Tuesday, March 29, 2016

மீண்டும் ஒரு கணிதப் பாடல்




ஒரு நான்கும் ஈரரையும் ஒன்றை கேளாய்
உண்மையால் ஐயரையும் ஒரரையும் கேட்டேன்
இரு நான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்வாய்
இம்மொழியை கேட்டபடி ஈந்தாயாயின்
பெருநான்கும் இறுநான்கும் பெறுவாய், பெண்ணே
பின்னை ஒரு மொழி புகல வேண்டாம் இன்றே
சரி நான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
சகிக்க முடியாது இனியென் சகியே மானே..!

நான்கு, ஈரரை, ஒன்று     = 4+(2 *1/2)+1=6  
அதாவது ஆறாவது ராசி கன்னி
ஐயரையும் ஓரரையும்   = (5 x1/2)+1/2=2
மூன்றாவது நாள்  =   செவ்வாய்
செவ்வாய் கேட்டேன்    =   முத்தம் கேட்டேன்.
இரு நான்கு, மூன்று, ஒன்று   =   (2 x4)+3+1=12
பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம்     =பதில்
பெருநான்கு, அறு நான்கு = 4+24 =28
பிரபவவில் தொடங்கும் ஆண்டின் 28 வது   ஜய  =  வெற்றி
சரி நான்கு, பத்து, பதினைந்து   =  4+10+15= 29
  29 வது ஆண்டு மன்மத
கன்னியே கேளாய், முத்தமொன்று கேட்டேன்.உன் பதில் என்ன? கேட்டது கிடைத்தால் எனக்கு வெற்றி. நீயும் செவ்வாய் இல்லையெனில் மன்மதன் செய்யும் கொடுமையை சகிக்க முடியாது.  இப்பாடலை எழுதிய  ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

4 comments: