Friday, May 4, 2012

varnaashram from Tuglak tamil magazine


From the comment section in: http://www.thuglak.com/thuglak/main.php?x=archive/26_04_2012/saiva_26_04_2012.php&startpos=1


Cheenu
யார் எந்தத் தொழில் செய்தாலும் எல்லோருக்கும் சாப்பாடு, துணி, வீடு ஆகிய அத்தியாவசியமான வசதிகளைத் செய்துதரச் சர்க்கார் கடமைப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் தேவைகளை அதிகரித்துக் கொண்டு போனால்தான் போட்டி, பொறாமை எல்லாம் உண்டாகிறது. இப்போது எல்லா நிறைவும் பணநிறைவு என்ற ஒன்றாக இருப்பதால்தான் இத்தனைக் குழப்பங்கள். இது மாறி, தன் காரியத்தை ஒழுங்காகச் செய்தால் ஏற்படுகிற நிறைவே அவரவருக்கும் ஸ்வாமி என்ற மனோபாவம் வர வேண்டும். அப்போது எங்கும் சாந்தமாக இருக்கும்.பலவித தின்பண்டங்கள் உள்ளன. பல ராகங்கள் உள்ளன. அதுபோல சமூகத்தில் பல காரியங்கள் நடக்க வேண்டும். ரசத்தில் உப்பு போட்டிருக்கிறதே என்று பானகத்தில் உப்பு போட்டால் அது ரஸாபாஸம். ஒரு ராகத்தில் இன்னொரு ராகத்தின்ஸ்வரத்தைச் சேர்த்தால் அது ரஸாபாஸம். இப்போது ஜனங்களுக்கு ரஸனைகளைப் பற்றிய ருசியே போய்விட்டது. உருக்கமான புராணக்கதை நடுவே பாகவதர்கள் கேலிப் பேச்சுக்கு வருகிறார்கள். இதை

ஜனங்களும் ரஸிக்கிறார்கள். எத்தனையோ நல்ல போஜந வகைகள் இருக்கும் போது ருசியும் இல்லாமல், ஆரோக்கியத்துக்கும் உதவாமல் இருக்கிற புகையிலையைப் புகைக்கிறார்கள். இவை சின்ன ரஸாபாஸங்கள். பெரிய ரஸாபாஸம், பொது தர்மத்துக்கு அநுகூலமாக பல விசேஷ தர்மங்களை வகுத்துத் தரும் வர்ணங்களைப் போட்டுக் குழப்புவதே!


வர்ண தர்மம்

பழைய காலத்தில் செத்தை எரிமுட்டை எல்லாவற்றையும் கொளுத்திப் போட்டே அடுப்பு மூட்டுவார்கள். மழை நாளில் அடுப்பு பிடித்துக்கொள்ள ரொம்ப சிரமமாயிருக்கும். நாலு நெருப்புப் பொறி கிளம்பினால்கூட போதும். உடனே விசிறு, விசிறு என்று விசிறி அதைப் பற்ற வைத்து விடுவார்கள். அதுமாதிரி, இன்னமும் முழுக்க அணைந்து போகாமல், ஒரு சில பெரியவர்களிடமாவது இருக்கிற நாலு பொறி ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.

நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ணம் தம்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.

சரி, மதம் என்பது என்ன?. ஆத்மாவுக்கு வந்திருக்கிற வியாதி தீருவதற்கு வைத்தியம் சொல்வதுதான் மதம். ஒரு நோயாளிக்கு என்ன வியாதி வந்திருக்கிறது. அது இன்ன மருந்தைத் தந்தால் சொஸ்தமாகும் என்பது வைத்தியனுக்குத் தான் தெரியும். தங்களுக் கென்று ஒரு பொருளையும் தேடிக் கொள்ளாமல், பரமத் தியாகத்துடன் வாழ்ந்து லோக க்ஷேமத்தையே நினைத்த ரிஷிகள், தர்ம சாஸ்திரக்காரர்கள், இப்படித் தந்திருக்கிற மருந்துதான் நமது ஸநாதன தர்மம். மற்ற தேசங்களில் வேறு வைத்தியர்கள் வேறு மதங்களை மருந்தாகத் தந்திருக்கிறார்கள். நம் உடம்புக்கு மருந்து தருகிற டாக்டரிடம், அந்த டாக்டர் அப்படி ட்ரீட்மென்ட் செய்கிறார். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே. என்றால் அவர் கேட்டுக் கொண்டிருப்பாரா. வைத்திய சாஸ்திரத்தில் பல தினுசுகள் உண்டு. ஒன்றில் கடும் பத்தியம் இருக்கும். ஒன்று லகுவாக இருக்கும். ஒன்றில் மருந்து கசக்கும். இன்னொன்றில் மருந்து தித்திக்கும். இதையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று சொல்லாமல், அவரவரும் எந்த வைத்திய முறையை மேற்கொள்கிறார்களோ அதையே விடாமல் பின்பற்றினால் எந்த முறையிலும் சொஸ்தம் அடையலாம். (Contd..)

மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் வித்தித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென்

வைத்துக் கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாஸம், சகல ஜீவராசிகளிடத்துலும் சமமான அன்பு, இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட ஸாமான்ய தர்மங்கள். அது தவிர வர்ணம் என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.

இந்த விசேஷ தர்மங்களையும் சாமானியமாக்கியிருந்தால் அவற்றை எவருமே அநுஷ்டிக்காத நிலையில்தான் உண்டாக்கியிருக்கும். இதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன். புத்த மதத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பதைப் பொது தர்மமாக வைத்தார்கள். ஆனால் இன்று பௌத்த தேசங்களில் என்ன பார்க்கிறோம். எல்லோருமே மாமிசம் உண்பவர்களாக இருக்கிறார்கள். நம் ரிஷிகளும், தர்ம சாஸ்திரக்காரர்களும் மநுஷ்ய சுபாவம் நன்றாகத் தெரியும். அதனால் புலால் உண்ணாமையைச் சிலருக்கு மட்டுமே விசேஷ தர்மமாக வைத்தார்கள். இதைப் பார்த்து மற்றவர்கலும் விரதங்கள், நோம்பு நாட்கள், மூதாதையார் FF ஆகிய தினங்களில் மாமிச உணவை நீக்கி விடுகிறார்கள்.

எல்லா தர்மங்களையும் பொதுவாக வைத்த ஒவ்வொரு தேசத்தின் பழைய மதமும் அடியோடு விழுந்து விட்டிருக்கின்றன. மேற்கே கிரீஸில் இருந்த ஹெல்லெனிக் மதம் மத்திய ஆசியாவில் இருந்த ஹீப்ரு மதங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. கிழக்கே கன்ஃபூஷியஸ் மதம், ஷீன்டோ மதம் எல்லாம் ஏதோ குஞ்சம்தான் இருக்கின்றன. இவற்றிடத்தில் வந்துள்ள கிறிஸ்தும், இஸ்லாம், பௌத்தம் முதலியவற்றிலும் பொதுவாக ஒரே தர்மம்தான் உள்ளதே தவிர, அதோடுகூட தனித்தனி வர்ணங்களுக்கான விசேஷ தர்மம் என்ற பாகுபாடு இல்லைதான். ஆனால் இந்த மதங்களில்கூட இப்போது அந்தந்த தேசத்து மக்களுக்கு நிறைவு போய்க்கொண்டுதான் இருக்கிறது. (Contd...)

மத நம்பிக்கையற்றவர்கள் இந்த எல்லா தேசங்களிலும் அதிகமாகிக்க கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்று , இவர்கள் நாஸ்திகராகிறார்கள், இல்லாவிட்டால், தங்கள் மதத்தில் திருப்திக்கொள்ளாத பலர் நம்முடைய யோகம், பக்தி மார்கம், ஞான விசாரம் ஆகியவற்றிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேசங்களில் தற்போதுள்ள சரித்திரக்கால மதங்களை உள்ளபடி பின்பற்றிப் போகிறவர்கள் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கள் என்று சொல்லமுடியாமலிருக்கிறது. நான் ஹிந்து மதப் பிரதிநிதி, மற்ற மதங்களைக் குறைவுபடுத்தி பேச வேண்டும் என்று நினைத்து இப்படிச் சொல்லவில்லை. தற்போதுள்ள வெவ்வேறு மதஸ்தர்களும் தங்கள் மதத்திலேயே இருந்து கொண்டு ஆத்மாபிவிருத்தி அடைய வேண்டும் என்று தான் எனக்கு ஆஸ்தை. எங்கள் மதத்துக்கு வாருங்கள் என்று எவரையும் நான் கூப்பிடவில்லை. அப்படிக் கூப்பிடுவது நம் மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கே (TENET) விரோதம் என்பது என் அபிப்பிராயம். லோகத்தில் எதுவும் காரணமில்லாமல் (accidential) நடந்து விடவில்லை.

பலவிதமான ஜீவர்களின் பலவிதமான பக்குவ நிலைமையைப் பொறுத்துதான் பகவான் அவர்களை வெவ்வேறு மதங்களில் பிறக்கும்படி செய்கிறான். அந்தந்த மதத்தைப் பற்றி ஒழுகியே அவரவரும் ஆத்ம க்ஷேமம் அடைய முடியும் என்பதே என் நம்பிக்கை. மற்ற மதங்களில் இல்லாத

விசேஷங்கள் ஹிந்து மதத்தில் இருப்பதாக நான் சொல்கிறேனே என்றால், அது அவற்றை நிந்திப்பதாக இல்லை. அவர்களை இங்கே கூப்பிடுவதற்காகவும் அல்ல. மற்ற மதஸ்தர்கள் இந்த விசேஷ அம்சங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நிந்திப்பதையும், அவர்களுடைய வார்த்தையையே நம்மவர்களில் சிலரும் எடுத்துக் கொள்வதையும் பார்க்கும்போது, இந்த அமசங்களில் உள்ள நல்லதைச் சொல்லி தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தே இதை எல்லாம் சொல்கிறேன். இந்தக் கொள்கையை - கர்மக் கொள்கை, அவதாரக் கொள்கை மாதிரி இருக்கப்பட்டவைகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதாலும் அவர்களுடைய சொந்த மதத்தின் அடிப்படையான அம்சம், உயிர்நிலையான அம்சம் என்ன?. பகவான் என்ற ஒருத்தனை நம்பி பக்தி உண்டாக்காது. பக்திதான் அம்மதங்களின் முக்கியமான அம்சம். (Contd..)

