Wednesday, March 23, 2016

சிவபெருமானின் பல வடிவங்கள்




சதாசிவம்
சிவபெருமானிடமிருந்து ஒலி பிறந்து.இசை, தாளம், ஆடல் இவர் தோற்றிவித்தவை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாகாடர்கள் படைத்த சிலையில் ஏழு ஸ்வரங்களுக்கு ஏழுஉடலாக காட்சிதருகிறார்.நெடிந்துயர்ந்த முழுஉடலுடன் ஈசன் நிற்க தலைக்கு மேல் ஒன்றின் மேல் ஒன்றாக இரு உடலும் வலதுபுறம் இரு உருவங்களும் இடது புறம் இரு உருவங்களும் எல்லாவற்றிற்கும் மேலேயுள்ள உருவில் எட்டு கரங்களும் மற்றவை நான்கு கரங்களுடன் உள்ளனகீழே பூதங்கள் யாழ்,குழல், கைதாளம் முழவம் இசைக்கின்றன.
லிங்க உருவின் அடிபகுதி சதுரபாகம் பிரம்மா, எண்பட்டை இடைபகுதி விஷ்ணு.உருண்டை மேல்பகுதி சிவன் என ஆகம சிற்பநூல் கூறுகிறது. சிவ பாகத்தை ஏழு பிரிவுகளாக பகுத்து ப்ரம்ம விஷ்ணு பகுதிகளையும்  சேர்த்து நவ தத்துவம் என்ற அடிபடையில் பூசிக்கப்படுகிறது. ஏழு பகுதிகளாய் உள்ளவை கீழேயிருந்து உருத்திரன்,மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம்., பராசக்தி, பரசிவன் என்று வணங்கப்படுகிறது. இந்த பரசிவத்தை துதிக்கும் நிலைக்கு வரும்போது ரூபமயம் மறைந்து அண்டப்பெருவெளியாக சிவமாக இப்பரவெளியின் தோற்றமும் இயக்கமுமே சிவம் என உணர்கையில் பரமானந்தநிலையும் உணரமுடியும்.இந்நிலையே தாண்டவரூபமான ஈசனின் நடேச ரூபமாகும்.
சதாசிவம்
மகாலிங்கத்தின் பந்துபாக மையமே நாதம்.நாதத்திலிருந்து ஒலி பிறந்தது.ஒலியின் மையமே சாந்தமென்றும் சாந்தேமே பராத்பரன்  என்னும் நடேச சொரூபம்.
சச்சிதானநதம் என்ற சிவரூபமே ஞானம்., கிரியைக்கு காரணமானவன் என்பதால் சதாசிவன்.பிந்துவாகிய சக்திமணோன்மணி என்று அழைக்கப்டுகிறாள். சிவசக்தி இணைந்த சதாக்கிய மூர்த்தியை பத்து கரங்களும் ஐந்து முகங்களும்  கொண்ட சதாசிவன் என்கிறது சிற்பநூல்கள்.
முகமின்றி வடிக்கபடும் லிங்கத் திருமேனி       அவயக்த லிங்கம்
முழு உருவத்துடன் உள்ள லிங்க திருமேனி      வியக்த லிங்கம்
லிங்கோத்பவர், லிங்க புராண தேவர்
ஒன்று அல்லது நான்கு முகத்துடன் உள்ள லிங்கம் வியக்த வியக்த லிங்கம்.
இம்முகத்திலிருந்து அடிப்படை ஓசைகளான அ,ஐ, உ, இ, ஓ என்ற ஓங்கார ஒலிகள்  பிறந்தன.
வாகீச சிவன்
கண்டியூர், தஞ்சாவூர், கரந்தை, செந்தலை ஆகிய ஊர்களில் நான்கு முகத்துடனோ ஒரு முகத்துடனோ முழு உடல், நான்குகரங்கள், தாமரை மீது ஒரு காலை மடக்கி ஒரு காலை தொங்க விட்ட நிலையில் அங்க மாலை, சூலம், தாமரை ஏந்தி இடகரம்  தொடை மீது உள்ளது. இம்மூர்த்தியையும், வாகீஸ்வரியையும் வேள்வி செய்யும் முன் ஆவாகிப்பர்.
பஞ்ச தேக மூர்த்தில
மத்தியில் பெரிய உருவம். பத்து கரங்கள்.திசைக்கு ஒன்றாக  நான்குமுழு உருவம் பெரிய உருவின் மார்வளவு சிறிய உருவங்கள் இரு கரத்துடன் உள்ள செப்பு திருமேனியை இராசராசன் செய்தருளினான் என்ற கல்வெட்டு உள்ளது.ஆனால் சிலை இல்லை.
திருத்துறைபூண்டி கோவிலில் மூன்றாம் ராசராசன் காலத்து நான்கு முகம் கொண்ட கஜசம்ஹார மூர்த்தி சிறப்பு.

No comments:

Post a Comment