Wednesday, August 20, 2014

sivanin aatham

இறைவன் எல்லா உலகங் களையும் அழித்து ஆடிய ஆட்டம் கொடும்கொட்டி  (திருபுரங்கள் எரித்து ஆடியது ) இதை   சேர நாட்டை  சேர்த்த* கூத்த சாகியன் சேரசென்குட்டுவன்னுக்கு ஆடி காட்டியதாக சிலப்பதிகாரம் நடுகற் காதைகூறுகிறது.
தேர் முன் நின்று திசை முகன் காணும்படி திருப்புற அரக்கர்கள் வென்று வீழ்த்த வெண்ணீறு பூசி ஆடியது பண்டாரகம்.
பிரம்மன் தலை கிள்ளி அக கையில் ஏந்தி ஆடியது காபாலம். இம்மூன்றும் அழித்தற் தொழிலிலை நிகழ்த்தும் காலத்தில் ஆடியது.
படைத்தல் தொழிலில் நிகழ்தது காளிகா தாண்டவம் .திருநெல்வேலி தாமிரசபை .
காத்தல் தொழிலில் நிகழ்தது கௌரி தாண்டவம் (திருப்பத்தூர் சிற்சபை .
சந்தியா தாண்டவம் மதுரை வெள்ளிஅம்பலத்தில் அழித்தல் தொழிலில் ஆடியது .
சங்கரா தாண்டவம் உலகம் அழிக்கும் ஊழிகாலத்தில் நள்ளிரவில் ஆடியது .
மறைத்தல் தொழில் நிகழ்த்தும் காலத்தில் ஆடியது திரிபுர தாண்டவம் .திருக்குற்றாலம் சித்திர ச பை.
அருளல் தொழில் நிகழ்த்தும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலன் காடு ரத்னசபா .
இவை ஐந்தும்  ஒருங்கே நிகழ்த்தும் ஆனந்த தாண்டவம் தில்லை .
தில்லை பொன் அம்பலத்தின் தெற்கே நிருத்திய சபை ஊர்துவதாண்டவம் .
சிலபதிகாரத்தில் மாதவி 18 வகை தாண்டவம் ஆடியதாக கூறுகிறது .
*சாத்த கூத்தன் முகத்தில் பாதி சிவனாகவும் மறுபாதி உமையாகவும் வேடமிட்டு ஆடும்போது .சிவனாக ஆடும்போது உமைபாகம் இட புறம்"பாவம்"(உணர்ச்சி)காட்டாமல் ,உமையாக ஆடும் போது சிவன் (வலது முக பகுதி )உணர்வு காட்டாமல் ஆடும் திறன் உடையவன் .இதை தஞ்சை ராஜராஜேஸ்வரன்  நிபந்தம் கல்வெட்டு கூறுகிறது .
சிவனின் மேலும் சில   நடனங்கள்
.
திருவாரூரில் அஜப நடனம்.ஆடு போல் ஆடுவது..
திருநள்ளாரில் உன்மந்த நடனம்  பைத்தியம் போல் ஆடுவது.
நாகை தரங்க நடனம்   . கடலலை போல் ஆடுவது.
திருவாய்மூரில் கமல நடனம்.  குளத்து தாமரை போல் ஆடுதல்.

வேதாரண்யத்தில்  ஹம்சபாத நடனம் அன்னப்பறவை போல் நடனம்.
மாயூரத்தில் மயூர நடனம் மயில் போல் ஆடுதல்.
திருகாறாயில் குக்குட நடனம் கோழி போல் ஆடுதல்.
திருவெற்றியூரில் பதினெட்டு வகை நடனங்களை இறைவன் ஆடுகிறார்.
இக்கோயில்களில் இருக்கும் தியாகேசப்  பெருமான் ஆடுகிறார்.

No comments:

Post a Comment