Sunday, July 21, 2024

தெரிந்த கோவில் தெரியாத விவரம்

 ராஜராஜ சோழன் கட்டிய பெருஉடையார் கோவில் மரமோ வேறு உலோகமோ இல்லாமல் 126 அடி உயரம் கருங்கல்லால் 7 ஆண்டு களில் கட்டப்பட்டது.

இவ்வளவு உயரதான கோபுரத்திற்கு அஸ்திவாரம் எத்தனை அடி போட்டுயிருக்கிறார்கள் தெரியுமா? வெறும் பத்து அடிதான்.😲


*•விமானத்தின் மேலே உள்ள 80 டன் எடை கொண்ட உருண்டை கல் ஒரே கல்லால் ஆனது என்பது உண்மையில்லை. பல கற்களை சேர்த்து ஒரே கல்போல் சேர்த்திருப்பது சிற்பியின் திறமை.

  • அதன் மேல் தங்கத்தால் ஆன கலசத்தின்  உயரம் 9 அடி.
  • விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது உண்மையல்ல. நானே நிழல் கீழே தரையில் பார்த்திருக்கிறேன்.
  • மகுடாகம முறைபடி ராஜராஜனின் நடுவிரல் சுற்றளவு ஒரு அங்குலம் என்ற கணக்கில் அளவெடுத்து கட்டப்பட்டது.  -ஆனந்தி
  • நன்றி முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பத்ம பூஷன் Dr. நாகசாமி

தெரிந்த போவில் தெரியாத விவரம்

 தெரிந்த கோவில் தெரியாத விவரம்

தஞ்சை கோவிலை யார் கட்டினார் என்பதே 19ம் நூற்றாண்டுவரை யாருக்கும் தெரியாது. கரிகால சோழன் என்றும் ,இல்லை காடுவெட்டி சோழன்(?),இல்லை கிருமிகண்ட சோழன் என்றும் கதைகள் சொல்லிவந்தனர். இன்னும் சிலர் இதை மனிதன் கட்டமுடியுமா?! பூதம் வந்து கட்டியது என்று உருட்டிவந்தனர். 

1887ல் Dr. Hultzsch என்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் தஞ்சை வந்து ராஜராஜ தேவர் “தாம் எழுப்பிய ராஜராஜேசுரம் கோவில் “ என்ற கல்வெட்டை கண்டுபிடித்து 1907 South Indian inscription  என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஒரு தமிழன் கட்டிய பிரம்மாண்ட கோவிலை ஒரு வெளிநாட்டவர் யார் கட்டினார் என்று சொல்ல வேண்டியிருந்தது.😔

அவர் சொல்லும் வரை தமிழனுக்கு ஒரு தமிழ் மன்னர் கட்டிய பெரிய கோவிலை கட்டியவர் யார் என்று அறியும் ஆர்வம் இல்லை. வாழ்க தமிழன்.

Friday, June 21, 2024

நாம்சி மறந்த புராண பெயர்கள்

  பாரத்த்தின் முக்கிய ந்திகளின் பெயர்கள் இன்று அயல்நாட்டவரால் மாற்றப்பட்டு அதன் உண்மையான பெயர் மாற்றப்பட்டு மறக்கப்பட்டன. பாரதம் இந்தியாவானது போல்.

பாரத்த்தின் வடக்கே ஓடும் சப்த ந்திகளான

சிந்து - இந்தஸ்

விதஸ்தா - ஜீலம்

அஸிகினி - சீனாப்

விபாஸா -பியாஸ்

சுதித்திரி - ஸட்லஜ்

ஐராவதி - ராவி

சரஸ்வதி .

சிந்து சரஸ்வதி தவிர மற்றவை நாம் இதுவரை கேள்விபடாத்து போல் இருக்கிறதே!

இமயத்தின் உயரமான சிகரம் ஏதோ வேற்றுநாட்டவர் பெயர் கொண்டு எவரெஸட் ஏன் என்று தேடியபோது முதலில் இதில்ஏறியவன் தன் “பாஸ்” இன் பெயரை வைத்திருப்கிறான். தேடியபோது இந்த சிகரத்திற்கு “ஸாகரமாதே” என்று பெயர். இதற்கு மேகங்களை நெற்றியாக கொண்டவள் என்று அர்த்தமாம். இந்த பெயரிலேயேதான் இன்றும் அப்பகுதி நேபாள மக்கள் அழைகின்றனர். 

புஷ்பபுரம் இன்று பெஷாவர்

மூலஸ்தான் இன்று முல்தான் ஆனது.