Friday, May 4, 2012

hINUSIUM PART3

from tuglak tamil magazine
சமூக சௌஜன்யத்துக்குக் குந்தமாகப் போட்டியிலும் அசூயையிலும் கொண்டுவிடுகிற இப்படிப்பட்ட உயர்த்தி - தாழ்த்தி ஏற்பாடுகளைவிடப் பாரம்பரியத்தால் உண்டானதாகத் தப்பாக நினைக்கப்படுகிற ஏற்றத் தாழ்வுதான் இருந்து விட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றுகிறது. இதனால் தேசத்தில் பொதுவாக சாந்தியும், அவரவருக்குத் திருப்தியும்,இசதுதான் நமக்காக ஏற்பட்டது என்பதில் பொதுமேற்ற மனசும் இருந்தன அல்லவா.

வாஸ்தவத்தில் அத்தனை தொழிலும் சமூக க்ஷேமத்திற்காக உண்டானவைதான். ஒன்று உயர்வு, இன்னொன்று தாழ்வு என்றில்லை. எந்தத் தொழிலைச் செய்தாலும் ஆசை வாய்ப்படாமல் அதைச் சுத்தமாக ( perfect ) ப் பண்ணி ஈசுவரார்பணம் செய்தால் அதைவிடச் சித்த சுத்திக்கு வேறு மருந்தில்லை.

ஒன்று, உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்பது அட்யோடு பிசகு. ஆனால் இப்படி பிசகாக நினைத்தால்கூடப் பரவாயில்லை. மற்ற தேசங்களிலும் இதைவிடப் பிசகான மற்ற தேசங்களிலும் இதைவிடப் பிசகான ஏற்றத் தாழ்வுகழ் இருக்கதாதன் செய்கின்றன. அதனால் இங்கேயில்லாத போட்டி, சண்டைதான் அங்கெல்லாம் உண்டாகின்றன என்று சொல்ல வந்தேன்.

நாம் பிரிந்து பிரிந்தே ஒற்றுமையாக இருந்து நம் நாகரீகத்தை பெரியதாக வளர்த்திருக்கிறோம். மற்றவர்கள் பிரியாமல் இருப்பதாக நினைத்துக் கொண்டே, ஒற்றுமையில்லாமலிருந்துதான் அந்த நாகரிகங்கள் விழுந்து விட்டிருக்கின்றன. இங்கே காரியத்தில் மட்டும் பேதமிருந்து உள்ளூர ஜக்கியம் இருந்ததால் நாகரீகம்

வளர்ந்நது. அங்கெல்லாம் காரியத்தில் பேதமில்லாமல், அதனால் வந்த போட்டியாலேயே மனோபேதங்கள் உண்டானதென்றால் வெளி நாகரீகங்கள் படை எடுத்து வந்தபோது அவற்றிடம் உள்ளூர் நாகரீகங்கள் தோற்றுப்போக நேர்ந்தது. (Contd..)



எல்லாவற்றையும் ஒன்றாகவும் பண்ணி உயர்வாகவும் வைத்திருப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லாம் ஒரேடியாகப் பிரித்து பேதப்பட்டுக் கிடப்பதும் உதவாது. இரண்டுக்கும் மத்தியமாக சமரசமாக ஒரு வழியை தர்ம சாஸ்திரம் தந்திருக்கிறது. நான் அதற்குப் பிரதிநிதியாக வருகிறேன். அதனால்தான் அநுஷ்டானத்தில் வேற்றுமையும் வேண்டும். இருதயத்தில் ஒற்றுமையும் வேண்டும் என்கிறேன். இரண்டையும் குழப்ப வேண்டாம் என்கிறேன்.

