சுத்தமான் குங்குமம் செய்யும் முறை
முப்பதுதோலா கெட்டிஉருண்டை மஞ்சள். ஒரு தோலா என்பது பத்துகிராம். மஞ்சளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.சம எடை எலுமிச்சை சாறு கொட்டையில்லாமல் எடுக்கவும். இதில் முப்பது கிராம் வெண்காரமும் படிகாரமும் போடவும்.நன்றாக கரைந்த பின்மஞ்சள் துண்டுகளை சேர்த்து ஒரு நாளில் இரண்டு மூன்று முறை கிளறி நிழலில் காயவைக்கவும்.பின் இடித்து வஸ்திர காயம் செய்யவும்.
No comments:
Post a Comment