Thursday, December 7, 2023

காலனும் காலமும்

 விக்கிரமாதித்யன் காலத்திலேயே உஜ்ஜைன் பல்கலைகழகத்தில் பிரம்ம குப்தர். பூஜியத்தை கணிதவியலில் சேர்த்தார். ஆரியபட்டரும், பாஸ்கர பட்டாசாரியரும் லீலாவதி கணிதம் போன்ற முக்கிய கணித நூல்களை எழுதினர். பாரத்தில் சூரியன் முதலில் உதிக்கும் இடத்தை அருணாசல பிரதேசம் எனவும் மறையும் இடத்தை அஸ்தாசலம் என்றும் கூறினர். ( இன்று மேற்கு ஆப்கானிஸ்தானுக்கும் கிழக்கு ஈரானுக்கும் நடு பகுதி). விக்ரமாதித்தன் தன் பெயரால் விக்ரம ஆண்டு(era)துவங்கினான். அவருக்கு பின் வந்த சாலிவாகன்ன் தன் பெயரால் சாலிவாகன சகாப்தம் என்ற காலளவை( calendar ) த்தொடங்கியது. இருவரும் உஜ்ஜைனின் சக்கரவர்ததி கள். இதற்கும் முன் கால அளவு இருந்ததுதானே! காலேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் உஜ்ஜெய் பூமியின் தொப்புளாகவும் இங்குதான் செவ்வாய் கிரகம் உண்டானதாகவும் கருதப்படுகிறது. 

காலனுக்கும் காலன் மகாகாளேஸ்வர் என்பதை உணர்த்தும் கதைதான் மார்கண்டேன் கதையோ!

பிரம்மமே ஓர் உருவிலிருந்து மூவுருவாகி படைத்தல் காத்தல் அழித்தல் செய்வித்தது. படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மா. இந்த பூமியை படைத்தவர் பிரம்மாதான் சூரியனையும் மற்ற கிரகங்களையும் படைத்தார்.

நமது காலஅளவுகள் எந்த மஹானின் பிறந்த நாளையோ மற்ற சம்பவங்களை கொள்ளாமல் காலத்தின் அடிப்படையில் கிரகங்களில் இயக்கங்களின் அடிப்படையில் உண்டாகப்பட்டது. இதன் படி பூமியின்  வாழ்நாள் 432 கோடி ஆண்டுகள். இதுவே ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம். இப்படி ஆயிரம் மகாயுகம் பிரம்மாவின் பகல். இது போல் ஆயிரம் மகாயுகம் ஒரு இரவு. இதில் பகலில் படைப்பும். இரவில் படைப்பு அடங்கும் பிரளயமும் ஏற்படும்.இப்படி 365 நாட்கள் ஒரு வருடமும் 100 வருடம் அவர் ஆயுட்காலம்.(864x 365x100). அதன் பிறகு படைப்பு இல்லாமல் சகல கிரகங்களும் பிரபஞ்சமும் இல்லாமல் போகும். பிரம்மம் மட்டும் இருக்கும். அவர்தான் மஹாகாலேஷ்வரோ!

மீண்டும் பிரம்மம் மூவுரு கொண்டு புதிய பிரம்மாவைக் கொண்டு படைப்பு தொடங்கும்.

எனவே புணரபி ஜன்னம் புரணபி மரணம் என்பது சூரிய சந்திர கிரகங்களுக்கும் நம்மை படைக்கும் பிரம்மாவிற்கும் உண்டுதானே!!!!!

கடைசியாக துஷ்யந் ஶ்ரீதர் சொன்ன ஒரு குட்டி கதை.

ராமர் திரும்பி வைகுண்டம் செல்லும் முன் அனுமானிடம் ஒரு கணையாழியை கொடுத்தார். அதை வாங்கி கண்ணில் ஒற்றியதும் உருண்டு ஒரு பிளவிற்குள் சென்று மறைந்தது. ராமர் வருந்தாதே அது பாதாளலோகத்தில் மஹா பலியிடம்தான் உள்ளது, சென்று பெற்றுக் கொள் என்றார். அனுமனும் ்அங்கு சென்று  மஹாபலியிடம் மோதிரத்தைப் பற்றி கேட்டார். ஆம். அது இங்குதான் இருக்கிறது என ஓர் அறையின் கதவை திறந்து உன்னுடையதை எடுத்துக்கொள் என்றார். அறையின் உள்ளே மோதிரங்கள் மலைபோல் குவிந்திருந்தன! வியந்து அனுமான் மஹாபலியை பார்க்க, அவர் ஒவ்வொரு ராமவதாரம் முடியும்போதும் உனக்கு கொடுத்து போல் ராமர் அனுமாருக்கு கொடுப்பார். அவை யாவும் உன்னுடையது போல் உருண்டு இங்குதான் வரும் என்றாராம். எத்தனையோ மொழிகளில் ராமாயணம் போல் ஒவ்வொரு திரேதா யுகத்திலும் ஒரு ராமவதாரம் உண்டல்லவா😁