வெளிக் காரியங்களில் எத்தனை வேற்றுமை இருந்தாலும், இதயத்தில் அன்று இருந்தால் தேசத்தில் பரம சாந்தமே இருக்கும். யுக யுகாந்திரமாக நம் தேசத்தில் அப்படித்தான் சமூகம் சாந்தமாக இருந்து வந்தது. அவரவரும் சுயநலனை மட்டும் எண்ணாமல், சகல ஜனங்களுக்காகவும் நாம் இந்தக் கர்மத்தைச் செய்கிறோம் என்ற மனோபாவத்துடன் தங்கள் பரம்பரைக் கர்மத்தைச் செய்தால் ஏற்றத் தாழ்வு இல்லை. என்ன விபரீதம் ஏற்பட்டாலும் சாமானிய தர்மங்களை அனைவரும், விசேஷ தர்மங்களை அவரவரும், விசேஷ தர்மங்களை கூடிய வரையில் ரக்ஷித்து வந்தால் எந்த நாளும் நமக்குக் குறை வராது.



இங்கு மட்டும் இருப்பானேன்

உலகத்தில் மற்ற தேசங்கள் இல்லையா?. அங்கேயும் மதங்கள் இல்லையா?. அந்த மதங்கள் அந்த தேச ஜனங்களுக்கு இப்படிப் பாரம்பரியமாகத் தொழில்களை வருத்துக் கொடுத்து ஜாதி, ஜாதி என்று வைக்கவில்லையே!. நமக்கு மட்டும் எதற்கு?. என்ற கேள்வி பிறக்கிறது.

ஜாதிகள் என்று பிரித்து வைக்காத தேசங்களிலும், சாஸ்திரங்களையும் அறிவு நூல்களையும் வளர்க்கிறவர்கள், ராஜ்யபாரம் நமத்தி யுத்தம் செய்கிறவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளிகள் எல்லோரும் இருக்கத்தான் செய்தார்கள்!. இன்னைக்கும் இருக்கிறார்கள்.

ஆனாலும் 'இது நம் தேசம்'என்கிற சுய அபிமானம் இல்லாமல், நிஷ்பக்ஷிபாதமாகவே பார்த்தாலும், நம் தேசத்தின் மகோன்னதமான நாகரீகம்

மாதிரி அங்கெல்லாம் எங்குமே கானோமே. மற்ற தேசங்களில் நடுநடுவில் ஒரு பெரிய நாகரீகம் தோன்றினாலும்கூட, அது இங்கே இருக்கிற மாதிரி இத்தனை ஆயிரம் வருஷங்கள் நீடித்து நிலைத்து நிற்கக் கானோமே. நாமே நம் பெருமையை சொல்லிக் கொள்வது என்றில்லை. அலெக்ஸாந்தர் காலத்திலிருந்து நாம் இத்தனை அகல பாதாளத்திற்கு போயிருக்கிற இன்றைக்கு வரையில்கூட, வெளிதேசத்தவர்கள் சகலருமே, ஹிந்து நாகரிமா (Hindu Civilisation) ஆ! அப்பாடா, அது எத்தனை மகோன்னதமாக இருக்கிறது! என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்களே! இதற்கு விசை என்ன?

அங்கெல்லாமும் மகாபுருஷர்கள், ஞானிகள், பக்தர்கள், பரோபகாரியங்கள், தியாகிகள், பிறந்துதான் இருக்கிறார்கள். ஆனாலும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் ஒரு தேசத்தில், அவிச்சின்னமாக (அறுபடாத தொடரிழையாக) எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக தலைமுறைக்குத் தலைமுறை கூட்டம் கூட்டமாக உத்தம புருஷர்கள், சாதுக்கள், ஞானிகள், தத்துவ சிந்தாந்திகள், பக்தர்கள் பரோபகாரிகள் தோன்றின மாதிரி வேறெங்குமே காணோம். அத்தனை வெளி தேசங்களிலும் இருக்கிற மகான்களைக் கூட்டினாலும் அதைவிட இங்கே மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதை land of saints, land of sages என்றெல்லாம் நாம் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதும் இல்லை. மற்ற தேசத்துக்காரர்களே தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள். இப்படி ஒரு வேதாந்தமா? இப்படி ஒரு தத்துவங்களா?என்று நாம் கிரந்தங்களைக் கொண்டாடி நமஸ்காரம் செய்கிறார்கள். (Contd..)

Cheenu
கலை, சிற்பம், சங்கீதம், காவியம், ஜோதிஷம், கணிதம் மாதிரி அறிவு சாஸ்திரங்கள், வைத்திய சாஸ்திரம் என்று எதை எடுத்தாலும் இந்தியாவுக்கு நிகர் எதுவுமே இல்லை என்று லோகமே வானளாவிப் புகழ்கிறது. உபநிஷத்து, கீதை, ராமாயணம், சாகுந்தலம் இந்த மாதிரி உலகத்திலேயே இல்லை என்கிறார்கள். தமிழ் நூல்களிலேயே இருக்கப்பட்ட தேவாரம், திவ்யப் பிரபந்தங்கள் போன்ற பக்தி நூல்கள் லோகத்திலேயே வேறெங்கும் இல்லை என்கிறார்கள். குறளைப் பார்த்து இப்படியும் ஒரு சின்ன நூல் அத்தனை நீதிகளையும் இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்வதற்கு உண்டா என்று ஆச்சரியப் படுகிறார்கள். என்ன கோபுரம், என்ன சிற்பங்கள், திவ்விய விக்கிரகங்கள், எப்படிப்பட்ட சங்கீதம், பரத நாட்டியம் என்று அந்நிய தேசத்தவர்கள் எல்லாம் பிரமித்து, தாங்களாகவே இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக வீடு வாசலை எல்லாம் விட்டுவிட்டு இங்கே ஒடி வருகிறார்கள். வெள்ளைக்காரர்கள் நம்மை அடிமைப்படுத்தி, ஒரு பக்கத்தில் நம்மிடம் இல்லாத தோஷங்களை எல்லாம் சுமத்தி, நம்மைப் பிரித்துப் பிரித்து வைத்து ஆட்சி பண்ணினாலும் (divide and rule) இன்னொரு பக்கத்தில் நம் நாகரீகத்தைப் பார்த்து அதிசயப்பட்டு நம்முடைய சாஸ்திரங்களை எல்லாம் தேடித் தேடி எடுத்து ஆராய்ச்சி செய்து தங்கள் பாஷையில் தர்ஜுமா பண்ணி (மொழி பெயர்த்து) வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒர் உன்னதமான நாகரீகம் இங்கு மட்டும் இருக்கும்படியாக அப்படி இங்கே பிரத்யோகமாக என்ன விசேஷம் இருந்தது?மற்ற தேசங்களில் இல்லாமல் நம் சமூக வாழ்வில் மட்டும் என்ன பிரத்யோக அமைப்பு இருந்தது என்று

பார்த்தால், இந்த வர்ணாசிரம தர்மம் ஒன்றுதானே அகப்படுகிறது.

சீர்திருத்தக்காரர்களால் நம் குறைகளுக்கெல்லாம் இருப்பிடமானது என்று நினைக்கிற வர்ண தர்மம் என்ற தனியம்சம் இருக்கிற நம் தேசம்தான் மற்ற எல்லா தேசங்களையும்விட தத்துவத்தில், குணசீலத்தில், கலைகளில், அறிவில் எல்லாவற்றிலுமே நிறைந்து தலைசிறந்து நிற்கிறது.

சமுதாயத்தில் ஒரு ஸ்திரத் தன்மை ( Stability ) இருந்தாலொழிய, அதனால் ஏற்படுகிற, தத்துவம், கலை அறிவு நூல்கள் எதுவுமே இப்படித் தலைமுறை தலைமுறையாக வளர்த்து வந்திருக்க முடியாது. தத்துவ ஞானிகளும், கலாமேதைகளும் இப்படிக் கூட்டம் கூட்டமாகப் பிறந்திருக்க முடியாது. (Contd..)

