தெரிந்த கோவில் தெரியாத விவரம்
தஞ்சை கோவிலை யார் கட்டினார் என்பதே 19ம் நூற்றாண்டுவரை யாருக்கும் தெரியாது. கரிகால சோழன் என்றும் ,இல்லை காடுவெட்டி சோழன்(?),இல்லை கிருமிகண்ட சோழன் என்றும் கதைகள் சொல்லிவந்தனர். இன்னும் சிலர் இதை மனிதன் கட்டமுடியுமா?! பூதம் வந்து கட்டியது என்று உருட்டிவந்தனர்.
1887ல் Dr. Hultzsch என்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் தஞ்சை வந்து ராஜராஜ தேவர் “தாம் எழுப்பிய ராஜராஜேசுரம் கோவில் “ என்ற கல்வெட்டை கண்டுபிடித்து 1907 South Indian inscription என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஒரு தமிழன் கட்டிய பிரம்மாண்ட கோவிலை ஒரு வெளிநாட்டவர் யார் கட்டினார் என்று சொல்ல வேண்டியிருந்தது.😔
அவர் சொல்லும் வரை தமிழனுக்கு ஒரு தமிழ் மன்னர் கட்டிய பெரிய கோவிலை கட்டியவர் யார் என்று அறியும் ஆர்வம் இல்லை. வாழ்க தமிழன்.
No comments:
Post a Comment