இதை எல்லாம் எதற்குக் சொல்கிறேன் என்றால், தற்போதுள்ள மதங்களுக்கெல்லாம் அந்தந்த தேசங்களில் தத்தளிக்கின்றன என்பது என் அபிப்ராயமும் இல்லை. இதில் எனக்கு சந்தோஷமும் இல்லை என்பதக்குத்தான் டோயீன்பீ, பால் பரன்டன், கோஸ்ட்லர் மாதிரி பிரபலமானவர்களுடைய அபிப்ராயத்தைக் சொன்னேன். லோகம் பூராவிலும் மத நமபிக்கையின்மை (disbelief) , நாஸ்திகம் (atheism) எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாக, இப்போது எல்லா மதங்களும் தத்தளிக்கும்படியான நிலைமை வந்திருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே திருப்பிச் சொன்னேன்.

நம் தேசத்தில்கூட இந்தப் போக்கு அதிகமாகிக் கொண்டுதான் போகிறது. ஆனாலும், மற்ற தேசங்களோடு பார்த்தால் உங்கள் தேசம் எத்தனையோ தேவலை. இங்கே மத உணர்ச்சி இன்னும் அத்தனை மோசமான நிலைக்குப் போய்விடவில்லை என்ற சகல தேசங்களையும் ஆராய்ந்து பார்க்கிற வெளிதேசத்தார் ஒருமுகமாகச் சொல்கிறார்கள். அவர்களில் சாதகர்கள் கூட்டங்கூட்டமாக இன்னமும் நம் தேசத்துக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்தபிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.

இது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. அதாவது ஒரு மதம் ஜனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால், அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஜக்கியமும் இல்லாமலேயிருக்கும் என்று நினைக்கிறோம். இப்படிப்பட்ட மதம்தான் சண்டையால் தனக்குள்ளேயே உளுத்துப்போய் விழுந்துவிடும் என்று தோன்றுகிறது. அதோடுகூட நம் தேச சரித்திரத்தில் பார்க்கிறமாதிரி, அலெக்சான்டர் காலத்திலிருந்து பல அந்நிய மதஸ்தர்கள் அலையாகப் படை எடுத்து வந்தார்கள் என்றால், இப்படிப் பட்ட மதம் இருந்த இடம் தெரியாமல் புதைந்துதான் போயிருக்க வேண்டும். (contd...)

ஆனால், வாஸ்தவத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால் இதற்கு நேர் மாறாக இருக்கிறது. எல்லாருக்கும் அநுஷ்டானம் ஒன்று என்று சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக்

கொண்டுபோயிருக்கிறது. இன்றைக்கு உயிரோடிருக்கிற அப்படிப்பட்ட மதங்களுக்கும் பெரிய ஆபத்து இருப்பதாக அந்த மதத்து அறிவாளிகளே சொல்கிறார்கள். ஆனால் பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிடமுடியும் என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன. அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொண்ப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெருமாபான்மையினராக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தாரா. அதுவும் இல்லை. பிராமணமன் பணம் சேர்தவைப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணம் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெருமாபான்மையாக இல்லாமல் இருக்கிறவர்களின் விதித்தி சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும். மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள். அப்படி இவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம். பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம் என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தால் அந்தப் புது மதங்களில் சேர்ந்து இருக்கிறார்களேயழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசீயில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன. பார்த்தால், பழைய வைதிக மதமே செத்தேனாபார் என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது. (Contd..)

நவத்வாரம் உள்ள உடம்பில் உயிர் தங்கியிருப்பதுதான் ஆச்சரியம். வெளியே போவது ஆச்சரியமே இல்லை என்று ஒரு பெரியவர் பாடினார். அம்மாதிரி உள்ளே பிரிந்து வெளியிலிருந்தும் ஒயாமல் தாக்கப்பட்ட ஹிந்து மதம் செத்திருந்தால் ஆச்சரியமே இல்லை. சாகாததுதான் ஆச்சரியம்.

நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்து பார்த்தால் என்ன தெரிகிறது. மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி. மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாராயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத ஒன்று இவற்றில் இருக்கிறது என்று தானே அர்த்தம். அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியோகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரீகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற சமூகம்தான் சீர்குலையாமல்

இருந்து வருகிறது. நவீன யுகத்தில் சமத்துவம் என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்திறிகு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது. அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை

வர்ண தர்மத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. முதலில் ஆகாயக் கப்பலில் காற்றுப் பையை ( gas bag) ஒன்றாக அமைத்தார்கள். பிறகு அதில் ஒரு சிறிய ஒட்டை விழுந்தால்கூடக் கப்பலே கெட்டு விழுந்து விடுகிறது என்று கண்டார்கள். அதனால் சிறிது சிறிதாகப் பல காற்றுப் பையை வைக்கலானார்கள். தனித்தனியாக இருந்தாலும் எல்லாம் ஒரே இடத்தில் நெருங்கியிருந்து ஒன்றையே தாங்கிக் கொண்டன. கப்பல் பழுதடையாமல் இருந்தது. இதுவேதான் நம் மதத்தில் தனித்தனி தர்மம் என்று பிரித்து வைத்திருக்கிற ஏற்பாடு. வேற்றுமையில் ஒற்றுமை ( unity in diversity) என்பது இதுதான்.

ஏகப்பட்ட சுல்லிக் கட்டைகளை சேர்த்துப் பிடித்து ஒரு கட்டாகக் கட்டுவது என்றால் அது சிரம சாத்தியமான காரியம். அப்படியே சிரமப்பட்டு ஒரு கட்டாகக் கட்டினாலும்கூட அது சுலபத்தில நெகிழ்ந்து கொடுத்துத் தளர்ந்து விடும். முதலில் ஒரு சுள்ளியை ஆட்டி எடுக்கிற மாதிரி நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டாலே கூட போதும். அந்த ஒன்றை எடுத்தால் தளர்ச்சி ஜாஸ்தியாகி இன்னொரு சுல்லியை சுலபமாக உருவி விடலாம். இப்படி இரண்டு மூன்று எடுத்து விட்டால் அப்புறம் கட்டு ஒரேயடியாக தொள தொளவென்று தளர்ந்துபோய் அத்தனை சுள்ளிகளும் தன்யாக விழுந்துவிடும்.

மாறாக முதலிலேயே அத்தனை சுள்ளிகளையும் ஒரே கட்டாகக் கட்டாமல் கைக்கு அடக்கமாகப் பத்து பதினைந்து என்று சேர்த்து சின்னக் சின்னக் கட்டுகளாகப் போடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது ஒவ்வொன்றும் கையடக்கமாக இருப்பதால் தளராதபடி பிகுவாகக் கட்டிவிட முடியும். அப்புறம் இந்தச் சின்ன சின்னக் கட்டுகளையெல்லாம் சுலபத்தில் அடுக்கி எல்லாவற்றையும் சேர்த்து பெரிய கட்டாகப் போடலாம். ஒட்டு மொத்தமாக அத்தனை சுள்ளிகளையும் வைத்துப் போடுகிற கட்டைவிட இப்போது நாம் போடுகிற பெரிய கட்டு இன்னும் விறைப்பாக, உறுதியாக இருக்கும். அது மட்டுமில்லை. இந்தப் பெரிய கட்டு குஞ்சம் தளர்ந்தால்கூட ஒரு தனிச் சுள்ளி விழுகிற மாதிரிச் சின்னச் சுள்ளிக்கட்டு விழாது. அதாவது பெரிய கட்டு பந்தோபஸ்தாகவே இருக்கும். என்றைக்கும் அது கட்டு விட்டுப்போகாது. (Contd..)

சின்னக் கட்டுகளில் எதுவோ ஒன்று தளர்ந்து கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுகூட அதிலுள்ள சுள்ளிகள் மட்டும் விலகுமே தவிர, மற்ற கட்டுகள் எல்லாம் அப்படி அப்படியே பத்திரமாக இருக்கும். அவற்றிலுள்ள சுள்ளிகள் கொஞ்சங்கூடக் கலகலத்துப்போய் விடாது.

ஒரு பெரிய ஜனசமூகத்தை ஒரே அமைப்பிலே போட்டு கட்டுகிறேன் என்றால் அது முடியாத காரியம். ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார், எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பது. இதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள். இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாறும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக ஜாதிகளாக பிரித்தார்கள். அவரவருக்கும் ஜாதி நாட்டாண்மை என்று ஒன்று இருந்தது. அந்தந்த நாட்டான்மைக்காரக்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தரப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள். இப்போது சர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறது. ஆனால் இது ஒன்றும் குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லை. அதனால் குற்றங்கள் பாட்டுக்கு வளர்ந்துகொண்டேத்தான் இருக்கின்றன. நாட்டாண்மையில் கொடுத்த தண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில் இறங்காமல், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும் யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். அதுவரை போலீசுக்கும், மாஜிஸ்டிரேட் கோர்ட்டுகளுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.