Cheenu
மற்ற தேசங்களில் அந்தந்த மதங்கள் போட்டுத் தந்த சமூக வாழ்க்கை முறையில் இப்படி ஸ்திரத் தன்மையை உண்டாக்கிக்கூடியதாக எந்த அமைப்பும் இல்லை. சமூக வாழ்வு அடிப்படை (Sociological foundation) என்பதையேகூட அவை பெரும்பாலும் கவனிக்கவில்லை என்று சொல்லி விடலாம். ஏதோ பொதுவாக திருடாதே, பொய் சொல்லாதே, விபசாரம் பண்ணாதே, சத்தியமாய் இரு, தியாகமாயிரு, அஹிம்சையாய் இரு என்கிற மாதிரி சொல்வதற்கு அதிகமாக, அவை சமூக வாழ்வை ஒழுங்குபட்டுத்தி அமைத்துக் கொடுப்பதில் ரூல்கள் செய்யவில்லை. மதத்தையே வாழ்வாக்கிக் கொண்ட பிக்ஷ§க்கள், பாதிரிமார்கள் மாதிரி இருக்கப்பட்டவர்கலுக்கு விதிகள் வகுத்துக் கொடுத்து சங்கமாக ஸ்தாபன ரீதியில் ஒழுங்கு செய்தனவே தவிர, சமுதாயம் முழுவதும் இணைந்து அதில் உள்ள எல்லோரும் ஒருத்தனையருத்தர் தாங்கி நிற்கிற மாதிரி எந்த ஏற்பாட்டையும் செய்வதில் அவை விசேஷமாக கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

இதனால் என்ன ஆயிற்று. சாஸ்திர வளர்ச்சி, தேச ரக்ஷணம், வியாபாரம், விவசாயம், சரீர உழைப்பு எல்லா அம்சங்களும் மற்ற தேசங்களிலும் இருந்தாலும்கூட, எல்லாவற்றிலுமே எப்போது பார்த்தாலும் போட்டியும்கூடவே இருந்திருக்கிறது. நமக்கென்றே இந்தத் தொழிலும் ஏற்பட்டது என்றில்லாமல், எல்லோருக்கும் எல்லாவற்றிலும் போய் விழுந்திருக்கிறார்கள். முதலில் நம் தேசத்தில் இருந்த மாதிரி நம்முடைய ஜீவனோபாயத்துக்குக் கவலையில்லை. நிச்சயமாக இதோ இந்தத் தொழில் நமக்கு இருக்கிறது. வழி வழியாகச் செய்துவந்தால் நமக்கு ஸ்வபாவமாக, சுலபமாகக் கைவருகிற தொழிலாக ஒன்று இருக்கிறது. எந்த ஸ்திரத் தன்மை, நிச்சிந்தயான நிலைமை இல்லை. இது இருந்து விட்டால் அப்புறம் சமூக ஸெளஜன்யத்துக்கும் சாந்தத்துக்கும் கேட்கவே வேண்டாம். அப்படியிருந்தால்தான் நம் தேசத்தில் இப்படி உத்தமப் பண்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை வாழ்க்கையில் நடத்திக் காட்டிய உத்தம புருஷர்கள் கணக்கு வழக்கில்லாமல் தோன்றியிருக்கிறார்கள். மற்ற தேசங்களில் இந்த நிச்சயத்தன்மை இல்லாததால் ஒருத்தருக்கொருத்தர் போட்டியும் பூசலுமாக இருந்திருக்கின்றனர்.

சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறப்படி பார்த்தால், பெரும்பான்மையான ஜனங்கள் அடக்கி வைக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கிற வர்ண தர்மத்தைக் கொண்ட நம் தேசத்தில்தான் சமூகப் புரட்சிகள் ( Social Revolution s) நிறையத்

தோன்றியிருக்க வேண்டும். (Contd..)

