Monday, March 7, 2016

ஜோதிஷம் தொடர்ச்சி


நவீன ஷேத்திர கணித கிரந்தமாகிய யூக்ளிட் நடுவில் உள்ள 7,8,9,பாகங்கள்காணவில்லை. ஆனால் ஸமிஸ்கிரத்திலுள்ள  பன்னிரண்டு புத்தகங களும் நமக்குகிடைத்துள்ளன. பாஸ்கராசாரியாருக்கும் முந்தியவராகமிஹிரர்  எமுதிய ப்ருஹத் ஸம்ருதை ,இது  ஜாதகம்  சகல சாஸ்திரங்கள் மற்றும் விஞ்ஞானத்திற்கு digest.
பூமியை சூரியன் சுற்றுகிறது என மேல் நாட்டுகாரர்கள் நம்பினர்.இதனைமறுதது ஆராய்தவர்களை நெருப்பு வைத்து கொன்றனர்.. ஆனால் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை "லாகவ  , கௌரவ நியாயம் என்று  பெயரில் ஆரியபட்டர் விவரித்திருக்கிறார். லகு என்பது  சிறியது லேசானது என்றுபொருள். லகுவிற்கு எதிர் பதம் கனம் .குரு கனமானது பெரியது.குருவான  சூரியன் தான் பெரியது.லகு பூமி ..குருவை லகு பிரதஷணம் செய்யும்என்பதே லாவக  கௌரவ நியாயம்.அதன்படி சூரியனைதான் பூமி சுற்றிவரவேண்டும் என்கிறார்.
ஸம்ஹிதா ஸ்கந்தம் என்ற பிரிவில் ஜலம் எங்கே ஓடுகிறது, பூமிக்குள் எங்கே நதியாக எங்கே போகிறது,உள்ளே ஜலம் இருப்பதற்கு  மேலே என்னஅடையாளம் இருக்கும் ஆகியவை குறிப்பிடபட்டுள்ளது. வாசனை திரவியங்கள்செய்யும் முறை ,வீடுகட்டும் அளவு., சகுன சாஸ்திரம் நிமித்த சாஸ்திரம் இதில்சொல்லப்பட்டுள்ளது. பஷிவலமிருந்து இடம்போனால் இன்ன பலன் இன்ன பஷி கத்தினால் இன்ன விளைவுஎன்று சகுன சாஸ்திரம் கூறும்.

கணித்தை யும் கிரககதிகளையும் சொல்வது ஹோரை அல்லது ஜாதகம்.நிமிதம் என்பது வரபோவதை ஏதோ ஒரு தினுசில் அடையாளம் காட்டுவதற்கு பொது பெயர். அதில் சகுனம் ஒருவகை. பஷிகளால் ஏற்படும் நிமித்தங்கள் எனபடும்.உலகத்தில் ஒன்றுககொன்று சம்ந்தமில்லா வஸ்து ஒன்றும் இல்லை.உலகத்தில்  நடக்கின்ற எல்லாம் ஒரே கணக்காக நடக்கின்றன. கைரேகை, ஆரூடம், கிரகநிலை  முதலியஎல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. பஷி வலமிருந்து இடம் போனால் இன்ன பலன்.இன்னபஷி கத்தினால் இன்ன விளைவு ஏற்படும்என்று சகுனசாஸ்திரம்கூறும்.

கணிதத்தையும் கிரககதிகளையும் சொல்லுவது ஸித்தாந்தம் தனித்தனியாக மனிதனுடைய சுகதுக்க பலனை சொல்வது  "ஹோரை அல்லது ஜாதகம்.வராஹமிஹிரரின் ப்ருஷத் ஸம்ஹிதையில்இவர் நியூடனுக்குமுன்பு சூரியசித்தாந்தத்தில்  ஆரம்பத்திலேயே பூமி விழாமல்லிருக்கஅதன் ஆகர்ண சக்தி இருப்பதை கூறியுள்ளார். ஆதி சங்கரரும் மேலே போகும் பிராணனை  அபானம்  கிழே இழுப்பதாக கூறியுள்ளார்.
ஸ்ருஸ்டி தொடக்கமான கல்பாரம்பத்தில் எல்லா கிருஹங்களும் ஒரே நேர்கோட்டில்இருந்தன.கலம் ஆகஆக  கொஞ்சங்கொஞ்சமாக மாறிக் கொண்டேவருகின்றன. மற்றொரு  கல்பராரம ம்பத்திலும் மறுபடியும்  நேராக வந்துவிடும்.நாம் செய்யும்  கர்மாக்களின்முதலில் சொலலம் ஸங்கலபத்தில் பிரபஞ்சவர்ணணை கால அளவு என்றெல்லாம்  சொல்லபடுகின்ற அவ்வளவும் ஜ்யோதிஷ விஷயம்தான். பூமியின் ஆகர்ஷணம் மட்டுமல்ல பூமி சுற்றுவதையும்  ஆர்யபட்டர்,வராகமிஹிரர் சொல்லியிருக்கிறார்கள். 

No comments:

Post a Comment