அதென்ன அப்படிப்பட்ட தண்டனையை நாட்டாண்மைக்காரர்கள் கொடுத்தார்கல் என்றால், ஜாதி ப்ரஷ்டம் என்பதுதான் அது. ஒரு சக்கிலியாக இருக்கட்டும், பரியாரி (நாவிதன்) யாக இருக்கட்டும். எவராகத்தான் இருக்கட்டும். இப்போது பிற்பட்ட (Backward) தாழ்த்தப்பட்ட ( depressed ) என்றெல்லாம் சொல்கிற எந்த ஜாதியினராக இருந்தாலும்கூடத்தான் - அவரவருக்கும் தன் ஜாதியை விட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றால், அதுவே சுரீரென்று மனதில் தைத்தது. அது தாங்க முடியாத பெரிய தண்டனை, மகத்தான அவமானம் என்று தோன்றியது. (Contd..)

இதிலிருந்து என்ன தெரிகிறது. எந்த ஜாதியாரும் எந்த ஜாதியினரையும் மட்டம் தட்டி வைக்கவில்லை. அந்தந்த ஜாதியாரும் தங்கள் விவகாரங்களைப் பொருத்த மட்டில் தாங்களே ராஜா என்ற பூரண திருப்தியோடு இருந்திருக்கிறார்கள் என்றுதானே தெரிகிறது. உசத்தி தாழ்த்தி அபிப்ராயங்கள் இருந்திருந்தால், தானாகவே பலவிதமான தாழ்வு மனப்பான்மைகள் (inferiority complex) உண்டாகித்தான் இருக்கும். பிராமணனையும் க்ஷத்திரியனையும் தவிர ஜாதியார் எவருக்கும் தங்கள் ஜாதியிடம் மதிப்பு, கௌரவ புத்தி, விசேஷமான பிடிப்பு இருந்திருக்க முடியாது. இதெல்லாம் இல்லாவிட்டால் ஜாதிப்ரஷ்டத்தைப் பொருட்படுத்தியே இருக்க மாட்டார்கள். ஆனால் நடைமுறையில் ஜாதி என்ன பெயரில் ஜாதி என்ற பெயரில் சின்னச் சின்னச் சமுதாயங்களாக ஜனங்கள் இருந்தபோது, தங்களுக்கு பரஸ்பரமான அன்பும் விசுவாசமும் ஏற்பட்டு, அதிலே ஒரு பந்துத்துவமே உண்டாயிற்று. அதனால்தான் ஜாதியிலிருந்து தள்ளி விடுவோம் என்றால் அது பெரிய தண்டனையாகத் தோன்றியது. இப்போது பிற்பட்டவர்களாக இருப்பதால் பலவித சலுகைகள் கிடைக்கின்றன என்பதற்காக வேண்டுமானால் பலர் தங்கள் ஜாதியனைப் பிடித்துக் கொண்டிருக்கிறாக்ளே தவிர, மனப்பூர்வமாக அதில் கௌரவ புத்திவைத்து அபிமானிக்கவில்லை. அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சலுகைகளில் எதுவும் கிடையாது. ஆனாலும், மூன்று நான்கு

தலைமுறைகளுக்கு முன்வரை நாம் பார்த்தது என்னவென்ரால் அவர்களுக்கும் தங்கள் ஜாதியில் ஆழமான அபிமானம் இருந்திருக்கிறது. இப்போதுபோல் இன்னொருத்தரிடம் போட்டியும் எதிர்ப்பும் இருப்பதால் தங்களுக்குள் அபிமானம் பாராட்டிக் கொள்ளவில்லை. அப்போது இந்த ஜாதிச் சண்டை, போட்டா போட்டி எல்லாம் இல்லவே இல்லை. மெய்யாகவே அவரவருக்கும் தங்கள் ஜாதியில் இருந்து கொண்டு, அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச் சடங்குகள், விதிகள், ஆச்சாரங்கள், தர்மங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் சந்துஷ்டியும் பெருமிதமும் ( pride ) இருந்தன.

இப்போது கலகம் செய்கிறவர்களிடம் போலீஸ் வந்தால் போலீசிடமே கலகக்காரர்கள் அடிதடியில் இறங்குகிறார்கள். ஆனால் முன்னமே ஜாதி நாட்டாண்மையில் எதிர்த்து இப்படி யாறும் சண்டை போட்டதில்லை. காரணம் இப்போதிருக்கிற போலீஸ் வெளியிலிருந்து செய்கிற கட்டுப்பாடாயிருக்கிறது. ஜாதி நாட்டாண்மையிலோ, நம்மவர்கள் என்ற பாந்தவ்யம், அபிமானம் இருந்தது. இதனால் ஆயுத பலமும் படை பலமும் இல்லாமலே அன்றைய நாட்டாணமை இன்றைவிட வெகு சிறப்பாக குற்றங்களைக் குறைத்து வந்தது. எல்லோரும் ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆச்சாரங்கள் என்று பிரிந்திருந்தும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

காரியத்தில் பேதமும் மனோபேதமும்

ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள் என்று சொன்னேன். அது தப்பு, ஜாதிக்காகத் தொழில் இல்லை. தொழிலுக்காகத்தான் ஜாதி, சுள்ளிகளை எந்த அடிப்படையில் வேதமதம் சின்னக் சின்னக் கட்டுகளாகக் கட்டிப் போட்டது. ஒவ்வோரு வர்ணம் என்று பிரித்தது.

