ஜோதிடத்தில் பார்க்கும்போது பூமியானது சிறிது நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகிறது. அதுபோல்சந்திரனும் பூமியை சுற்றுகிறது.சந்திரன் தனது பாதையில்பூமியை இரு இடங்களில் சந்திக்கின்றன.சந்திரன் மேல்நோக்கி செல்லும்போது பூமியின்கதியில் குறுக்கிடும் இடம் இராகு எனவும் சந்திரன்கீழ்நோக்கி சற்றும்போது பூமியின்கதியில் குறுக்கிடும் இடம் கேது எனவும் பெயர்பெறும். எனவே இராகவும்கேதுவும்நிழல்கிரகங்களாகும். இவை இரண்டும் பூமிக்கு மேலும் கீழும் ஒரே நேர்கோட்டில் அதாவது 180degree வித்தியாசத்தில் உள்ளதால் எதிரெதிராக அமைகின்றன.
நவகிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும்,புதனைவிட குருவும் குருவைவிட சுக்கிரனும் , சுக்கிரனை விட சந்திரனுக்கும், சந்திரனை விட சூரியனுக்கும் இவர்கள் அனைவரைவிட இராகுவும் கேதுவும் பலம் பொருந்தியவர்கள்.இதை நைசர்க்க பலம் என்பர். சந்திர சூரியரையும் பலம் இழக்கும்படியாகவும் ஔி குன்றும்படியாகவும் கட்டுபடுத்தும் ஆற்றல் இராகு கேதுவுக்கு உண்டு. இராகுவுக்கு எந்த இடமும் சொந்தமில்லை.இராகு கேது எந்த இடத்தில் இருக்கிறார்களோ, எந்த கிரகத்தினால் பார்க்க படுகின்றார்களோ, எந்த இடத்தின் சேர்க்கை பெற்றுள்ளதோ அந்தஇடத்தின் பலன்களை முழுமையாக தருவார்கள்.யோக்காரனாக இராகுவும்,மோட்சகாரனாக கேதுவும் விளங்குகிறார்கள். மேஷம்,ரிஷபம்., கடகம்., கன்னி மகரம் ஐந்திடங்களில் இராகு இருப்பது அவருக்கு கேந்திரங்களில் கிரகம் இருந்தால் ஜாதகர் சீமானாகவும் அரசருக்கு ஒப்பாகவும் இருப்பார்.
ராகு நல்ல இடத்தில் இருந்தால் நல்ல மனைவி நல்ல வேலைக்காரர்கள் ஆட்சி மற்றும் செல்வாக்கு அமையும். ஆங்கிலம்,உருது போன்ற அன்னிய மொழியில் தேர்ச்சி பெற இராகுவே காரணமாகிறார். மருந்து, இரசாயனம்,நூதன தொழில் நுட்பக்கருவிகள்,நவநாகரீகத்திற்கு இராகுவுடன் சேர்ந்த சுக்கிரனே காரணம்.அரசியல் செல்வாக்கு ஆட்சி ஆகியவற்றுக்கு இராகு அனுக்கிரகம் தேவை.மந்திரஜாலம் இந்திர ஜாலம் கண்கட்டி வித்தை போன்றவை இராகுவின் அனுகிரகத்தால் கிட்டும்.ஆனால் இராகு தோஷமுடையவராக இருந்தால் மிக கொடூர பலன் விளையும். சூரியனை விட செவ்வாயும்,செவ்வாயை விட சனியும் சனியை விட இராகுவும் கேதுவும் கொடூரமானவர்கள்.
அமரபாரதியிலிருந்து.
No comments:
Post a Comment