 காது

செவிச் செல்வம்

நம்ம நாட்டுல பிறந்த குழந்தைக்கு ஆண் பெண் யாராக இருந்தாலும் முக்கியமான முதல்சடங்கு அல்லது விழா காது குத்து கல்யாணம் என்கிற காதணி விழா தான். எல்லா குலத்திலும் எல்லா தட்டு மக்களும் இமயமுதல் குமரி வரை ( இந்து மக்கள்) அந்த விழா உண்டு.

ஆனால் தன்னை ஏமாற்றுகிறாயா என்பதற்கு பாமரனும் கேட்பது “ என்ன காது குத்தறையா? “ என்பதுதானே! அதனால் தானோ என்னவோ பல பெண்கள் மற்றவர்கள் தனக்கு காது குத்த இடமில்லாமல் இடம் கொடுக்காமல் தானே காது முழுக்க நிறைய குத்தி விதவிதமா தோடு போட்டுக் கொள்கிறார்களோ!!🤪

என்னவோப்பா ஒன்னும்புரியல?

குழந்தைக்கு காது குத்தி, மொட்டைபோட்ட குழந்தைக்கு கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் பூவையோ துளசியையோ காதுலதானே வைப்போம்! பெரியவர்கள்கூட முன்புகோவிலில் கொடுத்த பூவையோ துளசியையோ காதிலேதானே வச்சிகிட்டாங்க!

இப்போ என்னவோ இதற்கு அர்த்தம் மாறி போச்சு. ஏமாத்த பாக்கறத்துக்கு பூ வைப்பதாச்சு.”

“ஏமாந்தா பூ என்ன பூந்தோட்டமே காதுல வைப்பாங்க” அப்படீங்கறாங்க!💐

என்னவோப்பா ஒன்னும் புரில.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்தியெல்லாம் தலை

வள்ளுவர் குறளை சொல்பவர்கள் ஏன் எதிர்மறை சொல்லுக்கு “காது” சேர்கறாங்கனு புரியல. உதாரணத்திற்கு

பார்க்’காது’,  போ’ காது”,  கொடுக்”காது “,மயங்”காது”. என்னமோ போங்க ஒண்ணும் புரியல.😧

காதுங்கறது கேட்க மட்டுந்தானா?  விதவிதமா தோடு,ஜிமிக்கி, தொங்கட்டான், வலையம் போட்டு அழகு பார்க்கவும் தான். அப்பறம் தோடு, ஜிமிக்கி எடைதாங்காம தொங்காம  மாட்ட மாட்டலும் காதில்தான். இதுமட்டுமா மூக்கு கண்ணாடி(கண்ணுக்குதான் என்றாலும்) மாட்டுவதென்னவோ காதில்தான். “கே” என்ற இனிசியல் போட்ட காது கார்ர்கள்(கே.காது) காது கருவி hearing aid மாட்டுவதும் இதில்தானே. கொரானா காலத்தின் கொடை முக கவசம் mask க்கும் அடைகலம் காதுதான். 😷எத்தனைதான் தாங்கும். 

சில வருடங்கள் முன் ஒரு Phillips விளம்பரம். சத்தமே இல்லாமல் ஒரு பெண் ஆடுவாள். முடித்த பின் காதிலிருந்து ஒரு சின்னகருவியை எடுப்பாள். அதன் வழியே கேட்ட இசைக்கு ஆடினாளாம். விளம்பரத்திற்காக எப்படிலாம் காதுல பூ சுத்தறானு நெனச்சேன்.. அப்பறந்தான் அது பேர் நீல பல்(blue tooth)னு சொன்னாங்க. இப்ப யாரப்பாத்தாலும் அத தான் மாட்டிகிட்டு பஸ்ஸிலோ, ரயிலிலோ அவரவர் தனி உலகத்தில இருக்காங்க. 🤔

என்னவோப்பா ஒண்ணு புரியல.😲

வீட்டிலயும் இதுமாதிரி ஒன்னு தலை பேசி(head phone) மாட்டிகிட்டு காரிய செவுடா இருக்குங்க. எது சொன்னாலும் காதில் ஏறாது.

இத எந்நேரமும் மாட்டிகிட்டு இருந்து செல்வத்துள் செல்வம் செவி செல்வத்தை வரும் தலைமுறையினர் தொலைத்து விடுவார்களோனு கவலையா சங்கடமா இருக்கு.

என்னோப்பா ஒன்னும் புரியல.🙄

              ஆனந்தி