மேல் நாட்டுகளில் தொழில் பிரிவினை (Division of Labour) என்று பொருளாதாரத்தில் (Economics) சொல்லிக் கொண்டு இன்னமும் அதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமல் இருப்பதைப் பார்க்கிறீர்கள். ஒரு சமுதாயம் நடக்க வேண்டும் என்றால் பல தினுசான தொழில்கள் நடக்கத்தான் வேண்டும். எனவே, தொழில் பங்கீடு (Division of Labour) செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், இத்தனை பேர்தான் இன்ன தொழிலைச் செய்யலாம். இப்படியரு விகிதாச்சாரத்தில் ( proportion ) ஒவ்வொரு தொழிலுக்கும் ஜனங்கள் வந்தால்தான் சமுதாயம் சீராக ( balanced -ஆக) இருக்கும் என்பதற்கு யார், எப்படிக் கட்டுத்திட்டம் பண்ண முடியும். முடியவில்லை. எல்லோரும் சௌகரியமான தொழில்களுக்கே போட்டி போடுகிறார்கள். எங்கே பார்த்தாலும் துராசை, போட்டா டோட்டியினால் மனக்கசப்பு. அதைத் தொடர்ந்து பலவிதமான ஒழுக்குத் தப்பிதங்கள் என்று பிரத்தியக்ஷமாகப் பார்த்து வருகிறோம்.(Contd...)

இதே தொழில் பங்கீட்டைப் பாரம்பரியமாக வைத்து நடத்தி வந்த நம் தேசத்தில் அந்த ஒழுங்கு குலைகிற வரையில் சாந்தியும், சந்தோஷமும், சௌஜன்யமும், திருப்தியுமே இருந்து வந்தன. இப்போது கோட்டீஸ்வரனுக்குக்கூட திருப்தி இல்லாமல் இருக்கிறது. அப்போதோ ஒரு செருப்புத் தைக்கிறவன்கூட அக்காடா என்று நிறைந்து இருக்கிறான். எல்லோருக்கும் துராசைகளைக்

கிளப்பிவிட்டு அத்தனை பேரையும் அதிருப்தியில் கொண்டு தள்ளியிருக்கிற புது ஏற்பாடுகள்தான் முன்னேற்றம். இதுவரை செய்ததும் போதாது. இன்னும் வேகமாக இப்படியே முன்னேர வேண்டும் என்று எங்கும் பேச்சாயிருக்கிறது.

அந்தக் காலத்தில் துராசையில்லை. மநுஷ்யர்கள் ஒருத்தருக்கொருத்தர் பாந்தவ்யமாக ஒட்டிக் கொள்கிற சின்னச் சின்ன சமூகங்களாக இருந்துவிட்டதால், இப்படிச் சேர்ந்திருப்பதே பெரிய இன்பம் என்று அவர்கள் கண்டு கொள்கிறார்கள். அதோடு மதத்தில் நம்பிக்கை, தெய்வத்திடம் பயபக்தி, தங்களுக்கென்று குலதெய்வங்கள், அதற்கான வழிபாடுகள் இருக்கின்றன என்ற பெருமை, இதிலெல்லாம் நிறைந்து இருந்துவிட்டதால் அவர்களுக்கு வெளி வஸ்துக்களைத் தேடி மேலே மேலே இன்று தவிக்கிற தவிப்பு இல்லவே இல்லை. சமுதாயம் முழுவதும் நன்றாக இருந்தது.

பலவாகப் பிரிந்தாலும் ஸ்வாமியின் பெயரால் எல்லாரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவரவருக்கும் குலதெய்வம் இருந்தபோதிலும், ஊருக்குப் பொதுவாக பெரிய கோயில் இருந்தது. அந்தக் கோயிலும், அதன் உத்ஸவாதிக்களுக்குமே ஊர் வாழ்க்கையின் மைய ஸ்தானமாக இருந்தது. இதைச் சுற்றியே, அதாவது பகவானின் பேரில், அத்தனை சமூகத்தாரும் அவன் குழந்தைகளாக ஒன்று சேர்ந்திருந்தார்கள். ஒரு தேர்த் திருவிழா என்றால் அக்ரஹாரத்துக்காரனும் சேரிக்காரனும் தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள். அந்த சௌஜன்யமான காலத்தை நினைத்தாலே மறுபடி வருமா என்று இருக்கிறது. ஒரு வயிற்றெரிச்சல் இல்லை. வசைமாரி இல்லை. அவரவர் தன் காரியத்தை எளிமையாகச் செய்து கொண்டு மனஸில் ரொம்பியிருந்த காலம். (Contd..)

