காஷ்மீரம் வரலாறு
முன்னாளில் ஜலோத்பவன் என்ற அரக்கன் இப்பொழுது காஷ்மீர் இருக்குமிடத்தில் சதி சரஸ் என்ற பெரிய ஏரியில் ளிந்து கொண்டான்.காசியப முனிவர் கணவாய் வழியே நீரை வெளியேற்றி அசுரரைக் கொன்று ஏரி இருந்த இடத்தை காஷ்மீர நாடாக்கினார்.காஷ்யபர் ஏற்படுத்திய நாடு காஷ்மீரம்.நீல மத புராணம் காஷ்மீரின் இயற்கை எழில், ஹர முக்தா, நந்தா பர்வதம், அமரநாத்,மகாதேவகிரி,இந்தர நீலம், கௌரி சிகரம் மலைகளின் பெயர்கள், மக்களின் சமூக வாழ்வு., ஆடல் பாடல் பற்றி கூறும் சமூக வரலாறுநூலாகும்.
ராஜ தரங்கிணி காஷ்மீரை ஆணடமன்னர்களின் வரலாற்றைக் கூறும்ஸம்ஸ்கிருத காவியம்.
பஞ்ச பாண்டவர் காலம் கி.மு.1184ல் இருந்து நூல் முடிக்கப்பட்ட 1070சக ஆண்டு அல்லது கி.பி.1148-49.இந்த வரலாறு கி.மு1184 + கி.பி.1149 =2333 ஆண்டு வரலாறாகும்.
கி.மு.1184ஆம் ஆண்டுக்கு முன்னால் ஐம்பத்திரண்டு அரசர்கள் எஎஎஎஆண்டுகள் காஷ்மீரை ஆண்டனர்.ஆனால் போதிய வரலாற்று சான்றுகள் இல்லை. எனவே மஹாபாரதத்தோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியையும் இதன் ஆசிரியர் கல்ஹணர் சொல்லுகிறார்.
கோநந்த வம்சத்தின் முதல் மன்னாகிய கோநந்தனின் உறவினன் ஜராசந்தன். இவன் திருதிராஷ்டனின் மகளை மணந்தவன்.இவன் மதுராபதி கிருஷணனை எதிர்க்க கோநந்தனின் உதவியை நாடினான்.வடமதுராவை முற்றுகையிட்ட கோநந்தன் யாதவ படையால் கொல்லப்பட்டான்.அவனது பேரன் மூன்றாம் கோநந்தனோடு வரலாற்று நூலை கி.மு.1184லிருந்து தொடங்குகிறார்.
ஒரு வரலாற்றை எப்படி எழுதப்பட வேண்டும்என்று கல்ஹணர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்."வரலாற்று நிகழ்ச்சிகளை பாரபட்சம் இன்றிவருப்பு வெறுப்பு இன்றி வரலாற்றுசெய்திகளுக்கு தகுந்த ஆதார சான்றுகளுடன் சிக்க்கலின்றி தெளிவாகஇருக்க வேண்டும்". ஒவ்வொரு தரங்கம் முடிவிலும் சம்பக பிரபுவின் மைந்தர் கல்ஹணர் என்று காணப்படுவதால் தந்தையின் பெயர் சம்பகர் , பிரபு வம்சத்தவர் என்று தெரிகிறது. நந்தி ஷேத்திரம் என்ற சைவத்தலத்தில் சம்பகபிரபு தான் வருஷம் முழுவதும் ஈட்டிய செல்வத்தை ஏழுநாட்கள் நற்பணியில் செலவிட்டார் என்பதால் இவர் ஒரு சைவர் என தெரிகிறது.
ராஜ தரங்கிணியில் எட்டு தரங்கிணிகள் 7826 பாடல்கள் உள்ளன.
இதில் காஷ்மீரை ஆண்ட முதல் வம்சமான கோநந்த வம்ச மூன்றாம் கோநந்தனோடு தொடங்கி அடுத்து வந்த விக்ரமாதித்ய வம்சம்., ஹுனர் வம்சம்,குஷானர், மௌரியர் வம்சம். அதன்பின் மீண்டு வந்த கோநந்தா, பின் வந்த புகழ் பெற்ற கார் கோடக வம்சம் என்ற நாக வம்சம், உத்பல வம்சம் பின் வந்த பல வம்சங்கள் பற்றிய விவரங்கள் தருகின்றது.
இந்து பௌத்த சமயஙகள் இரண்டும் நல்லிணக்கத்தோடு பல நூற்றாண்டுகள் வாழ்தது.அசோகர் கட்டிய நூற்றுக்கணக்கான புத்த விஹாரங்கள், அவர் கட்டிய "ஸ்ரீநகர்" பற்றிய செய்திகள்., நல்லாட்சி செய்யாத கொடுங்கோல் மன்னர்கள் கூட புத்த விஹாரங்களும் சிவாலயங்களும் கட்டிய செய்தி, வீரப்போர்கள், நயவஞ்சங்கள்,அரண்மனை சூழ்ச்சிகள், சதிகள் இன்றும்் நிலைத்து நிற்கும் பல பொது நலப் பணிகள் என்றுபலவற்றையும் கல்ஹணர் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டே ஆண்டுகளில் எஎஎஎ ஆண்டு வரலாற்றை தொடர்ச்சியாக அதிகமாக குறை சொல்லமுடியாத வகையில் வரலாறும் காவியமுமாக இணைந்த நூலாக செயற்கரிய செயலாக படைத்தார்.
எல்லா மன்னரகளுடைய ஆட்சிகாலங்களும்இத்தனை ஆண்டுகள், மாதங்கள்., சில இடங்களில் நாடகள் கூட துல்லியமாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment