாய் வழியே நீரை வெளியேற்றி அசுரரைக் கொன்று ஏரி இருந்த இடத்தை காஷ்மீர நாடாக்கினார்.காஷ்யபர் ஏற்படுத்திய நாடு காஷ்மீரம்.நீல மத புராணம் காஷ்மீரின் இயற்கை எழில், ஹர முக்தா, நந்தா பர்வதம், அமரநாத்,மகாதேவகிரி,இந்தர நீலம், கௌரி சிகரம் மலைகளின் பெயர்கள், மக்களின் சமூக வாழ்வு., ஆடல் பாடல் பற்றி கூறும் சமூக வரலாறுநூலாகும்.
ராஜ தரங்கிணி காஷ்மீரை ஆணடமன்னர்களின் வரலாற்றைக் கூறும்ஸம்ஸ்கிருத காவியம்.
பஞ்ச பாண்டவர் காலம் கி.மு.1184ல் இருந்து நூல் முடிக்கப்பட்ட 1070சக ஆண்டு அல்லது கி.பி.1148-49.இந்த வரலாறு கி.மு1184 + கி.பி.1149 =2333 ஆண்டு வரலாறாகும்.
கி.மு.1184ஆம் ஆண்டுக்கு முன்னால் ஐம்பத்திரண்டு அரசர்கள் எஎஎஎஆண்டுகள் காஷ்மீரை ஆண்டனர்.ஆனால் போதிய வரலாற்று சான்றுகள் இல்லை. எனவே மஹாபாரதத்தோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியையும் இதன் ஆசிரியர் கல்ஹணர் சொல்லுகிறார்.
கோநந்த வம்சத்தின் முதல் மன்னாகிய கோநந்தனின் உறவினன் ஜராசந்தன். இவன் திருதிராஷ்டனின் மகளை மணந்தவன்.இவன் மதுராபதி கிருஷணனை எதிர்க்க கோநந்தனின் உதவியை நாடினான்.வடமதுராவை முற்றுகையிட்ட கோநந்தன் யாதவ படையால் கொல்லப்பட்டான்.அவனது பேரன் மூன்றாம் கோநந்தனோடு வரலாற்று நூலை கி.மு.1184லிருந்து தொடங்குகிறார்.
ஒரு வரலாற்றை எப்படி எழுதப்பட வேண்டும்என்று கல்ஹணர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்."வரலாற்று நிகழ்ச்சிகளை பாரபட்சம் இன்றிவருப்பு வெறுப்பு இன்றி வரலாற்றுசெய்திகளுக்கு தகுந்த ஆதார சான்றுகளுடன் சிக்க்கலின்றி தெளிவாகஇருக்க வேண்டும்". ஒவ்வொரு தரங்கம் முடிவிலும் சம்பக பிரபுவின் மைந்தர் கல்ஹணர் என்று காணப்படுவதால் தந்தையின் பெயர்  சம்பகர் , பிரபு வம்சத்தவர் என்று தெரிகிறது. நந்தி ஷேத்திரம் என்ற சைவத்தலத்தில் சம்பகபிரபு தான் வருஷம் முழுவதும் ஈட்டிய செல்வத்தை ஏழுநாட்கள் நற்பணியில் செலவிட்டார் என்பதால் இவர் ஒரு சைவர் என தெரிகிறது.
ராஜ தரங்கிணியில் எட்டு தரங்கிணிகள் 7826 பாடல்கள் உள்ளன.
இதில் காஷ்மீரை ஆண்ட முதல் வம்சமான கோநந்த வம்ச மூன்றாம் கோநந்தனோடு தொடங்கி அடுத்து வந்த விக்ரமாதித்ய வம்சம்., ஹுனர் வம்சம்,குஷானர், மௌரியர் வம்சம். அதன்பின் மீண்டு வந்த கோநந்தா, பின் வந்த புகழ் பெற்ற கார் கோடக வம்சம் என்ற நாக வம்சம், உத்பல வம்சம் பின் வந்த பல வம்சங்கள் பற்றிய விவரங்கள் தருகின்றது.
இந்து பௌத்த சமயஙகள் இரண்டும் நல்லிணக்கத்தோடு பல நூற்றாண்டுகள் வாழ்தது.அசோகர் கட்டிய நூற்றுக்கணக்கான புத்த விஹாரங்கள், அவர் கட்டிய "ஸ்ரீநகர்" பற்றிய செய்திகள்., நல்லாட்சி செய்யாத கொடுங்கோல் மன்னர்கள் கூட புத்த விஹாரங்களும் சிவாலயங்களும் கட்டிய செய்தி, வீரப்போர்கள், நயவஞ்சங்கள்,அரண்மனை சூழ்ச்சிகள், சதிகள் இன்றும்் நிலைத்து நிற்கும் பல பொது நலப் பணிகள் என்றுபலவற்றையும் கல்ஹணர் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டே ஆண்டுகளில் எஎஎஎ ஆண்டு வரலாற்றை தொடர்ச்சியாக அதிகமாக குறை சொல்லமுடியாத வகையில் வரலாறும் காவியமுமாக இணைந்த நூலாக செயற்கரிய செயலாக படைத்தார்.
எல்லா மன்னரகளுடைய ஆட்சிகாலங்களும்இத்தனை ஆண்டுகள், மாதங்கள்., சில இடங்களில் நாடகள் கூட துல்லியமாக குறிப்பிட்டுள்ளார்.