இதை எல்லாம் ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், சமூகம் பலவாகப் பிரிந்திருந்தாலும்கூட ஹிந்து மதம் எத்தனையோ தாக்குதலைச் சமாளித்தது என்று சொல்வது சுத்தப் பிசுகு. சமூகம் பலவாகப் பிரிந்திருந்ததாலேயே அது இப்படி யுகாந்தரமாக ஜீவனோடு இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. எல்லோருக்குமான பொது தர்மங்களை மட்டும் சொல்லி, ஒரே சமூகமாக இருந்த மஹா பெரிய மதங்கள் எல்லாம் அழிந்து போனதையும், இபபோது இருக்கப்பட்ட அம்மாதிரி மதங்களின் எதிர்காலமும் என்னவாகுமே என்பதைப்பற்றி பார்க்கும்போது, இதுதான் அத்தனை சுள்ளியையும் ஒரே கட்டாகப் போடாமல் பல சின்னச் சின்ன கட்டுகளாகப் போட்டு, அந்தக் கட்டுகளை எல்லாம் தெய்வ பக்தியினால் ஒன்றாக முடிந்திருக்கிற வர்ண தர்மம்தான் - ஹிந்து மதத்தைச் சிரஞ்ஜீவியாக காப்பாற்றியிருக்கிறது என்று தெரிகிறது.

எல்லோருக்கும் ஒரே தர்மம் என்று வைத்துக் கொண்டதோடு நின்றுவிட்ட மதங்களில் எல்லாம், உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ வேறு தினுசான தர்மங்கள் வந்து தாக்கியபோது, அவை அடியோடு இற்று விழும்படியாயிற்று. இந்தியாவில் பல தினுசான தர்மங்களும் பொதுவான தர்மத்துக்குள் இருந்தால், வேறு தர்மங்கள் உள்ளேயே எழுந்தால் அல்லது வெளியிலிருந்து வந்து தாக்கினால், அவற்றையும் தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியதை கொள்வதற்காக இடம் கொடுக்க முடியாது. நம் நாட்டுக்குள்ளேயே புத்த, ஜீன

மதங்கள் வேதத்தின் ஒவ்வொரு அம்சத்தில் ( aspect ) எழுந்தன. அதனால் ஹிந்து மதமே இவற்றையும் தனக்குள் ஜெரித்துக் கொண்டுவிட்டது. பல பலவாக தர்மங்கள் விரித்து இருந்தால், இன்னும் புதிசான பலவற்றுக்கும் இடம் தந்து தனதாக்கிக் கொளள முடிந்தது.

அவற்றை எதிரியாக நினைத்துச் சண்டை போட்டுத் தோற்றுப் போக வேண்டியதில்லை. முஸ்லீம்கள் வந்தபின் அவர்களுடைய சில பழக்கங்கள் மட்டும் நம்மவருக்கு வந்தன. தத்துவம் என்று எதையும் அவர்களிடமிருந்து எடுத்து கொண்டதாகச் சொல்வதற்கில்லையானாலும், உடுப்பு போன்ற சில விஷயங்களில், சங்கீதம், சிற்பம், சித்திரம் போன்றவற்றில் அவர்களுடைய வழிகளை (Moghul culture) கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். அதுவும் நம்முடைய வைதிக கலாசார (Vedic culture) ப் பிரவாகத்தில் தனியாக நிற்காமல் கரைந்து போயிற்று. இதுகூட வடக்கேதான் ஜாஸ்தி நடந்தது. தென்னிந்தியா துருக்க இன்ஃப்ளூயென்ஸுக்கு ரொம்பவும் ஆளாகாமல் கூடியமட்டும் தன் பழைய வழியிலேயே இருந்தது. (Contd..)

அப்புறம் வெள்ளைக்காரர்கள் வந்தபின் எல்லோருக்குமே - வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் தேசம் முழுவதிலுமே - வைதிக நம்பிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஏன் நிலைமை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா மாறிற்று. ஏன் இப்போது அரசியல் தலைவர்களாக இருக்கப்பட்ட எல்லோரும் வர்ண தர்மத்தை காஸ்டிஸம் காஸ்டிஸம் என்று கரித்துக் கொட்டும்படியாயிருக்கிறது தேசத்தின் முன்னேற்றத்துக்காக ஜாதிதான் பெரிய தீமை செய்கிறது என்ற அபிப்பிராயம் பரவலக உண்டாக்கியிருப்பது ஏன். ஜாதி என்று சொன்னாலே ஜெயிலில் பிடித்துப்போட்டிவிட வேண்டும் என்ற நினைக்கிற அளவுக்கு ஆகியிருப்பது எதனால்.

