Monday, August 10, 2009

திரு கோவில்கள் இரு வகைப்படும் .
கோவில்களை அமைத்து பிறகு திருஉருவங்களை எழுந்தருள செய்தல்.
எழுத சிவலிங்கம் சுற்றி ezutha sivalingam chutri கோவில் அமைதல்.
ஸ்வம்பு லிங்கங்கள் மரதின் கீழ் அமைதிருக்கும்.அம்மரமே அக்கோவில் தல்விற்க்ஷம்மாகும்.
பழனி,மதுரை,திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,சுவாமிமலை,திருத்தணி,காஞ்சிபுரம் இவை எத்தகைய கோவில்களே பிற்காலத்தில் விரிந்து கற்கோவில்கள் ஆயின.
கி.பி.7 m நூற்றாண்டில் அப்பர் எழுதிய திருத்தாண்டகத்தில் கோவில்களை எட்டு வகையாக கூறுகிறார்.
பெருங்கோவில்: செயகுன்றின் மேல் எடுக்கப்பட்ட மலைகொவில்.
மாடகோவில்: யானை ஏறாத படிக்கட்டு அமைத்த கோவில் அப்பர் காலத்திற்கு முன் செங்கஞ்சோழன் கட்டிய 70 கோவில்.(நன்னிலம், திருமருகல்,சிக்கல்,குடவாசல்)
கரகோவில்: தேர் வடிவில் சக்கரத்துடன் அமைத்த கோவில் (குடந்தை சாரங்கபாணி கோவில்,நாகை ஸௌந்தரராஜபெருமாள் கோவில்)
ஞாழற்கோவில் : ஞாழல் என்ற மரத்தால் அமைந்த கோவில்.
கொகுடி கோவில்:கொகுடி என்ற ஒருவகை முல்லை கொடி சூழ்த கோவில்.
இளங்க்கோவில்: கோவில் புதுபிக்கும் பொருட்டு கோபுரம்,விமானம் முதலிவற்றை (பாலாலயம்) சித்திரமாக எழுதி தனி இடத்தில் வைத்துவிட்டு திருப்பணி செய்தல்.
மணி கோவில்: மணி போன்ற விமானம் அமைந்த கோவில்.
ஆல கோவில்; ஆல மரநிழலில் அமைந்த கோவில்.
செங்கல்,சுணாம்பு , உலோகம் ,மரம் இவையால் கட்டப்பட்ட கோவில்கள் நாளடைவில் அழியும் என்பதால் கருங்கல்லினால் கோவில் கட்ட பல்லவர்கள் முற்பட்டனர்.முதலில் குன்றுகளை குடைந்து குடைவரை கோவிலை கட்டியவர் மகேந்தரவர்ம பல்லவன். வடாற்காடு,செங்கல்பட்டு, புதுகோட்டை வரை இவர் கட்டிய குகை கோவில்கள் உள்ளன.சித்தனவாஸல் கோவில் ,திருச்சிராபள்ளி,தளவானூர் சிறப்பு வாய்த்தவை.

No comments:

Post a Comment