Wednesday, May 9, 2012

பொறுப்பாளி யார் ? பரிகாரம் என்ன?

பொறுப்பாளி யார் ? பரிகாரம் என்ன?  
 
ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாயிருப்பதற்கு யார் காரணம்?ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?  
 
என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?.  
 
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்ராயம் உண்டாக்கியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைத்து போனதற்கு பிராம்மணன்தான் பொருப்பாளி.  
 
பிராம்மணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் கைவிட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குறிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரர்களின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் காபி அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் படிப்பு, மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.  
 
சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது. இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சகாப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோக க்ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில், இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டிவந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக (example, guide , model) வைத்துக் கொண்டார்கள். (Contd...)ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள். வேதாத்யயனம், யக்ஞாதி கர்ம்க்களுக்கே பிராமணனுக்கு ஸதாஸர்வ காலமும் தேவையாயிருந்து. ஆயுசுக் காலம் முழுவதும் அதற்கே செய்விடுவதாக இருந்தது. இப்படி இவன் வேதம் ஒதுவது, வேள்வி செய்வது, சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தருவது என்றே பொழுது முழுவதையும் செலவழித்ததால், இவனுடைய ஜீவனோபாயத்துக்கு என்ன செய்வது. இவன் பொருள்தேடிப் போக ஆரம்பித்தால், ஆயுட்கால பிறவிப் பணி ( lifetime mission) நடக்காது. இந்தப் பிறவிப் பணிக்கோ part time போதாது. அப்படியே இவன் வயிற்றுக்காக வேறு வேலை என்று வைத்துக்கொண்டால் ஆசாரங்களுமம் கெட்டுப்போகும். அதன்பின் பத்தியமில்லாத மருந்துபோல் இவனுடைய அத்யயனவீரியம் குறைந்துபோய், அதனால் லோகத்துக் கிடைக்கிற க்ஷேமம் நஷ்டமாகிவிடும். இதனால்தான் பிராமண்ன் மந்த்ரம் யாசகம் செய்யலாம் என்று சாஸ்திரம் அனுமதித்தது. யாசகம் என்றில்லாமல், ராஜாக்களே இவனுடைய அத்யயனம், யக்ஞம் சாஸ்திர ரக்ஷணம் இவற்றில் ஏற்படுகிற சமூக சிரேயஸை முன்னிட்டு இவனுடைய அத்யாவசியத் தேவைகளுக்கு குறை வைக்கக்கூடாது என்று மானியங்கள் விட்டார்கள். பூதானம், கிருஹதானம், கோதானம், ஸ்வர்ணதானம் எல்லாம் செய்தார்கள். ஆனாலும் அவர்கள்தான் கொடுக்கிறார்களே என்று இவர்கள் வரம்பில்லாமல் வாங்கிக்கொள்ளக்கூடாது. (Contd...)
குடியீனவன் குடிசைக்கும் பிராம்மணன் குடிசைக்கும்மே வித்தியாசம் கிடையாது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நூல்துணிதான். குடியானவனானது நாளைக்கு என்று நாலு காசு மீத்து வைத்துக் கொள்ளலாம். பிராம்மணன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது. பிற்பாடு கொடுக்கலாம் என்று இப்போது கடன் வாங்கி கொஞ்சம் தாட்பூட் செலவு பண்ணக்கூட பிராம்மணனுக்கு ரைட் கிடையாது.  
 
மஹாபாரதத்தில், யக்ஷ ப்ரச்னத்தில், பிராம்மணன் எத்தனை எளிமையாக இருந்தான். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.  
 
பஞ்சமே (அ) ஹனி ஷனி ஷஷ்டே வா சகம் பசதி ஸ்வேக்ருஹேறீ  
 
அந்ணீச (அ) ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததேறீறீ  
 
ஒரு நாளில் பகல் போதை எட்டுப் பங்காக்கினால், அதில்ஐந்தாவது அல்லது ஆறாவது பங்கில்தான் பிராம்மணன் கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்துச் சாப்பிடுவான். அதன்முன், நாஸ்தா, கீஸ்தா எதுவும் கூடாது. இதுதான் பஞ்சமே அஹனி ஷஷ்டே வா அந்த வேலையில்கூட என்ன சாப்பாடு. சக்கரைப் பொங்களும் பாதாம்கீருமா. அல்லது தேஹ புஷ்டி தரும் மாம்ஸாதிகளா. இல்லை. சாகம் பசதி என்றால் ஏதோ ஒரு கீரையைப் பிடுங்கி வேக வைத்துத் தின்ன வேண்டும் என்று அர்த்தம். ஏதோ ஒரு முள்ளிக் கீரையோ, பசலைக் கீரையோ, போன்னாங்கண்ணியோ ஆற்றங்கரையில் யாருக்கும் சொந்தமில்லாமல் முளைத்திருப்பதை மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும். பிராம்மணன் நதி தீரத்தில் வசிக்க வேண்டும் என்று வைத்ததற்கு காரணமே அப்போது தான் அவன் அடிக்கடி ஸ்நானம் செய்ய முடியும் என்பது ஒன்று. இன்னொரு காரணம் அங்கே தான் பணம் காசே வைத்துக் கொள்ளக் கூடாத இவன், விலை கொடுக்கலாமா, யாசிக்கலாமா, நாலு கீரையைப் பிடுங்கி வேக வைத்து ஜீவனை ரக்ஷித்துப் கொள்ளலாம் என்பது யார் இந்தப் பார்ப்பான். பிடுங்கித் தின்ன வந்தான். என்று யாறும் அதட்ட முடியாதபடி வாழ வேண்டும் என்று அர்த்தம். கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கலாமென்றால் போக்யங்கள். லக்ஷரிகளில் மனஸ்போதும். அதற்கு இடமே கொடுக்கக்கூடாது. இதுதான் அந்ருணீ என்றது. தரித்திரமும், அபரிக்ரஹமும் (அத்யாவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு புள்ளைக்கூட வைத்துக் கொள்ளாமலிருப்பதும்) தான் பிராம்மண லக்ஷணமானதால், கடனும் வாங்கக்கூடாது என்று இருக்கிறது.

No comments:

Post a Comment