இதற்கு எனக்கு தெரிந்த மட்டும் காரணங்களை, யார் பொறுப்பாளி என்பதை பின்னால் சொல்கிறேன். தற்போது வர்ண தர்மத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பவர்கள். எதனால் இப்படிச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம். அவர்களுக்கு வர்ண தர்மத்தில் ரொம்பவும் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோலத் தெரிகிறது. இப்படி இருக்கக்கூடாது. எல்லாரையும் ஒருமாதிரி ஆக்கி உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், இகு காரிய சாத்தியம்தானா. இதைத் தெரிந்து கொள்வதற்கு ஜாதி முறை இல்லாத மற்ற தோசங்களைப் பார்த்தாலே போதும். எல்லாம் சமமாகி விடுவது ஒரு நாளும் நடக்காத காரியம் என்பதற்கு அந்தத் தேசங்கள் எல்லாம் பிரத்தியக்ஷ உதாரணங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் உயர்த்தி தாழ்த்தியில்லை என்றால் வர்க்கப் பூசல்கள் (clause conflicts) இருக்கக்கூடாதுதானே. ஆனால் யதார்த்தத்தில் இப்படியா இருக்கிறது. எங்கே பார்த்தாலும் சௌகர்யப்படாதவர்கள் என்ற பிரிவும், இவர்களுக்குள் சண்டையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் தர்மத்தை உள்ளபடி புரிந்து கொண்டால் ஜாதியால் பெரியவன் சின்னவன் என்று வாஸ்தவத்தில் இல்லவே இல்லை. ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு அபிப்ராயம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தைப் போக்கடிக்க வேண்டியதுதான் நம் கடமையே ஒழிய, அதற்காக அந்த முறையையே தொலைக்கக் கூடாது. (Contd...)

இப்போதைக்கு ஜாதியில் உயர்த்தி - தாழ்த்தி எண்ணத்தையும், அதனால் உண்டான மனக் கசப்பையும் ஒத்துக் கொண்டாலும்கூட, மற்ற தேசங்களிலும் இந்த மனக்கசப்பு சமூகப் பிரிவுகளிடையே இருக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் ஜாதியால் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுகிறான் என்று ஒருவனிடம் துவேஷம் இல்லாவிட்டாலும் பணத்தால் நம்மைவிட உயர்ந்தவன், பதவியால் உயர்ந்தவன் என்று இன்னொருத்தனிடம் வெருப்பு இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் ஒருத்தனுக்குமே சாப்பாட்டுக்கோ, துணிக்கோ, ஜாகைக்கோ குறைச்சல் இல்லை. வேலைக்காரனிடம்கூட கார் இருக்கிறது என்கிறார்கள். எனவே, அவரவரும் திருப்தியாக இருக்க வேண்டியதுதானே. ஆனால் நாம் பார்ப்பதென்ன. அங்கேயும் ஒரு கார் வைத்திருப்பவன் இரண்டு கார் வைத்திருப்வனைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறான். பாங்கில் கோடி டாலர் வைத்திருப்பவன் இரண்டு கோடி டாலர் வைத்திருப்பவனைப் பார்த்து அசூயைப் படுகிறான். தனக்கு ஜீவிக்க எல்லா சௌகரியமும் இருந்துங்கூட, தன்னைவிடப் பணம் ஜாஸ்தியாக இருப்பவனைப் பார்த்து உரிமைச் சண்டை, சலுகைச் சண்டையெல்லாம் கிளப்புகிறான் என்றால் என்ன?. அர்த்தம். அவன் தன்னைவிட உயர்ந்த ஸ்திதியில் இருக்கிறான் என்று இவன் நினைக்கிறான் என்றுதானே அர்த்தம். இப்படியாக அங்கெல்லாம் உள்ளூர ஒரு தினுசில் உயர்த்தி - தாழ்த்தி எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

கம்யூனிஸ்டு தேசம் மாதிரி எல்லாருக்குமே சம்பளத்தை சமமாக அளந்து தருவதாக வைத்துக் கொண்டாலும், அங்கேயும்கூட ஒருத்தன் ஆபீஸராகவும், இன்னொருத்தன் கிளர்க்காகவும் இருக்கத்தான் வேண்டியிருக்கிறது. வெளியிலே சண்டைபோட முடியாதபடி ராஜாங்க நிர்பந்தம் வேண்டுமானால் இருக்கலாமேயழிய, இந்த மாதிரி பதவியிலும் ஸ்தானத்திலும் வித்தியாசம் இருக்கிற வரையில் உள்ளூரப் போட்டி, அசூயை இருக்கத்தான் செய்யும். கம்யூனிஸ்ட் தேசங்களில்தான் ரொம்ப உயர்ந்த செலவிலேயே இந்தப் போட்டி ஏற்பட்டு, இன்றைக்கு சர்வாதிகாரி மாதிரி இருக்கிற ஒருத்தன் நாளைக்குப் போன இடமே தெரியாமல்போய், இன்னொருத்தன் அந்த ஸ்தானத்தில் வந்து உட்காருகிறான். பதவியால் ஆக்குவதும் சாத்தியமில்லை. அதாவது உயர்த்தி - தாழ்த்தி என்பது ஏதோ ஒரு தினுசில் இருந்து கொண்டுதான் இருக்கும். (Contd..)

No comments:

Post a Comment