ஆரியபட்டர் பாரதம் பெற்ற வானியல் நிபுணர். இவர் இயற்றிய நூல் கள் ஆரியபட்டீயம், ஆரியப்பட்டீய சித்தாந்தம். இவரது காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி.ஆரியபட்டர் என்ற பெயரை கொண்டு கி.பி.பத்தாம் நூற்றாண்டு வாழ்ந்து மகா சித்தாந்தம் என்ற வானியல் நூலை எழுதிய ஆசிரியர் ஆரியபட்டர் உ என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டீயம் எழுதிய ஆரியபட்டர் வானியல் விஞ்ஞான மூலகர்த்தா என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டீய சித்தாந்தம் என்னும் நூலை பற்றிய விவரங்கள் உரையாசிரியர்களின் குறிப்பிலிருந்துதான் தெரியவருகிறது. மூலநூல்கி டைக்கவில்லை.
ஆரியபட்டர் குஸுமபுரம் என்ற பாட்னாவில் வாழ்ந்தார்.இவர் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைகழகத்தில் முதல்வராக விளங்கியவர். பாண்டுரங்கசாமி,வாத தேவர்,நிசங்கு ஆகியோர் இவரின் திறமையான மாணவர்கள். வாததேவர் பின்னாளில் ஸர்வசித்தாந்த குருவாக போற்றப்பட்டார"ஆரியபட்டீயம்" ஸ்வாயம்புவ சித்தாந்தம் அதாவது ப்ரஹம சித்தாத்ததை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. கோள் விஞ்ஞானம் , கணிதம் போன்ற பல்வேறு தத்துவங்களை இந்த நூலில் 121 செய்யுள்களில் தொகுத்து வழங்கியுள்ளார். இதை இரண்டாக பிரித்து தசகீதிகா சூத்திரம் முதல் நூல். இரண்டாவது ஆர்யாஷ்ட சதம் என்றும் கூறுகின்றனர்.
ஆரம்பம் வரை சென்ற காலஅளவை ஆறுமனுக்களும் 273/4யுகங்களும் என்கிறார்கள்.
இந்த எண்கணக்கு முறை பண்டை கால"கடபயாதி ஸங்க்யை" என்பதிலிருந்து மாறுபடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.மேலும்கீதிகா பாத சூத்திரங்களில் கோள்கள் சஞ்சரிக்கும்பாதையின் சுற்றளவு, அதை கணக்கிடும் முறை, கோள்களின்விட்டம்., சூரியபாதையின் சாய்மான கோணத்தின் அளவு,ஏனய கிரகங்கள் சூரியபாதையை கடக்கும் போது ஏற்படும் கோணங்கள்,அவை கணக்கிடும் முறை ஆகியவை கூறப்பட்டுள்ளது.கீதிகாபாதத்தின் விஷேச அம்சம் செய்யுட்கள் சூத்திர வடிவமாக அமைந்திருப்பதுதான்.மாணவர்கள் மிக பெரிய எண்களையும் எளிதாக மனனம் செய்ய பயன்படுகிறது.
ஆனால் பொதுவாக ஆரியபட்டீயம் என்னுமநூலுக்கு ஏற்ப நான்கு அத்தியாயங்களாக முறையே கீதிகா பாதம்,கோள பாதம்,கணித பாதம், காலக்ரியா பாதம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாம் பாதமான கீதிகா பாதம் கீதிகா விருத்தத்தில் சுத்திர வடிவில் அமைந்த பதின்மூன்று செய்யுள் பத்திகளை கொண்டது.கடவுளவழ்த்தில் ஆரம்பித்து அடுத்து எண்கணககை ஸமிஸ்கிருத பாஷை அஷரங்கள் மூலம் அதாவது அ,இ.,உ,ரு,லு,எ,ஐ,ஒ,ஔஒன்பது உயிர் குறில் எழுத்துக்கள் ஒன்பது ஸ்தான மதிப்பீடுகளை குறிப்பகும். அதுபோல் க முதல் ம முடிய 25 அஷரங்கள். க வுக்கு ஒன்று என்று ஆரம்பித்து ம வுக்கு 25என்பதாகும். அவர்க்க அஷரங்கள் அதாவது எட்டு பிற எழுத்துக்கள் ய விற்கு முப்பது என தொடங்கி படிப்படியாக க40,50 என்ற ஹவிற்கு நூறு என்று எண் மதிப்பு உடையன."யுக ரவிபகணா: ரவ் யுக்ரு" என்ற அஷரவரிசைகளின் மூலம் ஒரு யுக வருஷத்திற்கு சூரியன் நாற்பத்து மூன்று லட்சத்துஇருபதாயிரம் முறை சுழல்கிறது என்று குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.(43,20000) இது போல கோள்களின் சுழற்சி காலகணக்குபோன்ற பல வானியல் அளவைகள் அஷரங்கள் மூலம் குறிக்கப்பட்டுள்ளது. நடக்கும் யுக ஆரம்பத்தில் புதன்கிழமை மேஷ ராசி சூரியோதய நேரத்தில் இலங்கை நகரத்தில் கிரகங்களின் சுழற்சியும் ஆரம்பித்தது என்று ஆரியபட்டீயம் கூறுகிறது.
ப்ரஹம தினமான கல்ப காலம் =14மனுக்கள்
1மனு =74யுகங்கள

1 கல்பம்=72*14=1008.யுகம்.குரு தினமான வியாழனன்றுதொடங்கிய கல்பகாலம் கலியுக ஆரம்பம் வரை சென்ற காலஅளவை ஆறு மனுக்களும் 27 3/4
No comments:
Post a Comment