Cheenu
ஆனால், இந்த வார்த்தையே நமக்குப் புதிசானது, பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, ருஷ்யப் புரட்சி என்றெல்லாம் சரித்திர புஸ்தகத்தில் படித்த பிறகுதான் நமக்கு பெரிய ஜனசமூகமே புரட்சி என்று ஒன்றில் குதிக்கக்கூட அவசியம் ஏற்படலாம் போலிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. மற்ற தேசத்துச் சரித்திரங்களைப் பார்த்தால் புரட்சிக்குமேல் புரட்சி என்று பொது ஜனங்களே செய்வதைப் பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக ஒரு புரட்சியும் சாசுவதமாக எதையும் சாதித்துப் புரட்டிவிடவில்லை என்று பார்க்கிறோம். ஒரு புரட்சி வந்து ஒரு ஜம்பதி நூறு வருஷமானால் இன்னொரு புரட்சி வந்துதான் இருக்கிறது. அதைவது ஜனங்களுக்கு அதிருப்திதான் இருந்திருக்கிறது. இன்றைய நிலைமையோ கேட்கவே வேண்டாம். அத்தனை தேசங்களிலும் ஒழுங்கீனம், மிருகப் பிராயமான வெறிக் கூத்துகள், கிளர்ச்சிகள், ஸ்டிரைக்குகள், தினமும் ஒரு ராஜாங்கம் முழுகுவதும் இன்னொன்று வருவதுமாக லோகம் முழுக்கத் தத்தளிப்பில் இருக்கிறது. ராஜாங்கத்தாரே சர்வாதிகாரம் நடத்தி, தலையைத் தூக்கினால் மண்டையில் போட்டுவிடுவேன் என்று சொல்கிற ருஷியா மாதிரி தேசங்களில்தான் புரட்சியில்லாமலிருக்கிறது.

அங்கேயும் எரிமலை மாதிரி எப்போது வெடித்துவிடுமோ என்கிற நிலையில் உள்ள குமுறல் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவ்வப்போது ஒரு அறிஞர் அல்லது எழுத்தாளர் உயிர் போனாலும் போகட்டும் என்று அங்கிருந்து தப்பி ஒடிவந்து அங்கே நடக்கிற கொடுங்கேன்மையைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கேயும் ஜனங்கள் உள்ளூர நிறைந்து இருக்கவில்லை என்கிறார்கள். இந்தியாவில் இப்படி ராஜாங்க சர்வாதிகாரம் ஒரு நாளிலும் இருந்ததில்லை. அடிமை ஜனங்களிடமிருந்து இத்தனை கலைகள், சாஸ்திரங்கள் ஒருக்காலும் தோன்றியிருக்க முடியாது. எங்களை அடக்கி வைத்திருப்பதைப் பாருங்கள் என்று வெளி ஜனங்களிடம் நாம் அழுததும் இல்லை. சுதந்திரமான சூழ்நிலையில் மனசு மலர்ந்திருந்தாலொழிய இத்தனை அறிவு நூல்களும் கலைகளும், கோயில்களும் தோன்றியிருக்கவே முடியாது. பொது ஜனங்களும் எண்ணிக்கையில் ஜாஸ்தி இருந்தால்கூட மூடநம்பிக்கையால் (Superstition) புரோஹித ஜாதிக்கு (Priest - craft - என்று சொல்கிறார்கள்.) பயந்து ஏமாந்து கிடந்தார்கள் என்று சொல்வது கொஞ்சம்கூடப் பொருந்தாது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கக் காடுகள் மாதிரிக் கலாச்சாரம் வளராத தேச ஜனங்களைப்பற்றி அப்படிச் சொன்னால்தான் புரியும். அங்கேயெல்லாம் பூசாரி என்கிறவன்தான் ராஜா மாதிரி. பார்த்தாலே பயப்படுகிற மாதிரி இருப்பான். (Contd...)

Cheenu
எதனால் இப்படிக் குறைந்தது. எதை விட்டதால் நமக்கு இந்த பலஹீனம் வந்தது. எது நமக்கு இத்தனை ஆயிரம் வருஷங்கள் புஷ்டியைத் தந்து நம் நாகரீகத்தைத் தழைத்து வளர வைத்தது?. எதை விட்டபின் நாம் அந்த நாகரீகத்தின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படும் படியான vFF வந்திருக்கிறது. இதை ஆலோசித்துப் பார்த்தால் மற்ற தேசங்களில் இல்லாத வர்ண தர்மம் இங்கே மட்டும் இருந்தவரையில் நம் நாகரீகம் மாத்திரம் பாறாங்கல் மாதிரியான இத்தனை நூற்றாண்டுகள் உலகமே போற்றுகிற விதத்தில் வளர்ந்து வந்திருக்கிறதென்றும் இந்த தர்மத்துக்கு நலிவு உண்டாக ஆரம்பித்ததிலிருந்து நாமும் தினம் தினம் கீழே போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிகிறது.

வர்ண தர்மம் இங்கு மட்டும் இருப்பானேன்?என்றால் இந்த தேசத்தில் மட்டுமாவது ஆத்ம சிந்தனைக்கும், தெய்வ அநுபவத்துக்கும், கலைகளுக்கும், உத்தமமான பண்புகளுக்கும் அநுகூலமான ஒரு நாகரீகம் இருக்க வேண்டும்

என்று நமக்கு ஆசையிருந்தால், இவற்றுக்கான வர்ண தர்மமும் இருக்க வேண்டும். இங்கு மட்டும் இருப்பானேன்?. என்றால் இங்கு மட்டுமாவது இருந்தால்தான் உலகத்துக்கே ஒரு நல்ல உதாரணம் கிடைக்கும் என்பதற்காகவே இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் போட்டிதான் உடனே பொறாமைதான், அதிருப்திதான், சமூகச் சச்சரவுதான், சௌகரியமான படிப்பு, தொழில் இவற்றுக்குத்தான் எல்லாரும் வரப்பார்ப்பார்கள். ஆனால், அது எல்லாருக்கும் இடம்தர முடியாது. உடனே துவேஷம், பேதம், அசூயை தோன்ற வேண்டியதுதான். இப்போதே பாருங்கள். படித்தவர்களுக்கிடையிலேயும், வேலை இல்லாத் திண்டாட்டம் வந்தது என்றவுடன், காலேஜ் அட்மிஷனுக்குக் கட்டுப்பாடு போட வேண்டும் என்கிறார்கள். எஞ்ஜினியர்கள் ஜாஸ்தியாகி விட்டார்கள். என்ஜினியர் காலேஜ் சிலவற்றை மூடப்போகிறோம் என்கிறார்கள். (contd..)

Cheenu
அதாவது எல்லோருக்கும் எல்லாம் என்று வைக்க முடியாமல், இவர்களும் ஏதோ ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரத்தான் வேண்டியிருக்கிறது. இதையே பாரம்பரியம் என்கிற கட்டுப்பாடாக ஆதியில் வைத்தார்கள். அப்போது தொழிலே ரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலே ஒரு பெருமையுடன் இது நம் அப்பன் பாட்டன் காலச்சொத்து. நம் குலத்தனம் என்கிற நிறைவு இருந்தது. அந்தந்தத் தொழிலைச் செய்வதிலும் அந்தரங்க விசுவாசம் இருந்தது. அதனால் நல்ல திறமையும் (Efficiency) இருந்தது. இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டால் தொழிலை ஒழுங்கில்லாமல் செய்கிறான். முன் காலத்தில் பணம் இரண்டாம்பட்சம். விசுவாசத்தோடு தன் தொழில் என்று திருப்தியோடு செய்தால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காய் நடந்தன. சமூகமே நன்றாக இருந்தது.

நிறைவு இல்லாமல் ஒரு நாகரீகமும் இல்லை. சமூகத்தில் அத்தனை பேருக்கும் இப்படிப்பட்ட நிறைவை ஏற்படுத்தித்தந்த வர்ண தர்மம் என்ற உத்தமமான ஏற்பாட்டைக் குற்றம் சொல்லவே கூடாது.

அந்த மாதிரியே மறுபடி செய்ய முடிகிறதோ, இல்லையோ?அப்படி முடியச் செய்கிறதுக்கு நம்மாலானதைச் செய்து தோற்றுப் போனாலும் சரி, அல்லது இந்தச் சாத்தியமில்லாத காரியத்தில் இறங்குவானேன்?என்று விட்டுவிட்டாலும் சரி - கடைசிப் பட்சமாக, அந்த ஏற்பாடுகள்தான் நம் மதத்தின் சகல ஜன சமூகங்களுக்கும், நம் தேசத்துக்கும், அதன் வழியே லோகம் முழுவதற்கும் ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாகப் பரம சிரேயஸைத் தந்திருக்கிறது. அதைத் தோஷம் சொல்வது ரொம்பத் தப்பு.

No comments:

Post a Comment