Tuesday, March 29, 2016

தெரிந்த கோயிலும் தெரியாத வரலாறும் சிதம்பரம்



கி..பி 726முதல் 775வரை ஆண்ட நந்தி வர்மன் கோவிந்தராசப் பெருமாள் திண்ணை அளவிலமைந்த சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்தான் என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பெருமாளை தில்லை வாழ் அந்தணர்களே பூசித்தனர்.இதை பொறுகாத பிறர்கால வீரவைஷ்ணவர்கள் தில்லையில் நாட்பூசையும் திருப்பணிகளும் நடைபெறாதவாறு தொல்லை செய்தனர்.இரண்டாம் குலோத்துங்கன் திருமால் மூர்த்தியை அப்புறபடுத்தினான் என்று ஒட்டகூத்தர் கூறுகிறார்.இந்த மூர்த்தியை இராமனுஜர் கீழை திருப்பதியில் ப்ரதிஷ்டை செய்தார்.இன்றும் அங்கே உள்ளது. இப்போது தில்லையில் உள்ள கோவிந்தராசப்பெருமாள் அச்சுதராயர் பிரதிஷ்டை செய்தார்.கிருஷ்ணதேவராயர்  காலத்தில் பெருமாள் இங்கு இல்லை.
பெருமாளை பூசிக்க வைணவர்களை நியமித்ததால் அவர்கள் மெல்ல நடராசர் கோயில் இடங்களை கைப்பற்றி கொள்ள முயன்றனர். வெங்கடபதி  தேவமகாராயரின் பிரதிநிதியாக செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கி.பி.1597ல் நடராச கோயில் முதல்பிராகாரத்தில் கோவிந்தராசருக்கு தனி  கோயில் அமைக்க தொடங்கினான்.இதை தில்லை வாழ்அந்தணர்களும் பொதுமக்களும்  முன்பிருந்த இரண்டாம் பிராகாரத்திலேயே பூசை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் அவ்வதிகாரி பெருமாள் சன்னதியை நடராசர் சன்னதிக்கு அருகிலேயே அமைக்கத்தொடங்கினார். இதை எதிர்த்து தாங்கள் உயிரோடிருக்கும் வரை நடராசர் கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராச பெருமாள் கோயில் கட்ட இணங்க மாட்டோம் என்று ஒருவர் பின் ஒருவராக கோபுரத்தின் மேலேறி கீழே வீழ்ந்து உயிர் விடடனர். இவ்வாறுஇருபது பேர் தற்கொலை செய்து கொண்டனர்.இதை கண்டும் மனமிறங்காத கொண்டம நாயக்கன் கோபுரத்தின் மேலேறி தற்கொலை சேய்ய முந்துபவர்களை சுட்டு தள்ளும்படி உத்தரவிட்டான்.இவ்வாறு இருவர் சுடப்பட்டனர். இதை பொறுக்காத தில்லை வாழ் அந்தணர் அம்மையார் ஒருவர் தன் கழுத்தையறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதை தமிழ் நாட்டுக்கு சுற்றுபயணம் செய்த பிமெண்டா என்ற பாதிரியார் கொண்டம நாயக்கரின் கொடுமைகளை தனது பயணக்குறிப்பில் எழுதியுள்ளர். இதிலிருந்து தான் விடாக்கொண்டன் கொடா கொண்டன் என்றவழக்கு வந்ததோ?
நந்திவர்மனுக்கு பிறகு அச்சுதராயரும் பரதிஷ்டை செய்ததும் இந்த திண்ணைஅளவு சிறிய இடத்தில்தான்.1597ல் தான் கொண்டம நாயக்கர் தனிக்கோயில் கட்டினார்.இவருக்குப் பின் 1643ல் விசயநகர மன்னன்  மூன்றாம் சீரங்கராயன்  மேலும் விரிவுபடுத்தி புண்டரீகவல்லித் தாயார் முதலிய புதிய சன்னதிகளை அமைத்தார்.இதனால் பல பழமையான  சிவ சன்னதிகள் இடிக்கப்பட்டது. இதனால் கொந்தளிப்புற்ற பொதுமக்களும் அந்தணர்களும் மீண்டும் கோவிந்த ராசப் பெருமாளை அப்புறபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் .1862ல் வைணவரகளுக்கும் தில்லைவாழ் அந்தணர்க்கும் ஒருஉடன்பாட்டுக்கு கையெழுத்திட்டனர்.அதன்படி கோவிந்தராசப் பெருமாளுக்கு செய்துவரும் நித்திய பூசைகளைத் தவிர மற்ற பிரம்மோற்சவம் நடததுவதில்லை என்றும் நடராசருக்கு தொன்றுதொட்டுநடைபெறும் பூசைகளுக்கும் திருவிழாகளுக்கும் தடையாக இருப்பதில்லை என்றுஉறுதி கூறி நீதிமன்றத் தீர்பானது.
தில்லை பெருமான் திருவுருவம் கி.பி. 17நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம்பரத்திலிருந்து இடம் பெயர்ந்து செல்ல வேண்டியதாயிற்று.அந்தணர்கள் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து எவரும் தெரியாவண்ணம் நடமாடமற்ற புளியநதோப்பில் பெரிய புளியமர பொந்தில் பாதுகாப்பாக மூடி வைத்தனர்.தோப்புக்குசொந்தககாரர் பொந்துஅடைக்கப்பட்டிருப்பதையும் அந்த பெட்டியையும் பார்த்தார். நடராசர் மறைக்கப்பட்டிருப்பதை கண்டார். அச்சூழ் நிலையில் மூர்த்தியை எடுப்பது சரியில்லை என்று எண்ணி , கனவில் கடவுள் இங்கு பூசை செய்யுமாறு கூறியதாக ஊராருக்கு கூறி பூை சசெய்துவந்தார். முகமதியர் அச்சநிலை மாறிய பின் அந்தணர்கள் பொந்திலுள்ள சிலையை மீண்டும் எடுத்து பிரதிஷ்டை செய்ய எண்ணி சிலையைத் தேடினர்.இருளிலும் ஆண்டுகள் பலவானதாலும் மறைத்த இடத்தை அடையாளம் கா்ணமுடியாமல் தவித்தனர். மாடு மேய்க்கும்  சிறுவன்தன் எசமானர் இங்கு புளியமரததிற்கு பூசை செய்வதாக சொன்னான். அந்தணர்கள் அவரை அணுகி மீண்டும்நடராசரைப் பெற்று தில்லையில் வைத்து பூசை செய்தனர்.இதை சோழமண்டல செய்யுளிலும் உ.வே.சுவாமிநாதய்யர் எழுதிய "அம்பலபுலி" கட்டுரையிலும் இச்செய்தி உள்ளது..ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைக்கப்பட்டதாகவும்கூறுவர். இச்செய்தி திருவாரூர் செப்பேட்டிலும் உள்ளது.
கி.பி.1684ல் மராட்டிய மன்னன் குலகுருவாகிய முத்தைய்ய தீட்சதரால்குடமுழுக்கு செய்யப்பட்டதென்றும் கேரள காட்டில் மலையருகில் மரபுதரில்  மறைக்கப்பட்டதாகவும் பிறகு நடராசருக்கு தில்லையில் குடமுழுக்கு நடந்ததாகவும் கூறுவர்.
அதாவது கி.பி. (24-12-164 முதல்14-11-1886) வரை  37ஆண்டு  10மாதம் 20 நாட்கள் தில்லையில் இல்லை என்றும் பாண்டிய ந ட்டிற்கு எடுத்து செல்லப்பட்டார் எனவும் குடுமியான் மலையில் நாற்பது மாதங்களும் பின் மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின் தில்லைக்கு எடுத்து வரப்பட்டார் என்றும் எ 1606 இரத்தாட்சி வருடம் கோபால பிருதவி சுரபதியின் வேண்டுகோள்படி சாம்போசி மன்னர் சற்சபைக்கு பொன் வேய்ந்து  1684 லும் 1686லும் குடமுழுக்கு நடந்ததாக கூறுவர். இதை செய்தவர்சி  வாஜிமன்னரின்மூதத மகன் சாம்போஜி.
மீண்டும் ஔரங்கசீபுக்கு பயந்து  1686ல் நடராசப்பெருமான் திருவாரூருக்கு எடுத்துசெல்லப்பட்டார்.மீண்டும் 1696ல் கொண்டு வந்தனர். அவரை திருவாரூரில் வைத்திருந்த மண்டபம் தியாகராசர் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகில் நடராசர் மண்டபம் இன்றும் உள்ளது.அது போல் அவரை எடுத்து சென்ற மரபெட்டி தில்லை பேரம்பலத்தில்இன்றும் உள்ளது.

No comments:

Post a Comment