Thursday, March 17, 2016

பழந்தமிழகத்தில் கணிதம் தொடர்ச்சி


முக்காலக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் 
அக்காலரைக் கண்டஞ்சாமுன்    விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன்கச்ச
ஒருமாவின் கீழரையின் றோது
இந்த தனிபாடலில் காளமேகப் புலவர் முக்கால், அரை  என்பதை கூறியுள்ளார்.
நளன் கால், இருமா, மாகாணி என்ற கணிதச் சொற்களைக் கொண்டு உபதேசம் செய்கிறார்.
அதாவது வயதானபின்மூன்று கால்களைக் கொண்டு  நடப்பதற்கு முன்பே, நரை விழத் தொடங்கும் முன்பே ., காலனைக் கண்டு அஞ்சும்  முன்பே மாகாணி (.'சுடலை' ) க்கு போவதற்கு முன்பே விக்கி இருமுவதற்கு  முன்பே ஒப்பற்ற மாமரத்தின் கீழ்யிருந்துஅருளும் ஏகாம்பர நாதனை பாடி பரவுக என்பதே பொருள்.

நூற்று பத்தாயிரம் பெறினும்  நாற்கிலை
நாற்றிங்கள் நாளுக்கு நைந்துவிடும் மாற்றலரைப்  நாலாறு தேர் ஓடிவிட்டதாக நளன்
பொன்ற பொருதடக்கைபோர்வேல்அகளங்கா என்றும் கிழியாது என் பாட்டு
என்று ஓளவை 100 * 1000 என்பதை கூறியுள்ளார்.
நளன் தேரோட்டுவதில் வல்லவன்  என்பதைபுகழேந்திப் புலவர்
மேலாடை வீழ்ந்தது  எடு என்றால்
அவ்வளவில் நாலாறு காதம் கடந்ததே
மேலாடை விழுந்ததை எடு என்று அரசர் சொல்ல அதற்குள் நாலாறு தேர் ஓடிவிட்டதாக நளன் சொல்கிறான்.   4*6= 24  காதம் கடந்து விட்டதாம்.

திருமிழிசை ஆழ்வார் ஐந்து  என்ற எண் கொண்ட  பாடல்
ஐந்து மைந்து மைந்துமாகி அல்லல
வற்றுளாயுமாய்
ஐந்து மூன்று மென்றுமாகி நின்றவாதிதேவனே
ஐந்து மைந்து மைந்துமாகி அந்தரந்தணைத்து நின்றம்
ஐந்து மைந்துமாய் நின்றனை யார்காண வல்லீரே
இதில் ஒன்பது  ஐந்துகளை கூறுகிறார். முதல் ஐந்து பஞ்ச பூதம்.. இரண்டாம் ஐந்து பஞ்ச ஞானயந்திரங்கள் மெய், வாய்.,கண்,மூக்கு., செவி. அடுத்து பஞ்ச கர்மேந்திரங்கள் நாக்கு..,கை.., கால் குதம்,குறியைக் குறிக்கும். அடுத்து பிராண,அபாண., வியான.,உதான., சமான என்ற பஞ்ச ப்ராணனைக் குறிக்கும்.பிறகு வரும்  மூன்று சித்தம், புத்தி, அகங்காரத்தை குறிக்கும்.அடுத்துவரும்  ஒன்று மனதையும் ஆக இவ்விரண்டுஅடிகளினும் நம்முள் அடங்கியிருக்கும் இருபத்து நான்கு தத்துவங்களையும் சொல்லி அவையே  முழுமுதற்கடவுள் என்கிறார்.

No comments:

Post a Comment